அமெரிக்க முதலாளிகளின் லாப வெறிக்காக உலகம் முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வரவேண்டும்,எண்ணெய் வளங்களை கைப்பற்ற வேண்டும் என்று அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தான் , ஈராக் , போன்ற நாடுகளை கைப்பற்றுவதும் அங்குள்ள போராளி குழுக்களை ஒடுக்குகிறோம் என்று அந்த நாட்டு அப்பாவி மக்களை மீது குண்டு போட்டு கொள்வதும், அந்நிய நாடுகள் மீது பலவந்தமாக ஒப்பந்தங்களை திணிப்பதும், அமெரிக்க பாட்டாளிகளின் நலனுக்காக அல்ல அங்குள்ள முதலாளிகளின் நலனுக்கே என்பதை உணர்ந்து கொண்ட உணர்வு பெற்ற பாட்டாளி வர்க்கம் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் மட்டும் அல்ல அங்குள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் , பேரணிகள், முற்றுகை என்று அமெரிக்க அரசை ஆட்டம் காண வைத்து கொண்டுள்ளது . "ஒரு சதவிகிதமே உள்ள முதலாளிகளுக்கான அமெரிக்காவே ,அவர்களின் வர்த்தக நலன்களுக்காக 99 சதவிகித மக்களை வஞ்சிக்காதே" என்பதே அங்கு முக்கிய கோசமாக உள்ளது.
மறு உற்பத்தி என்பதே இல்லாமல் போய் அமெரிக்க பன்னாட்டு முதலாளிகள் தங்களின் அதீத லாப வெறிக்காக சொந்த நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்காததால் அங்கு வேலை வாய்ப்பின்மை தலை விரித்தாடுகிறது. அமெரிக்க அரசோ கடனில் முழ்கி கொண்டுள்ளது. வெகுவேகமாக தன்னெழுச்சியாக பரவி வரும் உழைக்கும் மக்கள் போராட்டம் , அங்குள்ள பெரிய தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் நேர்த்தியான போராட்ட வடிவத்தை தற்போது எடுத்துள்ளது. துனிசியாவில் ஆரம்பித்த இந்த புரட்சி தீ அமெரிக்க முதலாளித்துவ அரசையும் கண்டிப்பாக சுடும் என்பது நிச்சயம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக