தமிழக அரசு , ஆவின் , தமிழ்நாட்டு போக்குவரத்து கழகம் , மற்றும் தமிழ்நாடு
மின்சார வாரியங்களில் கீழ் மட்டத்திலிருந்து, மேல்மட்டம் வரை வரைமுறை இல்லாமல் நடைபெற்று வரும் ஊழலை ஒழித்தாலே இந்த அரசு நிறுவனங்கள் நல்ல லாபத்தில் இயங்கும். ஆனால் ஊழலில் கீழ்மட்ட அதிகாரிகள் முதல், அமைச்சர்கள் வரை பங்கு வகிப்பதால் ,அந்த பங்குக்கு எந்தவிதமான தடையும் ஏற்படாமல் கட்டண உயர்வை சாதாரண ஏழை மக்கள் தலையில் சிறிதும் ஈவிரக்கமின்றி சுமத்தியுள்ளது ஆணவபோக்கு கொண்ட தமிழக அரசு.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்கள் கடும் அதிர்ப்தியில் உள்ளனர். தற்போது அரசியல் கட்சிகளால் எடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் அனைத்துமே இந்த மக்களை அணி திரட்டும் வகையில் இல்லாமல் பாவனை போராட்டங்களாகவே இருக்கின்றன.தற்போது உயர்த்தியுள்ள விலையுயர்வை குறைக்கும் வரை , சாதாரண மக்களும் தெருவிற்கு வந்து போராடும் வகையில் அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் தொடர் போரட்டங்களை நடத்த வேண்டும். 5 வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய தேர்தலில் எந்தமாற்றமும் வரப்போவதில்லை . இது போன்று வரக்கூடிய மக்கள் இயக்கங்களே உண்மையான மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக