பேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை
சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால்
ஊழல் மற்றும் லஞ்சம் வாங்குவதிலும் மனித உரிமைகளை மீறுவதிலும் முன்னோடியாகவும் ,
அரசின் அடியாட்களாகவும் உள்ள காவல் துறையினர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது
என்று காவல் துறைக்கு ராணுவத்தில் உள்ளதை போலவே சிறப்பு கேண்டின்களை திறக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு ரூபாய்.47 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு என்று காவல் துறைக்கு அள்ளி கொடுக்கிறார்,
ஏனெனில் மக்கள் அநீதிகெதிராக திரண்டெளுந்தால்
அவர்களை அரசின் மீது விசுவாசத்தோடு காவல் துறை அடித்து நொறுக்கும் அல்லவா?
இதில் ஒரு பானை
சோற்றிற்கு ஒரு சோறு பதமாக தமிழக காவல்துறையை சேர்ந்தவர்களால் திருகோவிலூர் அருகேயுள்ள
தி.மண்டபம் என்ற கிராமத்தை சேர்ந்த இருளர் இனப்பெண்கள் நால்வர் கொடூரமாக பாலியல்
பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் ஒரு பெண் 3 மாத கர்ப்பிணி , மற்றொரு பெண்
17 வயதேயான இளவர் ஆவர். இவ்வாறு தமிழக காவல் துறை காக்கி சட்டை போட்ட ரவுடிகளின்
கூடாரமாகவே உள்ளது.
சட்டத்தின்
முன் அனைவரும் சமம் என்று இந்திய அரசு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பீற்றிக்கொள்கிறது,
ஆனால் இங்கு சாதாரண மக்கள் அதிகார வர்க்கத்தாலும், காவல்துறையாலும் மிருகங்களை
விட கேவலமாக நடத்தப்படுகிறார்கள். சாதாரண ஏழை பெண்கள் மிருகத்தனமான பலாத்காரத்திற்கு
ஆளாக்கப்படுகிறார்கள். ஆனால் காவல் துறையினர் என்ன தவறுகள் செய்தாலும் அதற்கு எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக 20 வருடங்கள்
போராட வேண்டி இருந்தது. அந்த சுவடு மறையும் முன்பே அடுத்த வன்முறையை தொடக்கி விட்டது
காவல் துறை.
இவ்வாறு தொடர்ந்து சாதாரண
மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக அனைவரும் ஓன்று திரண்டு குரல் கொடுக்க
வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக