ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

குஜராத் முதல்வர் மோடியின் உண்ணாவிரதமும் இந்திய மக்களின் நினைவுத்திறனும்

இந்திய நாட்டின் அமைதி வேண்டியும், மத நல்லிணக்கத்துக்காகவும் மூன்று நாள் உண்ணாவிரதத்தை குஜராத் முதல்வர் திருவாளர் நரேந்திர மோடி அகமதாபாத் குஜராத் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று துவக்கியுள்ளார். குஜராத் கலவரம் சம்பந்தமான வழக்குகள் குஜராத் மாநிலத்திற்கு மாற்றப்படும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனே மேற்குறிப்பிட்ட ‘’உன்னத’’ நோக்கிற்காக இந்த உண்ணாவிரதத்தை நரேந்திர மோடி துவக்கியுள்ளார். அடுத்து மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் அல்லது மத்திய ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்ற நோக்கில் அ.தி.மு.க. உள்ளிட்ட மாநிலக் கடசிகளும் பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்து மோடியின் இந்த உண்ணாவிரதத்தை உளமாற வாழ்த்தி வரவேற்றுள்ளுனர். காங்கிரஸ் கட்சியோ நரேந்திர மோடியின் இந்த அதிர்ச்சிகரமான அதிரடி நடவடிக்கையைக் கண்டு சிறிது சலசலப்புடன் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சங்கர் சிங் வகேலா தலைமையில் ஒரு போட்டி உண்ணாவிரதத்தை அறிவித்து நடத்திக் கொண்டுள்ளது.

கம்யூனிஸ்டுகளின் பாதையில் வீசியெறியப் பட்டிருக்கும் எள்ளும் கடுகும்

[கம்யூனிச இயக்கத்தின் இன்றைய தேக்கநிலையைக் கடந்து சமூக மாற்றத்தை நோக்கிப் பயணிக்க விரும்பும் - கட்சி அரசியலின் எல்லை தாண்டி கம்யூனிச அரசியல் வழியில் சிந்திக்க முடிந்த - உண்மையான கம்யூனிசத் தோழர்களின் சிந்தனைக்கும் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கும்]

நூற்று அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் மார்க்ஸ் சொன்னார்: கம்யூனிச பூதம் ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது என்று. அன்றிலிருந்து இன்றுவரை அந்தக் கம்யூனிச பூதத்திடமிருந்து முதலாளித்துவத்தைக் காப்பாற்ற முதலாளித்துவப் பேயோட்டிகள் பலர் தோன்றி தங்களுக்குத் தெரிந்த வித்தைகளையெல்லாம் பயன்படுத்தி அதை விரட்ட முயற்சித்துக் கொண்டுள்ளனர்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

பெட்ரோல் விலை உயர்வு : ஆதாயம் அனைத்தும் முதலாளிகளுக்கே!


இன்று (16.09.2011) பெட்ரோல் விலை உயர்வை ( தனியார் கம்பனி நிர்ணயம் செய்ததை) அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வு சாதாரண மக்களுக்கு பேருடியாக அவர்களின் பட்ஜெட்டில் இறங்கியுள்ளது. தனியார் கார், பைக் கம்பனிகள்  அது துவங்குவதில் இருந்து குறைந்த விலையில்  நிலம், கச்சா பொருள் , குறைந்த கூலி, இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களையும் மீறும் அதிகாரம், போலிஷ் பாதுகாப்பு, குறைந்த வட்டிக்கு லோன் ஆகிய அனைத்து சலுகைகளையும் வாரி வழங்குகிறது அரசு . 1  லட்சத்திற்கு கார் என அறிவித்து அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் தள்ளாடுகிறது. தவணை முறையில் கடன் கொடுத்து கண்ணுக்கு தெரியாமல் அதிக வட்டியை பைனான்ஸ் கம்பனிகள் பிடுங்குகின்றன. அரசும் பொது போக்குவரத்தை தன்னால் முடிந்த மட்டும் குறைத்து வருகிறது, கட்டணங்களை மறைமுகமாக ஏற்றி வருகிறது. 

புதன், 14 செப்டம்பர், 2011

வட்டப் பாதையும் வர்க்கப் பாதையும்

ஜாதி உணர்வுகள் 
ஊட்டி வளர்க்கும் - ஒரு
ஜாதி விடுதலைப் போராட்டம்.

சனி, 10 செப்டம்பர், 2011

ஊழல்வாதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் , சாதாரண மக்களுக்கு வெடிகுண்டும்

உலகிலையே அதிகம் ஊழல் செய்யும் நமது அரசியல்வாதிகளுக்கு, மூன்று அடுக்கு, நான்கு அடுக்கு ஒய் , இசட் , இசட் பிளஸ் பாதுகாப்பும் ,பற்றாக்குறைக்கு கருப்பு பூனைப்படை , குண்டு துளைக்காத வாகனகங்கள் ,தனி விமானங்கள்  என்று அவர்கள் ஊழல் செய்வதற்கு அனைத்து பாதுகாப்பையும் இந்த அரசுகள் செய்து கொடுக்கின்றன.அப்படியே ஊழல் , கொலை , நில அபகரிப்பு போன்ற வழக்குகளில் கைதானால்  கூட ஜெயிலிலும்  சொகுசு வாழ்க்கை , பாதுகாப்பு வளையங்கள் சூழவே வளம் வருகிறார்கள். ஏனெனில் இவர்கள் பணம் ,அதிகாரம் படைத்தவர்கள், சூழ்ச்சிகாரர்கள், காரியவாதிகள், சுரண்டல்வாதிகள். முதலாளிகள் , முதலாளிகளின் அடிவருடிகள்.

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

தற்கொலை செய்து கொள்வது ஒரு கோழைத்தனம் - பகத்சிங்



விசாரணை என்ற பெயரில் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய சிறப்பு நீதிமன்ற நாடகத்தில் விசாரணைக் காட்சிகள் முடிவடைந்தன.  புரட்சியாளர்கள் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தீர்ப்புக்காக காத்திருந்தனர்.  ஒரு நாள் தோழர்கள் சிறையில் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்ட போது யார், யாருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்ற விவாதம் நடந்தது.  தனக்கு  ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று சுகதேவ் எதிர்பார்த்தார்.  ஆனால் ஆயுள் தண்டனைக் கைதியாக 20 ஆண்டுகள் சிறையில் காலம் கழிப்பதை அவர் விரும்பவில்லை.  இது குறித்து அவர் சிறைக்குள் பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார்.  
சுகதேவ் தனது கடிதத்தில் தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருந்தார்.  ஒன்று, தனக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் ; இல்லாவிட்டால் விடுதலை செய்யப்பட வேண்டும்.  இரண்டுக்கும் இடைப்பட்ட தண்டனை எதிலும் தனக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறியிருந்தார்.  

அக்கடிதத்திற்கு பகத்சிங் பின்வரும் பதில் கடிதம் எழுதினார். 
............................................................................................................................................

வியாழன், 8 செப்டம்பர், 2011

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் மதுரை , திருநெல்வேலி, திருச்சி, கடலூர், சேலம் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது.




108 ஆம்புலன்ஸ் சேவையை ஏற்று நடத்தவும்  , அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் பெறும் விகிதத்தில் சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று   அரசிடம்   கோரிக்கைகளை வைத்தும் , கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிகப் பணிநீக்க உத்தரவினை திரும்பப் பெறுதல், தன்னிச்சையாகப் பழிவாங்கும்  நோக்குடன் இடமாற்ற உத்தரவுகள் வழங்குவதையும் உள்நோக்குடன் குற்றச்சாட்டுக் குறிப்பாணைகள் வழங்கும் போக்கினையும்  கைவிடுதல், 8 மணிநேரத்திற்கு அதிகமாகச் செய்யும் வேலைக்கு ஓவர்டைம் ஊதியம் வழங்குதல், அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்பவர்களுக்கு இரட்டைச் சம்பளமோ அல்லது மாற்று விடுப்போ வழங்குதல், தன்னிச்சையாகக் கடந்த காலங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளரைப் பணித்தொடர்ச்சியுடன் மீண்டும் வேலைக்கு எடுத்தல், வாகனத்தைத் தூய்மையாகவும் உரியமுறையிலும் பராமரிப்பதற்கும், ஊழியர்கள் ஓய்வு நேரத்தில் தங்கவும் உரிய ஏற்பாடுகள் செய்தல். போன்ற கோரிக்கைகளை வழியுறுத்தி 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்ப்பாக தமிழகம் முழுவதும் 25  க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் திருச்சி, மதுரை , திருநெல்வேலி, கடலூர், சேலம் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் இன்று( 8 .9 .2011 ) காலை 10 மணி முதல் மாலை 5  மணி  உண்ணாவிரதம் நடைபெற்றது.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

108 ஆம்புலன்ஸ் சேவையை அரசே ஏற்று நடத்தக் கோரி மாநிலம் முழுவதும் உண்ணாவிரதம்


108 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவைத் திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு பிரபலமான திட்டமாகும். கல்வி, பொதுமருத்துவம் போன்றவை ஒரு மக்கள் நல அரசின் அதிமுக்கிய பணிகளாகும். அதில் பொதுமருத்துவம் சார்ந்த இந்த ஆம்புலன்ஸ் சேவை அரசாங்கத்தால் நடத்தப்படுவதாகவே பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த சேவை முழுமையாக அரசால் நடத்தப்படவில்லை. இந்த ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து அதனை ஜீ.வி.கே. என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து தமிழக அரசு  இந்த சேவையை நடத்துகிறது. அந்த நிறுவனம் இந்த சேவையில் பணிபுரியும் கால் சென்டர், மருத்துவ தொழில் நுட்பம், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆகிய மூன்று பிரிவினைச் சேர்ந்தவர்களுக்கும் எவ்வளவு குறைந்த ஊதியம் கொடுத்து வேலை வாங்க முடியுமோ அவ்வளவு குறைந்த ஊதியத்தினை வழங்கி வேலை வாங்குகிறது. 

திங்கள், 5 செப்டம்பர், 2011

மார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9



சீனா முழுவதும் ஏகாதிபத்திய சுரண்டலின் வேட்டை காடாக 19  நூற்றாண்டில் இருந்தது , ஜப்பானின் ஏகாதிபத்தியம் தலைவிரித்தாடியது. நிலபிரப்புகளின் சுரண்டலை தட்டி கேட்க முடியாதவர்களாய் அப்படி கேட்டால் மரணம் பரிசாக கிடைக்கும் என்ற நிலையில் கோடிக்காணக்கான மக்கள்   , பசி , பட்டினி என்று  துன்பத்தின் கோரப்பிடியில் சிக்கி துவண்டு கொண்டு இருந்தனர். அப்போது தான் ரஷியாவில் சோஷலிச அரசு தனது இளம் பிராயத்தில் இருந்து வளர்ந்து கொண்டு இருந்தது. சீனா முழுவதும் முதலாளித்துவம் முழுமையாக  வளராத நிலையில் தொழிலாளர்கள் குறைந்த பகுதியினறாய் இருந்த படியினால்  , பண்ணையடிமைகளாக , குத்தகை விவசாயிகளாக , சிறு விவசாயிகளாக சிதறுண்ட கிடந்த சூழ்நிலையில் மார்க்சிய வழிகாட்டுதலில் சிவப்பு வானில் உதித்த நட்சத்தரமாய் சீனாவிற்கு விடியலாய் , வழிகாட்டியவர், வழிநடத்தியவர்  தோழர்.மாவோ.

முகப்பு

புதிய பதிவுகள்