சோவியத் ரசியாவினை கட்டமைத்த மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஸ்டாலின் 132 வது பிறந்த தினம் உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் 18 தேதி அனுசரிக்கப்பட்டது. ஊழல்வாதி புதின் மீது கடும் கோபத்தில் இருக்கும் ரசிய மண்ணில் ஸ்டாலின் பிறந்த தின ஊர்வலம் செஞ்சதுக்கத்தில் கூடுதல் உற்சாகத்தோடு அனுசரிக்கப்பட்டது. இது உலகம் முழுவதும் இருக்கும் பாட்டளிவர்க்கதிற்கு உற்சாகம் அளிக்ககூடிய செய்தியாகும். முதலாளித்துவ அரசுகளும், ஊடகங்களும் இன்று வரை தோழர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஏனெனில் ஸ்டாலினால் முன்னேடுத்து செல்லப்பட்ட பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் இன்றும் கூட முதலாளித்துவ அரசுகளுக்கு அச்சம் தருபவையாகவே இருக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் கொடிய நாசிசத்தின் பிடியில் இருந்து உலகமே தோழர் ஸ்டாலின் தலைமையிலான ரசியா செம்படையால் காப்பற்றப்பட்டது. சென்ற நூற்றாண்டின் பாட்டளிவர்க்கதின் மாபெரும் தலைவர் தோழர் ஸ்டாலினை நினைவு கூர்வோம்.
புரட்சி நீடுடி வாழ்க....
பதிலளிநீக்கு