சிலர் எழுத்திலும், பேச்சிலும் மட்டுமே மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்று நினைத்து கொண்டு செயல்பட்டு கொண்டு இருக்கின்றனர். இவர்கள் இந்த நாட்டில் முதலாளித்துவம் உருவாக்கி உள்ள அனைத்து விதமான கலாச்சார சீர்கேடுகளிலும் சிக்கி கொண்டும் அதை அனுபவித்து கொண்டும் ,உருண்டு பிரண்டு கொண்டு இந்த சமூகத்தை மாற்றி விடமுடியும் என்று வீணாக புலம்பி கொண்டு வெட்டியாக பேசித்திரியும் காகிதபுலிகளால் இந்த சமூகத்தின் உதிர்ந்து விலப் போகும் நகத்தை கூட அசைக்க முடியாது என்பது தான் உண்மை. அனைத்து மக்களிடமும் பரஸ்பரம் புரிதல் , நம்பிக்கை ஆகியவற்றை உருவாக்காமல் நாம் இவற்றை சாதிக்க முடியாது. பகத் சிங் போன்றவர்களிடம் இருக்கும் தியாக உணர்ச்சியானது இன்று நம் யாரிடமும் இல்லை என்பதுவே உண்மை ஆகும். பகத் சிங், சேகுவேர போன்ற தனது நலனை பற்றி சிறிதும் சிந்திக்காத தனது மரணத்தின் மூலம் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்றால் மனமகிழ்ச்சியோடு தனது உயிரையும் கொடுத்து இந்த சமூகம் வாழ வாழ்ந்த மாவீரர்களை ஆணிவேராக பற்றி கொண்டு கடுமையாக மக்கள் தொண்டு ஆற்றினால் ஒளிய புரட்சி என்பது இந்திய மண்ணில் சாத்தியமில்லை என்பதே கசப்பான உண்மை ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக