சனி, 19 நவம்பர், 2011

அமெரிக்க அரசின் கொடூர ஒடுக்குமுறையைத் தாண்டியும் தொடர்கிறது வால் ஸ்ட்ரீட் முற்றுகை

அமெரிக்க அரசின் முதலாளித்துவ கொள்ளைக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டம் அதுவாகவே நீர்த்து போகும் என்று கனவு கண்டது அமெரிக்க அரசு , ஆனால் வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்திற்கு நாளுக்கு நாள் அமெரிக்கவில்  மட்டுமல்ல உலகம் முழுவதுமே ஆதரவு பெருகி கொண்டே வருகிறது. போராட்டம் தீவிரமடைந்து அமெரிக்க அரசையே ஆட்டம் காண வைக்கிறது. போராட்டக்காரர்களை காவல் துறையினர் , பலவகையிலும் துன்புறுத்த ஆரம்பித்துள்ளனர். பூங்காகளில் தங்கியிருந்த மக்கள்  வலுகட்டாயமாக காவல் துறையினரால்  வெளியேற்றப்படுகின்றனர்.


போராட்டத்திற்கு தலைமை தங்குபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் . இவ்விதம் மக்கள் போராட்டத்தை காவல் துறையை வைத்து நசுக்க அமெரிக்க அரசு முயற்சி செய்கிறது. ஆனால் அதையும் மீறி மக்கள் போராட்டம் பல்வேறு வடிவங்களில் பலத்த ஆதரவை பெற்று நடைபெற்று கொண்டுள்ளது. இது அமெரிக்க முதலாளித்தவ அரசு தூக்கி எறியப்படும் வரை தொடர்ந்து நடைபெறும் என்பது உறுதி. அமெரிக்காவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. 

1 கருத்து:

  1. போராட்டம் ஒரு முறை தொடங்கினால் போதும், எத்தனை முறை அடக்க நினைத்தாலும், அடக்க முடியாது... இன்குலாப் ஜிந்தாபாத்

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்