ஞாயிறு, 27 நவம்பர், 2011

பகத்சிங் படத்தை திரையிட ஐ.எப்.எப்.ஐ. மறுப்பு


பகத்சிங் பற்றிய 'இன்குலாப்' என்ற குறும்படத்தை சண்டிகரை சேர்ந்த கவ்ரவ் சாப்ரா இயக்கியிருந்தார். அந்த படம் 42 வது இன்டர்நேஷனல் பிலிம்  பெஸ்டிவல் ஆப் இந்திய (ஐ.எப்.எப்.ஐ)ல் திரையிட தெரிவு  செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த படம் ஐ.எப்.எப்.ஐ.ல் திரையிட மறுக்கப்பட்டுவிட்டது. 


தியாகி.பகத்சிங் இந்திய நாடு வெள்ளை எகாதிபத்தியாதிடம் இருந்து விடுதலை அடைய வேண்டும், ஆனால் அந்த விடுதலை இந்திய கருப்பு முதலாளிகளின் கைகளில் சென்று விட கூடாது என்று விரும்பினார். அதற்காக தொழிலாளர்களையும், விவசாயிகளையும் அணிதிரட்டினார். தாங்கள் வெளிப்படையாக செயல்படமுடியாத போது தங்கள் கருத்துகளை மக்களுக்கு பிரசாரம் செய்யும் முகமாக தான் அவர் பாரளமன்றதிற்குள் யாருக்கும் சேதம் விளைவிக்காத வகையில் குண்டுகளை வீசினார் . தங்கள் கருத்துக்களை நீதிமன்றத்தையே பிரசார மேடையாக்கி நாட்டு மக்களுக்கு கொண்டு சென்றனர். அப்போது இந்திய மக்கள் அனைவரும் பகத்சிங்கை தங்கள் பிள்ளையாக, சகோதரனாக ,தோழனாக பார்த்தார்கள்.இந்தியாவில் அப்போது இருந்த புரட்சியாளர்கள் பகத்சிங்கை மாவீரனாக போற்றினார்கள்.  இதை கண்டு பொறுக்க முடியாத பிரிட்டிஷ் அரசு பகத்சிங்கிற்கு தூக்கு தண்டனை விதித்தது.

பகத்சிங்கும் அவரின் தோழர்களும் எதற்காக போராடினார்களோ அதற்கு மாறாக வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் இருந்து இந்திய முதலாளிகளின் கைகளுக்கு சுதந்திரம் சென்றது. பகத்சிங்கின்  தியாகத்தை அவருக்கு சீக்கிய மத சாயம் பூசி அழிக்கப்பார்த்தது இந்திய அரசு, ஆனால்  இந்திய மக்கள் மத்தியில் பகத்சிங்கின் தியாகத்தை என்ன செய்தாலும் அழிக்கமுடியாது. 

ஆளும் முதலாளித்துவ அரசு இன்றும் பகத் சிங்கின் கருத்துகளை அபயகரமாகவே பார்க்கிறது. அதனால் தான் பகத்சிங் பற்றிய குறும்படத்தினை சர்வதேச பட விழாவில் திரையிட மறுக்கிறது. இந்த நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தன்னுடைய இன்னுயுரை கொடுத்த தியாகி பகத்சிங் பற்றிய குறும்படத்தை திரையிட மறுக்கின்ற ஐ.எப்.எப்.ஐ. இன் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியவை. 

1 கருத்து:

  1. செய்தி அதுவல்ல, திரையிட அவர்களுக்கு [IFFI] விருப்பமே ஆனால் சென்சர் போர்டு அந்த படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை என்பதே காரணம்...

    http://www.suryajeeva.blogspot.com/2011/11/blog-post_26.html

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்