சனி, 15 அக்டோபர், 2011

உலகின் உன்னத வர்க்கம் பாட்டாளி வர்க்கமே



மனித வரலாற்றில் இதுவரை தோன்றிய வர்க்கங்கள் யாவிலும் மிக உன்னதமான வர்க்கம் பாட்டாளி வர்க்கமேயாகும் என்று மார்க்ஸ்  கூறினார். முதலாளித்துவ வர்க்கம் இக்கூற்றை ஏற்காது. சுரண்டல் , அடக்குமுறை கொண்ட வர்க்கம் , ஏமாற்றும் பொய்யும் வஞ்சகமும் சூதும் கொண்ட வர்க்கம் அது . விஞ்ஞான ரீதியான ஆய்வை அவ்வர்க்கம் கொண்டிருக்கவில்லை. தமது அதிகாரத்தை நிலைநிறுத்துவது ஒன்றே அதன் குறிக்கோள். 

பாட்டாளி வர்க்கம் உண்மையைக் கூறும் வர்க்கம் , மூடி மறைக்க எதுவுமில்லாத வர்க்கம் எதற்கும் வரலாற்று விஞ்ஞான ரீதியான விளக்கமளிக்கும் வர்க்கம். (ஸ்தாபன ரீதியாக ஒன்றிணைந்த வர்க்கம் ) மனித இனத்தின் துன்பங்கள் அனைத்திற்கும் விடுதலை தரக்கூடிய தேவை பாட்டாளி வர்க்கத்திற்கே உண்டு. புரட்சிகரமாக முன்னேறிய வர்க்கம் இதுவே. சமுதாயத்தில் உற்பத்திச் செயல்களே முதலிடம் பெறுகின்றன. இதில் முழுதாக ஈடுபட்டிருப்பவர் பாட்டாளிகளே. சமுதாயத்தில் முன்னேறிய வழிமுறைகளைக் கையாண்டு வேலைகளை செய்பவர்கள் இவர்களே . இதனால் முன்னேறிய கருத்தும் சிந்தனையும் உள்ள வர்க்கமும் இதுவேயாகும்.
சமுதாயம் ஆன்மீக ரீதியில் வளர்ச்சி பெற வேண்டும், வளர்ச்சி பெறுகிறது என்று முதலாத்துவ வர்க்கம் கூறுகிறது ; நம்புகிறது. இது கருத்து முதல்வாத கண்ணோட்டமாகும் . பாட்டாளி வர்க்கம்   மார்க்சிய   சிந்தனைகளை , மகத்தான இயங்கியல் வாத தத்துவங்களை தம் வர்க்க தத்துவமாக கொண்டது. 

முதலாளித்துவ சொத்துடமை வர்க்கம் சுரண்டலை நியாயமானதாகக் கற்பிக்கும் வர்க்கம். விதி , சாத்திரம் , (அதிர்ஷ்டம் போன்ற மூட நம்பிக்கைகளை பரப்பி வாழ முயலும் வர்க்கம் ), சொத்துடமையிலிருந்து விலகியிருப்பதால் பாட்டாளி வர்க்கத்திற்கு இத்தனை பொய் , ஏமாற்று அவசியமற்றதாகும். சுயநலமற்ற வர்க்கமும் பாட்டாளி வர்க்கமே. 


ஒன்றாக இணைத்து ஒற்றுமையாக வேலை செய்வதன் மூலம் கூட்டுறவு கொண்ட வர்க்கமும் பாட்டாளி வர்க்கமே.’எனது’ என்பதை விட்டு 'எமது ' என்று குரல் எழுப்பும் வர்க்கம் பாட்டாளி வர்க்கமே. எமது சம்பளத்தை உயர்த்து , தொழிற்சாலைகளைத் தேசீயமயமாக்கு . அதிகாரம் தொழிலாளர்களுக்கே, உலகம் உழைக்கும் வர்க்கத்தவர்க்கே என்ற பொதுமைப் பண்பாடு வளர்க்கும் வர்க்கம் பாட்டாளி வர்க்கமே. 

பாட்டாளி வர்க்கம் உற்பத்தியில் ஒன்றிணைந்து செயற்படுவதால் இனம் , சாதி, மொழி பேதங்களிலிருந்து விடுபட்டு சர்வதேசிய உணர்வை வளர்க்கும் வர்க்கமுமாகிறது. இவற்றால் பாட்டாளி வர்க்கமே இச்சமுதாய அமைப்பிலிருந்து வர்க்கங்கள் யாவிலும் உன்னதமான வர்க்கம்;மற்றவர்களுக்கு விடுதலை தேடி தரும் வர்க்கமுமாகும்.



(நன்றி : குமரன் தொகுப்பு) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்