lawyers forum for social movement(LFSM) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
lawyers forum for social movement(LFSM) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 மார்ச், 2012

அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தந்த பதில்கள்


பஸ் கட்டண உயர்விற்கு பிறகு பயணம் என்பதே அவ்வளவு இனிமையானதாக சாதாரண மக்களுக்கு இல்லாமல் போயுள்ள இந்த சூழ்நிலையில் பின்வரும் இடர்களையும் சாதாரண மக்கள் சந்திக்க வேண்டி உள்ளது. அவை ;
அரசு பேருந்துகள்:
1.சரியான மாற்றுப் பேருந்து வசதி இல்லை.
2.பேருந்துகள் சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை.
3. தொலைதூரப்பேருந்துகளில் இடையில் இறங்கும் பயணிகளை ஏற்ற மறுப்பது.
4. இரண்டு ஓட்டுனர்களை பணியில் அமர்த்தாதது.

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

அண்ணா ஹசாரேவை கைது செய்ததன் மூலம்அம்பலமாகி போன மத்திய அரசின் பாசிச முகம்

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டுவரவேண்டும் என்று அடுக்கடுக்கான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அதற்கு ஆதரவு அலை நாளுக்கு நாள் பெருகி
 கொண்டே வருகிறது. ஆனாலும் அப்படி ஒரு மசோதா வருவதை ஆளும் காங்கிரஸ் அரசு விரும்பவில்லை . பாராளமன்றத்தில் மிகவும் வீக்கான லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறது . இதனை முறியடிக்க கடைசிக்கட்டமாக சாகும் வரை உண்ணாவிரதத்தை அண்ணா ஹஜாரே அறிவித்தார். அதற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வந்த வேளையில் மத்தியில்  ஆளும் காங்கிரஸ் அரசு அண்ணா ஹசாரேவை கைது  செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. அங்கும் உண்ணாவிரத்தை தொடர்ந்து வருகிறார் அண்ணா . ஜனநாயக சக்திகளின் குரல்வலையை நெறிக்கும் செயலை ஆளும் மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இது ஹசாரேவை கைது செய்ததன் மூலம் மதிய அரசு தனது கொடூரமான பாசிச முகத்தை அனைவருக்கும் காட்டியுள்ளது. ஆளும் மத்திய அரசின் ஜனநாயக விரோத  போக்குகளை கண்டிப்போம். சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் நியாயமான போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.

செவ்வாய், 5 ஜூலை, 2011

காட்டுமிராண்டி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்! ஏழைகளின் உயிர் என்ன அவ்வளவு மலிவா ?


சென்னை தீவுத்  திடல் அருகே உள்ள ராணுவ குடியிருப்பிற்கு  ஞாயிறு (03 .07 .2011 )  அன்று  பழம் பறிப்பதற்காக தீவு திடல் இந்திரா நகர்  குமார் - கலைவாணி தம்பதியின் இரண்டாவது மகனான 8 ம் வகுப்பு  படித்து வந்த தில்ஷான் என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். சிறுவன் என்று பார்க்காமல் அதுவும் பட்டபகலில்  காஷ்மீர், வடகிழக்கு இந்தியாவில் கேட்பாரில்லாமல் மனித உயிரை வேட்டையாடும் ராணுவ உடைதரித்த காட்டுமிராண்டிகளில்  ஒருவன்  அந்த சிறுவனை  தலையில் சுட்டு கொன்றுள்ளான். தமிழக அரசோ சுட்டு கொன்ற அந்த ராணுவ வீரனை பிடிக்காமல் இந்த கொலைக்கு நடவடிக்கை எடுக்க போராடிய பாதிக்கப்பட்ட  மக்களை அடித்து விரட்டியுள்ளது.   அரசின் ராணுவமும், போலீஸும் உழைக்கும்  மக்களை இரண்டாம் கட்ட குடி மக்களாகவே நடத்துகிறது. இந்த கொடூரமான கொலைக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென சமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு , தமிழ்நாடு (LFSM ) கேட்டுக்கொள்கிறது.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

ஐ.பி.எல்லின் ஏலத்தை மிஞ்சியது பார்கவுன்சிலின் சேர்மன் பதவி


பார்கவுன்சிலின்  உறுப்பினர் தேர்தல் சென்ற மாதம் நடந்து முடிந்தது. உயர் நீதிமன்றம் பல கடுமையான கட்டுப்பாடுகளை  விதித்திருந்தும் பணமும் ,சரக்கும்,பிரியாணியும் ஆறாக பாய்ந்தது. நாகர்கோவில்  போன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் மொத்தமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டன. உயர்நீதிமன்றம் தேர்தலில் முறைகேடுகள் நடந்த இடங்களின் வாக்குகளை செல்லாததாக்கியது. தற்போது 25  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் இருந்து சேர்மன் தேர்வு நடைபெறபோகிறது. அந்த தேர்வுக்கு தான் குதிரைப்பேரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த ஏலத்தின் ஆரம்ப பேரம் ரூபாய்.50  ௦லட்சம் ஆகும். இப்படி விலைபோகும் உறுப்பினர்களை கொண்டு நமது பார் கவுன்சில் இயங்குமானால் அது ஒட்டுமொத்த நீத்துறையையே கடும் ஊழலுக்கு இறையாக்கி விடும். மக்கள் கடைசி புகலிடமாக தான் நீதிமன்றங்களை நாடிவருகிறார்கள் அந்த நீதிமன்றங்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். நீதித்துறையில் நடைபெறும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுப்போம்.  ஊழலுக்கு எதிராக கரம் கோர்ப்போம்.  


ஞாயிறு, 20 மார்ச், 2011

மார்ச் 23

தியாகி பகத்சிங்கின் நினைவு நாளை அனுசரிப்போம்



பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவான அனைத்து வகை ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல்களிலிருந்தான விடுதலையை காங்கிரஸ் தலைமையிலான விடுதலைப் போராட்டம் சாதிக்கத் தவறிவிட்டது. வெள்ளை முதலாளிகள் இருந்த இடத்தில் கறுப்பு முதலாளிகள் அமர்ந்து தங்களது சுரண்டல் வேட்டையை தொடர அது வழிவகுத்தது. இந்நிலையில் அனைத்து முதலாளித்துவ சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்பி உருவாக்கப்பட்ட பகத்சிங்கின் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக்கன் ஆர்மி ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக மலர்ந்தது, உழைக்கும் மக்களின் ஒட்டுமொத்த விடுதலையை சாதிப்பதற்க்கு முன்பே வெள்ளை ராணுவம் பகத்சிங் மற்றும் அவர்களது தோழர்களின் இன்னுயிரை கொள்ளை கொண்டு விட்டது. தியாகி பகத்சிங் விட்ட பணி தொடர இந்தியாவில் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்டவர்கள் தவறி விட்டனர். தொடரும் சுரண்டலை முடிவுக்கு கொண்டு வர அவரது தியாகத் திருத்தடங்களில் நடை பயில்வோம்.

 “மனிதனுக்காக சட்டம் ஒழுங்கேயொழிய, சட்டம் ஒழுங்கிற்காக மனிதன் அல்ல”
                                                                                                                       - தியாகி பகத்சிங்.
____________________________________________________________

             சமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு,
தமிழ்நாடு(LFSM)
Lawyers Forum for Social Movement, Tamilnadu.
              
தொடர்புக்கு:
சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் மு. கதிரேசன் செல்: 98434 64246
மதுரை கிளை : த.சிவக்குமார், வழக்கறிஞர் செல். 9443080634,
                               K.K. சாமி, வழக்கறிஞர், செல். 99438 13105

புதன், 16 பிப்ரவரி, 2011

கருப்பு தினம் - பிப்ரவரி 19 ,


2009  ல் விழுந்த அடியின் காயம்  வேண்டுமானால் ஆறிப்போயிருக்கலாம் ஆனால் அந்த அவமானம் மறந்து போயிருக்குமேயானால்  நாம்  மனிதர்கள்  என்று சொல்வதற்கு  கூட  தகுதி ஆற்றவர்களாகி விடுவோம்காவல் துறையினரால்  கட்டவிழ்த்து விடப்பட்ட    தாக்குதல்   எதேச்சையான விஷயம் அல்ல. அது  ஆளும் அரசாங்கத்தின் உச்சகட்ட கோரதாண்டவம் அரசு என்றால் காவல் துறையும் ,ராணுவமும் தான் நீதி மன்றங்களும் ,நீதிபதிகளும் , வழக்கறிங்கர்களும் காவல் துறையின் கட்டுப்பட்டவர்கள், என்று நமக்கு கண்முன்னே நடத்தி காட்டிய நிகழ்ச்சி. அதுமட்டுமல்ல ஒட்டுமொத்த நீதி துறைக்கு எதிராக நடந்த இந்த தாக்குதலில் மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும்  வழக்கு தொடுத்து தீர்வு தேடித்தரும் வழக்கறிங்கர்கள்  தங்கள் சமுதாய மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு ஒரு கடைநிலை காவல் துறையினரை கூட சட்டத்தின் மூலம் தண்டிக்க  முடியவில்லை என்பது மிகவும் அவமானகரமான விஷயம் ஆகும். இனியும் பொறுமை காத்து இருப்போமானால்  நம்மை வரலாறு சுரணையற்றவர்கலாகவே பதிவு செய்யும்.
குண்டந்தடிக்கு  

நம் மீது தாக்குதல் தொடுத்த ஒவ்வொரு காவல்துறையினருக்கும் தண்டனை வாங்கி தருவோம்.

நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிகிடைக்கும் வரை நமது போராட்டம் ஓயாது தொடர வேண்டும் 

தூங்கி கிடக்கும் வழக்கறிஞர்கள்  சங்கங்களை தட்டி எழுப்புவோம்

விழித்தெழுவோம், போராடுவோம் வெற்றியடைவோம்

Bridge the gap existing between legality and legitimacy by giving rise to social movement
 Lawyers Forum for Social Movement (LFSM), TAMIL NADU
சமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு

தொடர்பிற்கு :
உயர் நீதிமன்றம், மதுரை
 .சிவகுமார்  - 94430 80634
கே.கே.சாமி -  99438 13105
உயர் நீதிமன்றம் ,சென்னனை
கு.கதிரேசன் - 98434 64246

வெள்ளி, 21 ஜனவரி, 2011

வழக்கறிஞர்.கயல்விழி - இலங்கையில் கைது செய்யப்பட்டதை கடுமையாக கண்டிப்போம்

 பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பேத்தியும், தமிழ் அறிஞர் இறைக்குருவனாரின் மகளுமான கயல்விழி, ஜனவரி 19-ம் தேதி, இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிகின்ற கயல்விழி, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்ப்பதற்கும், ஈழத்தமிழ் மக்களைச் சந்திப்பதற்காகவும், உரிய ஆவணங்களுடன், இலங்கைக்குச் சென்று இருந்தார். தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில், இலங்கை ராணுவம் அவரைக் கைது செய்துள்ளது.

கயல் விழி நாடு திரும்புவதை தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் ராஜபட்சேவின் வெறி ஆட்டத்தையும்  இந்திய , தமிழக அரசுகளின் கையாலாகாத செயலையும்   வன்மையாக   கண்டிப்போம்.
   


முகப்பு

புதிய பதிவுகள்