வெள்ளி, 7 அக்டோபர், 2011

ஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு

அமெரிக்க கார்ப்பொரேட்டுகளுக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தை ஒடுக்க அமெரிக்க வல்லரசு வன்முறையைக் கையாளத்துவங்கிவிட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட சின்னஞ் சிறுமியைக் கூட எதிரியாகக் கருதி கைது செய்யும் அளவிற்கு அமெரிக்க வல்லரசு இப்போராடத்தைக் கண்டு உள்ளூரப் பயந்து நடுங்கிக் கொண்டுள்ளது. லெபனானில் போராட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது என்று ஜனநாயக உரிமை, மனித உரிமை பற்றிப் பேசிய அதே அமெரிக்க வல்லரசு இன்று தனது சொந்த மக்கள் மீதே மிகப்பெரும் வன்முறைத் தாக்குதல் ஒன்றுக்குத் தயாராகி வருகிறது என்பதையே இந்நிகழ்வுகள் முன்னறிவிக்கின்றன.


தன் கால்விரலின் கூரிய நகங்களுக்கிடையில் ஒரு சின்னஞ்சிறு கோழிக் குஞ்சை தூக்கிச் செல்லும் மிகப் பெரும் வல்லூரைப் போல் அமெரிக்க வல்லரசு தன் போலீசாரால் அச்சிறுமியைக் கைது செய்து புறங்கையைக் கட்டி அழைத்துச் செல்லும்போதுகூட அச்சிறுமி எவ்விதப் பதட்டமும் இன்றி ஒரு குழந்தைமுகத்துடன் அமைதியாக உடன் செல்லும் அந்த வீடியோ காட்சி இதுதான்:
இந்த வீடியோவில் உள்ள கைதுக் காட்சிகள் 2011 அக்டோபர் 1ம் நாள் அமெரிக்க நேரப்படி மாலை 4:30 லிருந்து 5:00 மணிக்குள் நடைபெற்றவை. அச்சிறுமியைக் கைதுசெய்யும் காட்சி வீடியோவின் காட்சி நேரத்தில் 5:10 ல் உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்