வெள்ளி, 25 நவம்பர், 2011

சரத் பவாருக்கு விழுந்த அறை ! ஒரு எச்சரிக்கை


24 .11 .2011 அன்று டில்லியில் உள்ள என்.டி.எம்.சி. அரங்கத்திலிருந்து வெளியே வந்த மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத் பவாரின் கன்னத்தில் சிங்கம் போல் பாய்ந்து வந்த இளைஞர் ஹர்விந்தர் சிங் ஓங்கி ஒரு அறை விட்டார். அவரை காவல் துறையினர் சுற்றி பிடித்த போது அவர் கோபத்தோடு "ஊழல்வாதிகளுக்கு இனி இது தான் கதி. பணவீக்கமும், விலைவாசியும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கு சரத் பவார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை"என்று கூறினார். இந்த கோபம் ஹர்வீந்தர் சிங்க்கு மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள 90 % மக்களுக்கு உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கிறது.

இந்தியாவில் சாதாரண மக்கள் விலைவாசி உயர்வால் கடும் இன்னலை சந்தித்து கொண்டிருக்கினர். ஆனால் ஊழல் அரசியல் வாதிகளோ மக்கள் பணத்தை கொள்ளையடித்து, மாடமாளிகைகளில் செல்வ செழிப்போடு வாழ்ந்துகொண்டு , சொகுசாக கார்களில்  பவனி வந்து கொண்டிருக்கின்றனர். முதலாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் இந்த அரசுக்கு சாதாரண மக்களை பற்றி சிந்திக்க நேரம் எங்கே இருக்கிறது. ஆனால் இவ்வாறு வெகு காலத்திற்கு இந்த அரசு இயங்க முடியாது, மக்கள் அனைவரும் மாற்றத்தை விரும்புகிறனர் என்பதற்கு அறிகுறியே சரத்பவாருக்கு விழுந்த அடி. இந்த அடி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்களுக்கும், தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிகளுக்கும், உழைக்காமல் அதிகாரமும், ஊழலும்செய்து கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கும் விழும் நாள் வெகு தொலைவில் இல்லை. வசதி படைத்தவன் தர மாட்டன்--அவனை வயிறு பசித்தவன் விட மாட்டான் என்பது மட்டும் உறுதி

2 கருத்துகள்:

  1. இந்தளவு கத்தி வைத்திருக்கும் ஒருவனால் சரத் பவாரின் அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி எப்படி செல்ல முடிந்தது... எனக்கு சந்தேகமா இருக்கிறது தோழர்

    பதிலளிநீக்கு
  2. தோழர் ஜீவா சரத் பவாரை அறைந்தது குறித்து உங்கள் கருத்து என்ன ?

    அவன் எப்படி நுழைந்தான் என்பதை தெரிந்து கொள்வது எந்தளவுக்கு முக்கியமானது அவன் ஏன் அறைந்தான் என்பதை விட

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்