வெள்ளி, 29 ஜூன், 2012

மார்க்சியத்தை புதைக்க முடியாது



நனைகிறதே ஆடு என 
இப்போது 
நரிகளுக்கென்ன அக்கறை!!! 
சுதந்திரம் விரும்பிய ராஜாளிக்கு ?
திசைகளுண்டா  கட்டுப்பாடுகளுண்டா ?
லெனின் ஒரு மலைக்கழுகு. 

சனி, 23 ஜூன், 2012

கம்யூனிசமே நம் முன் உள்ள அனைத்து பிரச்னைகளுக்குமான தீர்வு


கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP)யின் தென் இந்தியாவிற்கான பொதுச் செயலாளராக இருக்கும் தோழர்.அ.ஆனந்தன் அவர்கள் மாணவப் பருவத்திலிருந்தே கம்யூனிச இயக்கங்களில் ஈடுபாடு கொண்டு SUCI கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர் தலைவராக அனுபவம் பெற்றவர். SUCI கட்சி தமிழகத்தில் வேரூன்றக் காரணமாக இருந்தவர். AIUTUC-யில் பொறுப்பாளராக இருந்த இவர் பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கியவர். குறிப்பாக திண்டுக்கல் விளாம்பட்டி காகித ஆலை தொழிலாளர் சங்கம், விருதுநகர் சுவாமிஜி மில், சிவகாசி பட்டாசுத் தொழிலாளர் சங்கம் ஆகியவை உருவாவதில் பெரும்பங்களித்தவர். வங்கி ஊழியர் சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.
 
நன்றி : கீற்று 

திங்கள், 18 ஜூன், 2012

பங்களாதேஷில் மிகப்பெரிய தொழிலாளர் எழுச்சி



கார்மென்ட் தொழிற்சாலைகள் மிகுந்த பங்களாதேசில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகவும் குறைவு. கடுமையாக சுரண்டப்பட்டு கொண்டிருந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கமாக உருவெடுத்தனர். பல்வேறு தொழிற்சங்கங்க ள் நிர்வாகம் ,அரசு இரண்டின் அடக்குமுறையை மீறியும் நன்கு செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் திரு.அமினுள் இஸ்லாம் என்ற பிரபலமான  தொழிற் சங்க தலைவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். அதை செய்தது கார்மென்ட் தொழிற்சாலை அதிபர்களின் கூலி படை தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஊதிய உயர்வு, பணிநேரக் குறைப்பு, மலிவு விலையில் சாப்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 5 லட்சம் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் தற்போது பந்களாதேஷில் வெடித்துள்ளது. தொழிலாளர்கள் தினமும் 10 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை உடல்நோக உழைக்கின்றனர். வாரத்தில் 6 நாள்கள் வேலைக்கு வந்தால்தான் வார இறுதியில் கூலி என்கின்றனர். இப்படி நீண்ட நேரம் உழைப்பதால் உடல் சோர்ந்து தொழிலாளர்கள் தளர்வடைகின்றனர்.

புதன், 13 ஜூன், 2012

விழித்துக் கொண்டது உழைக்கும் மக்கள் ரஷியா : புதினுக்கு எதிராக மாஸ்கோவில் மிகப்பெரிய ஊர்வலம்


சோவியத் யூனியன் விழுந்த போது  சோசலிசத்திற்கு முடிவு கட்டப்பட்டு விட்டதாக முதலாளித்துவ உலகம் கொக்கரித்தது. ஊழல் மன்னன் புதின் பல்வேறு முறைகேடுகளை செய்து ஆட்சியை பிடித்தார். கடைசியாக நடைபெற்ற தேர்தலில் உலகமே முகம் சுழிக்கும் அளவிற்கு பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி புறவாசல் வழியாக அதிபர் பதவியை கைப்பற்றினார் புதின் . ஆனால் ரஷிய மக்கள் முன்பு முழுவதுமாக  அம்பலப்பட்டு போனார். தேர்தலில் புதின் வெற்றிபெற்றார் என்று அறிவிக்கப்பட்ட போதே லட்சக்கணக்கான மக்கள் ஓன்று திரண்டு புதினின் முறைகேடான தேர்தல் வெற்றிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தொடர்ச்சியாக தொடர் முற்றுகை , பேரணி என பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டங்களை ஒடுக்கும் விதமாக பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவிடுகிறார் புதின். தற்போது சட்டவிரோதமான போராட்டங்களுக்கு தனி நபர் போராட்டக்காரர்களுக்கு 3,00,000 ரூபிள்கள் வரையும் அதை ஏற்பாடு செய்யும் அமைப்புகளுக்கு 1 மில்லியன் ரூபில்களும் வரையும்  அபராதம் போடும் விதமாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளார் புதின். 

ஞாயிறு, 10 ஜூன், 2012

உண்மையான பெண் விடுதலையை சாதிக்க உறுதி பூணுவோம் - சங்கர் சிங்


மார்ச் 8 ம் நாள் உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை இத்தினத்தை அங்கீகரித்திருப்பதனால் உலகின் பல பகுதிகளிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் இத்தினம் சிறப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டது போல் தோன்றுகிறது. பின் தங்கிய மற்றும் புதிதாக வளர்ந்து வரும் ஆசிய , ஆப்பிரிக்க , லத்தின் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்லாது வளர்ச்சியடைந்த நாடுகளிலும் ஒப்பீட்டளவில் நிலவும் பெண்களின் பின்தங்கிய நிலைமையும் சமூக வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சம அந்தஸ்து இல்லாமையும் மிகவும் வெளிப்படையாகத் தெரியும் இன்றைய சூழலில் , பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளின் பல்வேறு அம்சங்களை உயர்த்திப் பிடிக்கும் தீர்க்கமான நோக்கத்துடன் சர்வதேச பெண்கள் தினத்தை அனுஷ்டிப்பது அளவு கடந்த முக்கியத்துவம் வாய்ந்தது. 

வெள்ளி, 8 ஜூன், 2012

போராட்டக் களத்தில் விஜயா மருத்துவமனை செவிலியர்கள்

கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக பல்வேறு தனியார்  மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சம்பள உயர்வு, 8 மணி நேர வேலை , சட்ட விரோதமான ஒப்பந்தம் கூடாது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பல  போராட்டங்கள் வெற்றியும் பெற்றன. தற்போது வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையை சேர்ந்த 400 க்கு மேற்பட்ட செவிலியர்கள் முறைப்படி ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தும் அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப் படாததால் மே 28 , 2012 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.  

செவ்வாய், 5 ஜூன், 2012

'செ’ படம் ஒரு திரைப்படம் மட்டுமல்ல; அது ஒர் ஆவணம்



மக்களிடையே இரண்டு மாபெரும் மனிதர்களைப் பற்றி மிகத்தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. அவர்களில் ஒருவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் சமரசமற்ற போக்கினை பிரதிநிதித்துவப்படுத்திய தியாகி பகத்சிங். அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கையைத் தேச விடுதலைப்போரோடு அப்படியே இணைத்துக் கொண்டு வாழ்ந்து காட்டியவர். மிக குறுகிய காலத்தில் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டவர். அதனால் அவர் என்றென்றும் வீரம், மனோதிடம், அநியாயத்திற்கும் அநீதிக்கும் எதிராக வளைந்து கொடுக்காது போராடும் குணம் ஆகியவற்றின் இலக்கணமாய் இன்றும் விளங்குபவர். அவர் மிக வேகமாக ஒரு கம்யூனிஸ்ட் ஆகிக் கொண்டிருந்தவர்.

ஞாயிறு, 3 ஜூன், 2012

நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவேண்டும்


மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC ) பணிபுரியும் ஒப்பந்தத்  தொழிலாளர்கள் ஏப்ரல் 21 ,2012 முதல் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பல சுற்று பேச்சு வார்த்தைகள் நிர்வாகத்திற்கும் , தொழிலாளர்களுக்கும்  இடையே நிகழ்ந்தபோதும்  தொழிலாளர்களின் நியாயமான எந்தக் கோரிக்கைகளையும்  ஏற்க என்.எல்.சி நிர்வாகம் முன்வரவில்லை. 

மதுரையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் ஜி.வி.கே வின் அடக்குமுறைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்



108 ஆம்புலன்ஸ் திட்டம் முழுக்க முழுக்க அரசின் நிதியுதவியுடன் நடைபெறுகிறது, ஆம்புலன்ஸ் வாங்குவது, ஊழியர்களின் சம்பளம், வண்டிக்கு ஆகும் பிற செலவுகள் அனைத்துமே அரசே வழங்குகிறது. ஜி.வி.கே. நிறுவனம் வெறுமனமே அரசின் பணத்தை பெற்று அதை நிர்வாகம் செய்யும் பணியை மட்டும் செய்கிறது. இவ்வாறு செயல்படும் இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு அரசு தரும் சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே ஊழியர்களுக்கு வழங்கிவருகிறது ஜி.வி.கே.நிர்வாகம் . பணி மூப்பின்  அடிப்படையில் சம்பள உயர்வை வழங்காமல் அப்ரைசல் என்ற பெயரில் நிர்வாகத்திற்கு சாதகமாக நடந்து கொள்பவர்களுக்கு சற்று கூடுதலாகவும்  ( அதுவும் அதிகம் இல்லை ) , மற்றவர்களுக்கு மிக குறைந்த ஊதிய உயர்வையும் வழங்கி வருகிறது. 

சனி, 2 ஜூன், 2012

இருள் சூழ்ந்த தொழிலாளர் வாழ்வில் மின்னல் கீற்றாக அமைந்தது திருத்தங்கலில் நடைபெற்ற CWP யின் மே தினப் பொதுக்கூட்டம்



கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ),உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி , சென்ட்ரல் ஆர்கனிஷேசன் ஆப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU ) ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய  மே தினப்பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் , எஸ்.ஆர். மேல்நிலைப் பள்ளி எதிரில்  27 . 05 . 2012 அன்று நடைபெற்றது. உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி தலைவர் தோழர். வரதராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் தலைமையுரையில் தோழர்.வரதராஜ் பேசும்போது பட்டாசு விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதற்கு காரணம் ஊழலில் திளைக்கும் அதிகாரிகளின் மேத்தனப்போக்கே ஆகும், மே தின தியாகிகள் எந்த காரணத்திற்காக தங்கள் இன்னுயிரை துறந்தார்களோ அந்த நோக்கத்தை இன்னும் அடையமுடியாத நிலையிலையே இன்றும் உழைக்கும் வர்க்கம் இருக்கிறது , இதை அம்பலப்படுத்தி தொழிலாளர்களை அமைப்பாக்கி வருகிறது CWP  என்று குறிப்பிட்டார். 

முகப்பு

புதிய பதிவுகள்