சென்னையில் உள்ள மிகப்பெரிய கார்பரேட் மருத்துவமனைகளான அப்பல்லோ,போர்ட்டிஸ் மலர், மியாட் , மெட்ராஸ் மெடிகல் மிசன் , குளோபல், பில்ராத் போன்ற மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் ஊதிய உயர்வு, ஓவர் டைம்மிற்கு இரண்டு மடங்கு ஊதியம் , கொத்தடிமைகளாக ஆக்கி வைத்துள்ள சட்டவிரோத ஒப்பந்த முறையை ஒழிப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள் , வேலை நிறுத்தத்திற்கு முன்பாகவே முறைபடி ஸ்ட்ரைக் நோட்டீஸ் நிர்வாகத்திற்கு அளித்துள்ளனர்.
இயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 5 மார்ச், 2012
தனியார் மருத்துவமனை செவிலியர்களின் வேலைநிறுத்தம் வெல்லட்டும்
லேபிள்கள்:
இயக்கம்
வெள்ளி, 2 மார்ச், 2012
பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து காலை இழந்த 6 ம் வகுப்பு மாணவி
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் ( எஸ்.எஸ்.ஏ) கீழ், ஒவ்வொரு பள்ளியும் முறையான கட்டிட வசதி, மாணவ மாணவிகளுக்கு தனித்தனியான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, சுற்றுப்புற சுகாதாரம் , மாணவர்களின் முழு வருகை , மாணவர்களின் இடை நிற்றல் இல்லாமல் இருத்தல், குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாடு , பள்ளி நூலகம், புத்தக பூங்கொத்து திட்டத்தின் முழுமையான பயன்படுத்துதல் ஆகியவற்றை செயல்படுத்த கோடிக்கணக்கான நீதி ஒதுக்கப்பட்டு ஆண்டு தோறும் அந்த நிதி செலவழிக்கப்பட்டு விட்டதாக கணக்குக் காட்டப்படுகிறது. ஆனால் கல்விக்கூடங்களோ அந்த நிதியினால் எந்தவிதப் பயனையும் அடைய வில்லை என்று சாட்சியம் பகர்கின்றன. அப்படி கட்டப்படும் கட்டிடங்களின் தரமும் மிகவும் மோசமாக இருக்கின்றன, எவ்வாறெனில் அந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வியை போல.
லேபிள்கள்:
இயக்கம்
புதன், 7 டிசம்பர், 2011
கருத்து சுதந்திரத்திற்கு சமாதிகட்ட கிளம்பிவிட்டார் கபில் சிபல்
இங்கு பேச்சுரிமை உண்டு, எழுத்துரிமை உண்டு, சங்கம் அமைக்கும் உரிமை உண்டு,
கூட்டம் போடும் உரிமை உண்டு என உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று
புகழப்படும் இந்தியாவைப்பற்றி முதலாளித்துவ அரசியல்வாதிகள் (சி.பி.எம்.,
சி.பி.ஐ.உட்பட ) பெருமையாக புகழ்வதுண்டு. ஆனால் இங்கு ஒரு பொது
கூட்டத்தையோ, ஒரு கருத்தரங்கத்தையோ நடத்தி பார்த்தால் தான் அதன் கஷ்டம்
தெரியும் (காவல்துறையினர் கடைசி வரை அனுமதி தராமல் அலையவிடுவார்கள்).
பத்திரிக்கை நடத்தவேண்டுமெனில் ஆயிரத்தியெட்டு விதிமுறைகளை கடந்து
பத்திரிக்கை கொண்டு வருவதற்குள் சொல்ல வந்த கருத்துகளே மறந்து போய்
விடும்.அந்த அளவிற்கு விதிமுறைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
லேபிள்கள்:
இயக்கம்
புதன், 30 நவம்பர், 2011
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
பேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை
சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால்
ஊழல் மற்றும் லஞ்சம் வாங்குவதிலும் மனித உரிமைகளை மீறுவதிலும் முன்னோடியாகவும் ,
அரசின் அடியாட்களாகவும் உள்ள காவல் துறையினர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது
என்று காவல் துறைக்கு ராணுவத்தில் உள்ளதை போலவே சிறப்பு கேண்டின்களை திறக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு ரூபாய்.47 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு என்று காவல் துறைக்கு அள்ளி கொடுக்கிறார்,
ஏனெனில் மக்கள் அநீதிகெதிராக திரண்டெளுந்தால்
அவர்களை அரசின் மீது விசுவாசத்தோடு காவல் துறை அடித்து நொறுக்கும் அல்லவா?
லேபிள்கள்:
இயக்கம்
சனி, 19 நவம்பர், 2011
அமெரிக்க அரசின் கொடூர ஒடுக்குமுறையைத் தாண்டியும் தொடர்கிறது வால் ஸ்ட்ரீட் முற்றுகை
அமெரிக்க அரசின் முதலாளித்துவ கொள்ளைக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக
வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டம்
அதுவாகவே நீர்த்து போகும் என்று கனவு கண்டது அமெரிக்க அரசு , ஆனால் வால்
ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்திற்கு நாளுக்கு நாள் அமெரிக்கவில் மட்டுமல்ல
உலகம் முழுவதுமே ஆதரவு பெருகி கொண்டே வருகிறது. போராட்டம் தீவிரமடைந்து
அமெரிக்க அரசையே ஆட்டம் காண வைக்கிறது. போராட்டக்காரர்களை காவல் துறையினர் ,
பலவகையிலும் துன்புறுத்த ஆரம்பித்துள்ளனர். பூங்காகளில் தங்கியிருந்த
மக்கள் வலுகட்டாயமாக காவல் துறையினரால் வெளியேற்றப்படுகின்றனர்.
லேபிள்கள்:
இயக்கம்
வெள்ளி, 18 நவம்பர், 2011
விலைவாசி உயர்வில் சிக்கி தவிக்கும் மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியுள்ள பஸ்,பால், மின்சார கட்டண உயர்வு !
ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வு, வீட்டு வாடகை உயர்வு , மற்றுமுள்ள அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் உழைக்கும் மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கும் இந்த நிலையில் தமிழக அரசு எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது போல பஸ் , பால் மற்றும் மின்சார கட்டணங்களை சாதாரண மக்கள் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு உயர்த்தியுள்ளது . சட்டமன்ற தேர்தல் வெற்றி, உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்று அடுத்தடுத்த வெற்றிகளை மக்கள் இந்த ஆளும் அரசுக்கு தந்ததற்கு பரிசாக இந்த அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வை பேருடியாக சாதாரண மக்கள் மீது இறங்கியிருக்கிறது.
லேபிள்கள்:
இயக்கம்
செவ்வாய், 8 நவம்பர், 2011
கிரேக்கத்தில் கடும் நெருக்கடி - பிரதமர் ஜார்ஜ் பாப்பாண்டிரியோ பதவி விலகுகிறார்
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே கிரேக்க அரசு கடும் கடன் நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. அங்குள்ள உழைக்கும் மக்கள் அடுத்த நாளுக்கான உணவிற்கு உத்தரவாதமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அங்கு ஆளும் முதலாளித்துவ அரசுக்கு எதிராக கடுமையான தொடர் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஐஎம்எப் தரும் கடனை மட்டும் வைத்து அந்த அரசு நீடித்திருக்கும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லாத நெருக்கடி நிலையில் பிரதமர் ஜார்ஜ் பாப்பாண்டிரியோ பதவி விலகுகிறார். இது தொடர்ச்சியான கிரேக்க உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியே ஆகும். அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இடம் பெரும் வகையில் தேசிய ஐக்கிய அரசு அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அமையவுள்ள எந்த முதலாளித்துவ அரசும் அந்த மக்களுக்கு ஏமாற்றமாகவும் அமையுமேயல்லாமல் முற்றியுள்ள நெருக்கடிக்கு எந்த தீர்வையும் தராது. கிரேக்க உழைக்கும் மக்களின் போராட்டம் ஒரு வலுவான சோஷலிச அரசை நிறுவும் வரை தொடரும் என்பது திண்ணம்.
லேபிள்கள்:
இயக்கம்
சனி, 5 நவம்பர், 2011
வரலாறு திரும்புகிறது - நவம்பர் 7 புரட்சி தினம்
ஆண்டாண்டு காலமாக பெரும்பகுதி மக்கள் உழைக்க, விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் சுகபோகமாக வாழ்ந்து அந்த உழைக்கும் மக்களை சுரண்டி வந்த கொடுமைக்கு முடிவு கட்டிய புரட்சி நாள் நவம்பர் 7 ,1917. ஸ்பாட்டகஸ் மனதில் பற்றிய தீப்பொறி , பிரான்சில் பாரி கம்யூனாய் கனன்ற உழைக்கும் மக்கள் எழுச்சி ,ரஷியாவில் அகம்பாவத்தின் உச்சியில் கோலோச்சி வந்த சுரண்டல்காரர்களின் தலைவன் கொடுங்கோலன் ஸார் அரசன் மீது பெரு நெருப்பாய் இறங்கியது.
லேபிள்கள்:
இயக்கம்
செவ்வாய், 1 நவம்பர், 2011
தெருவெங்கும் வெள்ளம்! எங்கே மக்கள் அரசு ?
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைய ஆரம்பித்துள்ளது, தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் இரண்டு நாள் மழைப்பிடித்தாலே நகரமே வெள்ளக்காடாக மாறிவிடுகிறது .வேளச்சேரி போன்ற பகுதிகளில் படகு பயணம் செய்யுமளவிற்கு தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி விடுகிறது. சுரங்கப்பாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி வாகனபோக்குவரத்தே ஸ்தம்பித்து போய் விடுகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் வடிகால்களும், பாதாளா சாக்கடையும் ஒழுங்காக பராமரிக்கப்படாததால் மழை நீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. பல ஏரிகளும் குளங்களும், கால்வாய்களும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை,அப்படி பராமரிக்க ஒதுக்கப்படும் தொகையானது அரசு அதிகாரிகள் , அரசியல் வாதிகள் ,மற்றும் ஒப்பந்தகாரர்களால் கூட்டு பிரித்து கொள்ளையடிக்கப்படுகிறது. நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற எந்த முயற்சியும் எடுப்பதில்லை, நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா பெற்றுக்கொண்டு அந்த இடத்திற்கு சொந்தக்காரர்கள் ஆகிவிடுகின்றனர்.
லேபிள்கள்:
இயக்கம்
திங்கள், 17 அக்டோபர், 2011
'வால் ஸ்ட்ரீட் ஐ கைப்பற்றுவோம்' - போராட்டம் பல நாடுகளுக்கு பரவுகிறது , ஆட்டம் காணுகின்றன முதலாளித்தவ அரசுகள்
எந்த முதலாளித்துவம் உலக அளவில் வலுவான சக்தி என்று டாம்பிகத்தொடு வளம் வந்ததோ, அதே முதலாளித்துவம் தான் வறுமையையும், வேலை இல்ல திண்டாட்டத்தையும், உண்டாக்கி உழைக்கும் மக்களை இன்று தெருவில் நிருத்தியிருக்கிறது. எந்த முதலாளித்தும் தொழிலாளர்களை நிருவனப்படுத்தியதோ, எந்த முதலாளித்துவம் தொழிலாளர்களை சுரண்டியதோ , அந்நிய நாடுகளை சொந்த நலன்களுக்காக ஆக்கிரமித்ததோ , குறைவான கூலி கொடுத்து மக்களை அரை பட்டினியோடு வாழ நிர்பந்திததோ, மக்களை அநியாயமாக கொன்று குவித்ததோ,இயற்கை வளங்களை அதீதமாக சுரண்டி கொளுத்ததோ , சமூகத்தில் நிலவும் அத்தனை சீர்கேடுகளுக்கும் (கலாச்சார சீர்கேடுகள் உட்பட ) காரணமாக உள்ளதோ அந்த முதலாளித்துவத்தை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் பெருகி வருகின்றன.
லேபிள்கள்:
இயக்கம்
சனி, 15 அக்டோபர், 2011
விழித்தெளுந்த அமெரிக்க பாட்டாளிகள் - ஆட்டம் காணும் அமெரிக்க முதலாளித்துவ அரசு
அமெரிக்க முதலாளிகளின் லாப வெறிக்காக உலகம் முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வரவேண்டும்,எண்ணெய் வளங்களை கைப்பற்ற வேண்டும் என்று அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தான் , ஈராக் , போன்ற நாடுகளை கைப்பற்றுவதும் அங்குள்ள போராளி குழுக்களை ஒடுக்குகிறோம் என்று அந்த நாட்டு அப்பாவி மக்களை மீது குண்டு போட்டு கொள்வதும், அந்நிய நாடுகள் மீது பலவந்தமாக ஒப்பந்தங்களை திணிப்பதும், அமெரிக்க பாட்டாளிகளின் நலனுக்காக அல்ல அங்குள்ள முதலாளிகளின் நலனுக்கே என்பதை உணர்ந்து கொண்ட உணர்வு பெற்ற பாட்டாளி வர்க்கம் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் மட்டும் அல்ல அங்குள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் , பேரணிகள், முற்றுகை என்று அமெரிக்க அரசை ஆட்டம் காண வைத்து கொண்டுள்ளது . "ஒரு சதவிகிதமே உள்ள முதலாளிகளுக்கான அமெரிக்காவே ,அவர்களின் வர்த்தக நலன்களுக்காக 99 சதவிகித மக்களை வஞ்சிக்காதே" என்பதே அங்கு முக்கிய கோசமாக உள்ளது.
லேபிள்கள்:
இயக்கம்
புதன், 12 அக்டோபர், 2011
வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டார்
பிரபல உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் , பல்வேறு பொது நல வழக்குகளை நடத்தி வருபவரும், சமூக இயக்கங்களில் பங்காற்றி வருபவருமான பிரசாந்த் பூசன் அவர்கள் இன்று (12 .10 .2011 ) உச்ச நீதிமன்றத்தில் உள்ள அவரது வழக்கறிஞர் அறையிலையே ஸ்ரீ ராம சேனா என்ற இந்து மத வெறிவாத அமைப்பை சேர்ந்த மதவெறியர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். காஷ்மீரில் உள்ள Armed Forces Special Powers Act நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார் . அவர் தெரிவித்த கருத்துகளுக்காக இந்து மத வெறிவாத அமைப்புகள் அவர் மீது பாசிச தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. ஒருவர் தனது கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க கூட உரிமை இல்லாத ஆபத்தான சூழ்நிலையையே இந்த ஆளும் முதலாளித்துவ அரசு பராமரித்து வருகிறது. மிகவும் பிரபலமான உச்ச நீதிமன்ற வழக்கறிங்கர் மீது உச்ச நீதிமன்றத்தில் வைத்தே தாக்குதலை அரங்கேற்றி உள்ள இந்து மத வெறிவாத அமைப்பை இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
லேபிள்கள்:
இயக்கம்
திங்கள், 5 செப்டம்பர், 2011
மார்க்ஸிசம் தந்த மாமேதை மாவோ - நினைவு தினம் செப்டம்பர்-9
சீனா முழுவதும் ஏகாதிபத்திய சுரண்டலின் வேட்டை காடாக 19 நூற்றாண்டில் இருந்தது , ஜப்பானின் ஏகாதிபத்தியம் தலைவிரித்தாடியது. நிலபிரப்புகளின் சுரண்டலை தட்டி கேட்க முடியாதவர்களாய் அப்படி கேட்டால் மரணம் பரிசாக கிடைக்கும் என்ற நிலையில் கோடிக்காணக்கான மக்கள் , பசி , பட்டினி என்று துன்பத்தின் கோரப்பிடியில் சிக்கி துவண்டு கொண்டு இருந்தனர். அப்போது தான் ரஷியாவில் சோஷலிச அரசு தனது இளம் பிராயத்தில் இருந்து வளர்ந்து கொண்டு இருந்தது. சீனா முழுவதும் முதலாளித்துவம் முழுமையாக வளராத நிலையில் தொழிலாளர்கள் குறைந்த பகுதியினறாய் இருந்த படியினால் , பண்ணையடிமைகளாக , குத்தகை விவசாயிகளாக , சிறு விவசாயிகளாக சிதறுண்ட கிடந்த சூழ்நிலையில் மார்க்சிய வழிகாட்டுதலில் சிவப்பு வானில் உதித்த நட்சத்தரமாய் சீனாவிற்கு விடியலாய் , வழிகாட்டியவர், வழிநடத்தியவர் தோழர்.மாவோ.
லேபிள்கள்:
இயக்கம்
செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011
ஆட்டம் கண்ட கருத்து முதல்வாதம் : நாகர் கோவில் மார்க்சிய சிந்தனை மையம்
நாகர்கோவில் லைசியம் பள்ளியில் 28.08 .2011 அன்று நடைபெற்ற மார்க்சிய படிப்பு வட்டத்தில் இயக்கவியல் பொருள் முதல்வாதம் விவாதிக்கப்பட்டது. தென்மாநிலங்களுக்கனா கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரமின் (CWP) பொதுசெயலாளர் தோழர் . அ.ஆனந்தன் அவர்கள் கருத்து முதல்வாதம் எவ்வாறு மாறத் தன்மையை போதித்து கற்பனையான உலகத்தில்உழைக்கும் மக்களை ஆழ்த்தி வைத்திருந்தது என்றும் ஹெகல் போன்றவர்கள் வரலாற்றுரீதியாக வைத்த சில வழங்கல்களை , மார்க்ஸ் எவ்வாறு முழுமைபெற்ற பொருள்முதல்வாதமாக ஆக்கினார் என்பதையும் , 17 , 18 நூற்றாண்டுகளில் நிகழ்த்த தொழிற் புரட்சியின் விளைவாக வர்க்கம் கூர்மைபெற்றதை கணக்கில் எடுத்துகொண்டு , கருத்து முதல்வாதம் உத்தேசமாக கூறியதை மார்க்ஸ் எவ்வாறு புள்ளி விவரங்களோடு மறுத்து உறுதியாக தனது கருத்துகளை நிறுவினார் என்பதையும், மாற்றம் நிகழ்ந்தே தீரும் அதை யாரும் தடுக்க முடியாது வர்க்கங்கள் கூர்மையடைந்து கொண்டே தான் செல்லும் என்பதை மார்க்ஸ் நிறுவியதை பல்வேறு நடைமுறை உதாரணகளோடு விரிவாக எடுத்துரைத்தார்.
லேபிள்கள்:
இயக்கம்
திங்கள், 22 ஆகஸ்ட், 2011
ஊழல் கட்சிகளோடு கைகோர்த்து ஊழலுக்கு எதிரான போராட்டம் - சி.பி.எம், சி.பி.ஐ, இன் பாராளமன்ற வழிபாடு
அண்ணா ஹசாரே ஜான் லோக்பால் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசின் கடும் ஒடுக்குமுறைகளுக்கு நடுவே சாகும் வரை உண்ணாவிரத்தை மேற்கொண்டு வருகிறார். அவரின் இந்த போராட்டம் இந்தியாவின் இளைய தலைமுறையின் ஆன்மாவை தட்டியெழுப்பி போராட்ட களத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவர் மாற்றம் வேண்டும், மக்கள் போராட்டமே மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கூறி இளைஞர்களை போராட்டத்தில் களம் இறக்கி விடுகிறார். அவரின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த போராட்டத்தை வலுவான மக்கள் இயக்கமாக மாற்றவேண்டிய கடமை எந்த வொரு உண்மையான கம்யூனிஸ்டு கட்சிக்கும் உண்டு . ஆனால் சி.பி.எம். சி.பி.ஐ. யோ மைதானங்களில் சட்டம் இயற்றமுடியாது என்று அண்ணா ஹசரேவை விமர்சனம் செய்வதோடு இந்திய பராளமன்றத்தை உயர்த்தி பிடிக்
கிறது.
கிறது.
லேபிள்கள்:
இயக்கம்
புதன், 3 ஆகஸ்ட், 2011
தோழர். சிப்தாஸ் கோஷ் - நினைவை போற்றுவோம், அவரின் வழிநடப்போம்
(தோழர். சிப்தாஸ் பிறந்தது 5 ,ஆகஸ்ட் - 1923 மறைந்தது 5 ஆகஸ்ட் 1976 )
தோழர் சிப்தாஸ் கோஷ் அவர்கள் தான் இந்தியாவின் சூழ்நிலையை கச்சிதமாக கவனத்தில் எடுத்து இந்தியாவில் பின்பற்ற வேண்டிய சரியான மார்க்சிய நெறிகளை வகுத்தளித்தவர். சி.பி.எம்., சி.பி.ஐ., சி.பி.எம்.(எம்.எல்)போன்ற பல்வேறு கட்சிகள் எவ்வாறு தத்துவ , மற்றும் நடைமுறை கோளாறுகளை இளைத்தன , இந்தியாவில் முதலாளித்துவ எதிர்ப்பு சோஷலிச புரட்சியே சரியான தீர்வு என்று முன்வைத்து SUCIயை வலிமையான அமைப்பாக கட்டியமைத்தார்.
லேபிள்கள்:
இயக்கம்
சனி, 30 ஜூலை, 2011
ஊழல் நீதிபதி தினகரன் பதவி விலகல் : நீதித்துறையில் அங்கமாகிவிட்ட ஊழல்
சமூகமெங்கும் ஊழல் , லஞ்சம் தலைவிரித்தாடுகிறது, சந்தர்ப்பம் கிடைக்கும் இடம் எல்லாம் ஊழல் புகுந்து விளையாடுகிறது. தட்டி கேட்பதற்கு யாரும் இல்லை என்பதால் தான் அனைத்தும் ஊழல் மயமாக இருக்கிறது. ஆளும் மன்மோகன் அரசு ஊழலின் உற்றுக்கண்ணாக காட்சியளிக்கிறது, ஸ்பெக்ட்ரம் ஊழல் , காமன்வெல்த் ஊழல் , எடியுரப்பா மற்றும் ரெட்டிகளின் சுரங்க ஊழல் , ஆதர்ஷ் ஊழல், தமிழகத்தில் நில அபகரிப்பு என்று தினம் தினம் ஊழல் செய்திகளே வலம் வந்து கொண்டுள்ளன. நிர்வாகமும், அரசியலும் இப்படி இருக்க உழைக்கும் மக்களின் கடைசி புகலிடமான நீதித்துறையோ அதை விட படு மோசமாக இருக்கிறது.
லேபிள்கள்:
இயக்கம்
வெள்ளி, 29 ஜூலை, 2011
ஏ.ஐ.டி.யு.சி. - யின் தொழிலாளர் துரோகம்
கடந்த மாதத்தில் குர்கவுன் மாருதி தொழிற்சாலையில் புதிய தொழிற்சங்கம் அமைத்ததற்காக சில தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கியது மாருதி கார் நிறுவனம். இதனால் அங்கு பணி நீக்கப்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்து கொள்ள கோரியும் ,புதிய தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள் வெற்றிகரமாக, ஒற்றுமையோடு நடத்தினார்கள். இந்த வேலை நிறுத்தம் குர்கவுன் பகுதி முழுவதும் பரவி மற்ற தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். அங்குள்ள பொதுமக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
லேபிள்கள்:
இயக்கம்
வியாழன், 28 ஜூலை, 2011
தொழிலாளர்கள் தங்களை மாற்றி கொள்ளாமல் இந்த உலகை மாற்ற முடியாது.
ஆளும் முதலாளி வர்க்கம் பல்வேறு கலாச்சார சீர்கேடுகளை தொழிலாளர்கள் மேல் திணித்துள்ளது. அதில் ஊறிப் போயுள்ள தொழிலாளி வர்க்கம் அனைத்து நல்ல குனம்சங்களையும் இழந்து சந்தர்ப்ப வாதம் மற்றும் சுயநலத்தின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறது. இதைதான் மாமேதை மார்க்ஸ் அன்றே 'தொழிலாளர்கள் தங்களை முதலில் மாற்றிக்கொள்ளாமல் இந்த சமூக அமைப்பை மாற்ற முடியாது ' என்பதை தீர்க்கத்தரிசனமாக சொன்னார். தொழிலாளர்களிடையே இருக்கும் இந்த சீரழிந்த கலாச்சாரத்தை மாற்ற இடதுசாரிகள் போராட வேண்டும்.
லேபிள்கள்:
இயக்கம்
ஞாயிறு, 17 ஜூலை, 2011
நாகர்கோவில் : மார்க்சிய சிந்தனை மையம் - இயக்கவியல் பொருள்முதல்வாதம்
17 .07 .2011 அன்று நாகர்கோவில் , தக்கலை லைசியம் பள்ளியில் மார்க்சிய சிந்தனை மையம் நடத்தும் 5 வது படிப்பு நடைபெற்றது. கடந்த நான்கு வாரங்களாக மூத்த எழுத்தாளர் தோழர் .பொன்னீலன் அவர்களால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முழுவதுமாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மூத்த தொழிற்சங்கவாதியும் , கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்மின் தென்மாநிலங்களுக்கான பொது செயலாளருமான தோழர்.ஆனந்தன் அவர்கள் இந்த வகுப்பை நடத்தினார்.
லேபிள்கள்:
இயக்கம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
முகப்பு
புதிய பதிவுகள்












