செவ்வாய், 6 டிசம்பர், 2011

லண்டன் : மார்க்ஸ் வாழ்ந்த மண் மாற்றத்தை நோக்கி பயணிக்கிறது

துன்பங்களில் உழன்டு கொண்டிருந்த தொழிலாளர்களின் துயர் துடைக்க உலகில் தோன்றிய தத்துவங்களில் உன்னதமான தத்துவத்தை தந்த மாமேதை கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த லண்டன் மாநகரத்தில், மார்க்ஸின் கனவை நனவாக்குவதை போல  தொழிலாளர்கள்  பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இரண்டாம் உலக போருக்கு முன்பு முதலாளித்துவத்தின் தலைமை பீடமாக  இருந்த இங்கிலாந்தில்  சில மாதங்களுக்கு முன்பு தீ போல பரவிய வேலை இல்லாத இளைஞர்களின் போராட்டங்களை அதிகார  வர்க்கம் வெற்றிகரமாக அடக்கியது.அந்த போராட்டத்தின் உண்மை தன்மை வெளிவரமால் அது இனவெறி கலவரம் என்று சப்பை கட்டு கட்டின முதலாளித்துவ ஊடகங்கள். ஆனால் பற்றி எரிகின்ற வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காணமுடியாத நெருக்கடியில் முத்லாளித்துவதுவம் சிக்கி கொண்டுள்ளது.

அமெரிக்காவில்  'வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம்' போராட்டத்திற்கு பிறகு லண்டன் வாழ் உழைக்கும் வர்க்கம் விழித்துக்  கொண்டு விட்டது, அது தற்போது  மார்க்சியம் தான் ஒரே தீர்வு என்று நம்பத்தொடங்கியுள்ளது. 'லண்டனை ஆக்கிரமிப்போம்' என்ற அமைப்பு தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதற்கு தொழிலாளர்கள் , மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 'அனைத்து அதிகாரங்களும் 99 சதவிதமானவர்களுக்கே' என்று போரட்டகுரல் அங்கு ஒலித்து கொண்டே உள்ளது. கடந்த நவம்பர் 30 அன்று பொது துறையை சேர்ந்த ஊழியர்கள் மாபெரும் வேலை நிறுத்ததையும்,  கண்டன ஊர்வலத்தையும் வெற்றிகரமாக நடத்தினர், இதனால் லண்டன்  மாநகரமே முடங்கி போனது. இவ்வாறு பெருகி வரும் லண்டன் வாழ் உழைக்கும் மக்களின்   போராட்டங்கள் நிரதரமாக 'மார்க்ஸ்' துயில் கொண்டுள்ள அந்த நாட்டில் மாபெரும் மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்