உலகமே முதலாளித்துவத்தின் கோரப்பிடியில் சிக்கிகொண்டிருக்கும் போது விண்ணில் தோன்றிய விடிவெள்ளியாய், நேபாள வாணில் உதயமானது தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச கீதம். இரசிய, சீனா ஆகிய மிகப்பெரிய நாடுகளில் சோஷலிச சமுதாயம் சிதைந்து திருத்தல் வாதபோக்குகள் மிகுந்து தொழிலாளிவர்க்கம் நம்பிக்கை இழந்து இருக்கும் நேரத்தில் கடும் போராட்டத்தின் மூலம் தொழிலாளிவர்க்கத்தை அணிதிரட்டியது தோழர்.பிரசந்தா தலமையிலான நேபாள மாவோயிஸ்ட் கட்சி. மார்க்ஸ் கண்ட கனவை லெனின் ரசியாவில் நிஜமாக்கிகாட்டினார், அன்னியர் ஆதிக்கத்திலும் , முதலாளித்துவம் முழு வளர்ச்சி அடையாதிருந்த சீனாவை மக்கள் ஜனநாயக புரட்சிமூலம் வென்றெடுத்து மார்க்சியத்திற்கு புதிய பரிணாமம் கொடுத்தார் தோழர். மாவோ.
அதன் தொடர்ச்சியாக தோழர். பிரசந்தா தலமையிலான நேபாள மாவோயிஸ்ட் கட்சி மார்க்சிய கருவுலத்திற்கு பல புதிய செழுமைகளை சேர்த்துள்ளது. நேபாளம் இந்திய ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாக மன்னரின் ஆட்சியில் இருந்தது , அங்கு பின்தங்கிய விவசாயமும் , முன்னேறிய நகர்புற பகுதிகளுமான வித்தியாசமான பொருளாதார சூழ்நிலைகளை கணக்கில் எடுத்து கொண்ட தோழர். பிரசந்தா தலமையிலான நேபாள மாவோயிஸ்ட் கட்சி அங்கு உள்ள 7 கட்சிகளுடன் ஒப்பந்தத்திற்கு வந்தது.அதன் மூலம் மன்னர் ஆட்சி அகற்றப்பட்டு அரசியலமைப்பு வரைவிற்கான தேர்தல் நடைபெற்றது.அதில் பெரும்பான்மையான இடங்களை பிடித்தது நேபாள மாவோயிஸ்ட் கட்சி. தோழர் .பிரசந்தா பிரதமர் ஆனா போதும் மக்கள், அதிகாரத்திற்கு பலியாகாமல் மக்கள் இயக்கங்களின் தொடர்ச்சியாக தட்டி எழுப்பியது நேபாள மாவோயிஸ்ட் கட்சி . ராணுவ தளபதி பதவி சம்பதமாக குடியரசு தலைவர், பிரதமரின் முடிவை நிராகரித்ததால் தோழர்.பிரசந்தா பிரதமர் பதவியை துக்கு எறிந்தார். மக்கள் இயக்கங்களை நடத்தி மற்ற கட்சிகளின் மக்கள் விரோத போக்குகளை நேபாள மாவோயிஸ்ட் கட்சி அம்பலப்படுத்தியது. அதன் மூலம் நேபாள மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் வளம் வருகிறது.

அரசியலமைப்பு சட்டம் வரைவதில் மற்ற முதலாளித்துவ கட்சிகள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவருகின்றன. நேபாள மாவோயிஸ்ட் கட்சியானது அரசியலமைப்பு சட்டத்தில் பல சோஷலிச தன்மையுள்ள சரத்துகளை கொண்டு வர கடுமையாக போராடிவருகிறது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது எனலாம், இன்னும் இரண்டு மாதத்தில் புதிய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வரும் என்று பிரதமர். கானல் அறிவித்துள்ளார்.இது நேபாள மாவோயிஸ்ட் கட்சிக்கும் நேபாள உழைக்கும் மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று கூறலாம். இது உலகமெங்கும் இருக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு மகிழ்சியான செய்தியாகும்.