திங்கள், 31 ஜனவரி, 2011
நொய்யல் தாமதமானாலும் சரியான நீதி
திருப்பூர் என்றாலே சாயப்பட்டறைகள் தான் நமக்கு நினைவிற்கு வரும் அந்த அளவிற்கு தொழிற்சாலைகள்
நிறைந்த தொழிலாளர்கள்
நிறைந்த ஊர் திருப்பூர் ஆகும். தொழிலாளர்களை கட்டுப்பாடின்றி சுரண்டி கொளுத்த முதலாளிகள்
சுத்திகரிக்கப்படாத சாய கழிவுகளை நொய்யல் ஆற்றில்
திறந்து விட்டு நொய்யலை கூவம் ஆக்கி விவசாயிகளின்
வயிற்றில் அடித்தனர். அரசும் அவர்களுக்கு அதரவாக இருந்தது. விவசாயிகளின்
பெரும் போராட்டத்திற்கு இன்று விடிவு கிடைத்துள்ளது. விதிமுறைகளை மதிக்காத அனைத்து
ஆலைகளையும் மூடும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும்.
புதன், 26 ஜனவரி, 2011
தேசிய வாக்காளர் தினம் ஜனவரி 25 - மறைந்துள்ள உண்மைகள்
இந்த 62- வது குடியரசு தினத்தினை நாம் கொண்டாடா விட்டாலும் நம்மை ஆளும் வர்க்கமும் அவர்களின் ஊதுகுழலான ஊடகங்களும் கொண்டாடும் வேலையில் அதை முன்னிட்டு நமது தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினமாக ஜனவரி 25ம் நாளை அறிவித்து உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதை ஒட்டி கடந்த ஆறு மாத காலமாகவே தேர்தல் ஆணையம் "கண்ணியமான தேர்தல்" ,” ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது எப்படி", "வன்முறை அற்ற தேர்தல்களை நடத்துவது நமது கடமை" ,” ஓட்டப்பளிப்பது நமது தேசத்திற்கு செய்யும் மகத்தான தொண்டு" என்று அரசு சார அமைப்புகளோடு இணைந்து கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. அத்தோடு தமிழக தேர்தல் ஆணையத்திற்கு கூடுதலாக நேர்மையான ஆணையர்களை நியமித்து தேர்தல் குறித்து ஒரு நல்ல கண்ணோட்டத்தை கொண்டு வர அயராது பல நிகழ்சிகளை நடத்தி உள்ளது. அதன் இறுதி வடிவமாக ஜனவரி 25 வது நாளை தேசிய வாக்காளர் தினமாக அறிவித்து உள்ளது. இதற்கு முன்பும் பல தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. ஆனால் இது போல வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் எந்த பிரச்சாரத்தையும் செய்ததில்லை, முதன் முதலில் ஏன் இவ்வாறு தேர்தல் ஆணையம் செய்கின்றது என்றால் தேர்தலை நேர்மையான முறையில் நடத்தி இந்தியாவின் புகழை நிலை நாட்ட வேண்டும் என்பதல்ல அதன் நோக்கம்.
லேபிள்கள்:
keetru.com
வெள்ளி, 21 ஜனவரி, 2011
வழக்கறிஞர்.கயல்விழி - இலங்கையில் கைது செய்யப்பட்டதை கடுமையாக கண்டிப்போம்
பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பேத்தியும், தமிழ் அறிஞர் இறைக்குருவனாரின் மகளுமான கயல்விழி, ஜனவரி 19-ம் தேதி, இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிகின்ற கயல்விழி, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்ப்பதற்கும், ஈழத்தமிழ் மக்களைச் சந்திப்பதற்காகவும், உரிய ஆவணங்களுடன், இலங்கைக்குச் சென்று இருந்தார். தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில், இலங்கை ராணுவம் அவரைக் கைது செய்துள்ளது.
கயல் விழி நாடு திரும்புவதை தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் ராஜபட்சேவின் வெறி ஆட்டத்தையும் இந்திய , தமிழக அரசுகளின் கையாலாகாத செயலையும் வன்மையாக கண்டிப்போம்.
லேபிள்கள்:
lawyers forum for social movement(LFSM)
தகவல் பலகை அமைத்து உழைக்கும் வர்க்கக் கருத்துக்களைக் கொண்டு செல்வோம் (CWP)
சமுக முன்னேற்றத்தில் கருத்துக்கள் ஆற்றிய பங்கு அளவிடற்கரியது. அனைத்தையுமே அனுபவம் மூலம் அறிந்தே ஒரு மனிதன் தேவைப்படும் விதங்களில் தன்னை மாற்றிக் கொண்டிருந்த போக்கினை கருத்துகள் மாற்றின. அத்தகைய கருத்துக்கள் மூலமே மாபெரும் சமூக மாற்றங்களும் ஏற்பட்டன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற கருத்துக்களின் உதயமே சமூகத்தின் ஜனநாயக ரீதியிலான மாற்றங்களுக்கு வழிவகுத்தது.
புதன், 19 ஜனவரி, 2011
பாரதி விருது தன்னை கவுரவித்து கொண்டுள்ளது
எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழக எழுத்துலகில் ஒரு அசைக்க முடியாத சிங்கம் என்று சொன்னால் அது மிகை அல்ல. மன்னர்களையும் , சொத்துடையவனையும் பாடிகொண்டிருந்த தமிழ் எழுத்துலகில் பாரதி என்ற எழுத்து புயல் புகுந்து புளிதியை கிளப்பியது அவரின் எழுத்து இந்தியர்களுக்கு எழுச்சி உட்டியது அவரின் கவிதை வரிகள் வெள்ளையர்களை விரட்டி அடித்தது. அதே காலத்தில் வாழ்ந்த புதுமை பித்தன் சிறுகதை உலகத்தில் ஒரே பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார். பாரதியும் , புதுமைபித்தனும் சேர்ந்த கலவையாக ஜெயகாந்தன் இருந்தார். அவரிடம் இருந்த தெளிவு ,துணிவு , நேர்த்தியான மொழிநடை , கம்பீரம் அனைத்தையும் பார்த்த வாசகர்கள் பாரதி தான் மறு பிறவி எடுத்து வந்துள்ளதாக கருதி பூரித்து போயினர் . பேனா எனும் சவுக்கால் பழமைகளை , பச்சோந்தி தனத்தை, முதலாளித்துவத்தை , விரட்டி விரட்டி அடித்தார் . பல அற்புத நாவல்களை எழுதினார் , சிறுகதைகள் , கட்டுரைகள் என்று அவர் தொடாத இலக்கியமே கிடையாது எனலாம்.
ஒரு நல்ல இலக்கியவாதி ஜெயகாந்தன் பாதிப்பு இல்லாமல் இருப்பாரேயானால் அவரின் படைப்பு கண்டிப்பாக சந்தேகத்திற்கு உட்பட்டது. உன்னைப்போல் ஒருவன் , யாருக்காக அழுதான் போன்ற படங்கள் அவரின் புகழ் மிக்க அவரே இயக்கிய படைப்புகள் ஆகும். அவர் பெற்ற விருதுகள் சாகித்ய அகாதெமி விருது , 2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது, 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது ஆகியவைகள் தம்மை பெருமை படுத்தி கொண்டுள்ளன. இந்த ஆண்டு தான் பாரதி விருது ஒரு வாழும் பாரதிக்கு அளிக்கப்பட்டு உள்ளது என்பது பெருமைக்கு உரியது. ஜெயகாந்தன் உழைக்கும் மக்களைப்பற்றி எழுதினார் , அவர்களின் போராட்டங்களை ஆதரித்து எழுதினார், இன்னும் சொல்லப்போனால் அவர்களை போராட தூண்டினார் முதலாளித்துவத்துக்கு சானை பிடித்துகொண்டிரிந்த கூட்டத்தை ஒற்றை ஆளாய் விரட்டி அடித்தார் அவரின் அடியொற்றி பல இலக்கியவாதிகள் தமிழ் எழுத்துலகில் வர வேண்டும் என்பது நமது அடக்கவொன்னாத அவா.
வியாழன், 13 ஜனவரி, 2011
இந்த பொங்கல் பண்டிகையாவது உழைக்கும் மக்களுக்கானதாக மலர வேண்டும்
இந்த முதலாளிகளின் ஆட்சியில் இந்த அரசு உழைக்கும் மக்களை கொஞ்சமாவது சிந்தித்து பார்க்கும் என்று நம்புவது அறிவீனமானதாகவே இருக்கும். பொதுவாக இன்றைக்கு விவசாயம் என்பது பெரும் நஷ்டம் ஏற்படுத்தும் தொழிலாகவே மாறி போய்விட்டது .சிறுவிவசாயிகள் பழமையான உற்பத்தி கருவிகளை கொண்டு உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு அவர்கள் உற்பத்தி திறன் மிகவும் குறைவாகவே இருப்பதால் கண்டிப்பாக லாபம் என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்றாகும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது கூட்டு பண்ணை விவசாயம் என்பதாகவே இருக்கமுடியும் . விவசாயிகளை இடைத்தரகர்களால் கடுமையாக சுரண்டப்படுவதை இந்த அரசு கண்டு கொள்வதே இல்லை ஏனெனில் அவர்களின் ஆட்சி தானே இங்கு நடைபெறுகிறது. ஊகவாணிபம் , தரகர்கள் இவர்களின் பதுக்கல் மற்றும் அதீதா லாபம் காரணமாக தான் விலைவாசி விண்ணை தொடுகிறது என்பது நிதர்சனமான உண்மை ஆகும். இதிலிருந்து விடுபடுவதற்கு சோசலிசம் தான் ஒரே தீர்வாகும். அனைவருக்கும் தமிழர் திருநாள் , பொங்கல் , உழவர்தினம் ,திருவள்ளுவர் தின வாழ்த்துகளை இயக்கம் தெரிவித்து கொள்கிறது
திங்கள், 10 ஜனவரி, 2011
சில மாடுகளும்... சில மனிதர்களும்...
ஜல்லிக்கட்டுக்காக சில மாடுகள் வளர்க்கப் படுகின்றன. உழவுக்காகவும் சில மாடுகள் வளர்க்கப் படுகின்றன. பார வண்டி இழுப்பதற்கும் சில மாடுகள் வளர்க்கப் படுகின்றன. இளமையும் வலிமையும் இருக்கும் வரை அம்மாடுகளுக்கு நல்ல மவுசு, நல்ல விலை. நான், நீ என்று போட்டி போட்டு விலை கேட்பதற்கு ஆட்கள் பலர். ஆனால் அம்மாடுகள் இளமையைக் கடந்து, வலிமையை இழந்து விட்டாலோ அதை விலை கேட்பதற்கு ஆளில்லை. விதிவிலக்காக சில மாடுகளைத் தவிர, மற்றவை அடிமாடுகளாக்கப் படுகின்றன.
இந்த மாடுகளின் நிலைமைதான் இப்போது நம் கிரிக்கெட் ஸ்டார்களுக்கும். பெங்களூருவில் நேற்று நட ந்து முடி ந்த I.P.L. கிரிக்கெட் 4வது சீசனுக்கான ஏலத்தில் இ ந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி விலை போகவில்லை என்ற செய்தி ஏனோ நம் மனதைக் கனமாக்குகிறது. ஜெயசூர்யா, லாரா உட்பட ஒரு காலத்தில் கிரிக்கெட் வானில் நட்சத்திரங்களாகச் ஜொலித்த பலரையும் யாரும் ஏலம் எடுக்கவில்லை. இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்கவே அதிக போட்டி நிலவியதாகவும் கூறப் படுகிறது. இன்று ஏலச்சந்தைக்கு விடப்படாமல் அவரது உரிமையாளரான மும்பை இண்டியன்ஸ் அணி நிர்வாகத்தால் தக்க வைத்துக் கொள்ளப் பட்டுள்ள சச்சினும் கூட ஒரு நாள் இப்படி விலை போகாமல் போகலாம்.
லேபிள்கள்:
த.சிவக்குமார்
சனி, 8 ஜனவரி, 2011
சென்னை புத்தகக் கண்காட்சி 2011 January4 to 17
சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது இதில் சில அப்பட்டமான வியாபார நோக்கத்தோடு அதிக விலையில் விற்கப்படும் புத்தகங்களை அடையாளம் கண்டு ஒதுக்கி தள்ளி விட்டு உண்மையான உந்துதலோடும் நல்ல தகுதியான விலையோடு வந்துள்ள பதிப்புகளை வாங்குவதன் மூலம் நல்ல படைப்புகளை நீங்கள் ஊக்குவியுங்கள்.
நெம்புகோல் பதிப்பகம் வெளியிட்டுள்ள வழக்கறிஞர். தா.சிவக்குமாரின் மிகச்சிறந்த படைப்பான "கேளாத செவிகள் கேட்கட்டும்" பகத்சிங்கின் - கடிதங்கள் , கட்டுரைகள் முழுமையான தொகுப்பு - புத்தகம் எதிர் வெளியீடு , உயிர்மை , மித்ரா , எழுத்து , நாதம் கீதம்,கீழைக்காற்று, அலைகள் பதிப்பகம்
ஆகிய கடைகளில் கிடைக்கும்
நெம்புகோல் பதிப்பகம் வெளியிட்டுள்ள வழக்கறிஞர். தா.சிவக்குமாரின் மிகச்சிறந்த படைப்பான "கேளாத செவிகள் கேட்கட்டும்" பகத்சிங்கின் - கடிதங்கள் , கட்டுரைகள் முழுமையான தொகுப்பு - புத்தகம் எதிர் வெளியீடு , உயிர்மை , மித்ரா , எழுத்து , நாதம் கீதம்,கீழைக்காற்று, அலைகள் பதிப்பகம்
ஆகிய கடைகளில் கிடைக்கும்
எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பும் பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் வன்முறையும்
இன்று நமக்கு எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள் அனைவருமே இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் தண்டிக்கப்படக்கூடிய அளவிற்கு குற்றவாளிகளே ஆவார்கள். அந்த அளவிற்கு நமது ஜனநாயகம் சீரழிந்தது சின்னாபின்னமாகியுள்ளது இன்றைய எம்.எல்.ஏக்களும் ,எம்.பிக்களும் செய்யாத குற்றங்களே இல்லை எனலாம். இது எங்கோ குக்கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் முதல் இன்றைய குடியரசு தலைவர் வரையிலும் எதாவது ஒரு குற்றசாட்டு இல்லாதவர்களே இல்லை எனலாம்.மோகன்தாஸ் காந்தி சொன்னது போல எந்த பெண்ணும் இன்னும் இரவில் தனியாக வெளியில் செல்ல முடியாத நிலையே உள்ளது. அதுவும் அரசியல் வாதிகள் வெறிபிடித்த காமுகர்களாக எந்த பெண்ணையும் எந்த பாலியல் வன்முறையை ஏவுவதற்கு தயாராக உள்ளனர். இதில் எந்த கட்சிகளுக்கும் விதிவிலக்கில்லை என்பதே உண்மை ஆகும். பிகாரின் புர்னியா தொகுதியில் பி.ஜே.பியை சேர்ந்த எம்.எல்.ஏ ரூபம் பாதக் என்ற முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியரை கற்பழித்துள்ளார் அத்தோடு தொடர்ந்து அவர் மீது தனது பதவியை கொண்டு மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்முறையை ஏவி உள்ளார். ரூபம் பாதக் காவல் துறை முதல் முதல்வர் வரையிலும் புகார் கொடுத்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் தானே அந்த தண்டனையை கொடுக்க முன்வந்தார் அந்த வீரபெண்மனியின் செயல் இது போன்ற எந்த பாவத்தையும் துணிந்து செய்யும் அராஜக பேர்வழிகளுக்கு ஒரு பாடமாக அமையும் ஆனால் அரசோ எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக கூறியுள்ளது. அதன் அர்த்தம் இனியும் பெண்கள் மீது பாலியல் வன்முறை ஏவப்படும்,ஆனால் எம்.எல்.ஏக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதே இதன் அர்த்தம் ஆகும். இது போன்ற பெண்கள் தான் பாரதி கண்ட புதுமை பெண்கள் ஆவர்.
ஞாயிறு, 2 ஜனவரி, 2011
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இந்த புத்தாண்டிலும் வழக்கம் போலவே ஊழலும், லஞ்சமும், வஞ்சமும் தலைவிரித்து ஆடும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க போவதில்லை இருந்த போதிலும் நாமும் இன்னும் அதிகமாக இந்த அநீதிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து குரல் கொடுக்க வேண்டும் என்பது இயக்கத்தின் எதிர்பார்ப்பு ஆகும். இந்த ஆண்டை உழைக்கும் மக்களின் ஆண்டாக மாற்ற உறுதி எடுப்போம் .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
முகப்பு
புதிய பதிவுகள்