சனி, 5 நவம்பர், 2011

வரலாறு திரும்புகிறது - நவம்பர் 7 புரட்சி தினம்



ஆண்டாண்டு காலமாக பெரும்பகுதி   மக்கள்  உழைக்க, விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் சுகபோகமாக வாழ்ந்து அந்த உழைக்கும் மக்களை சுரண்டி வந்த கொடுமைக்கு முடிவு கட்டிய புரட்சி நாள் நவம்பர் 7 ,1917.   ஸ்பாட்டகஸ் மனதில் பற்றிய தீப்பொறி , பிரான்சில் பாரி கம்யூனாய் கனன்ற உழைக்கும் மக்கள் எழுச்சி ,ரஷியாவில் அகம்பாவத்தின் உச்சியில் கோலோச்சி வந்த சுரண்டல்காரர்களின் தலைவன் கொடுங்கோலன்  ஸார் அரசன் மீது பெரு நெருப்பாய் இறங்கியது.
மாமேதை மார்க்ஸ்,தோழர் .எங்கல்ஸ் உருவாக்கிய மாபெரும் தத்துவமான மார்க்சிய வழியில் தோழர்.லெனின் ,தோழர்.ஸ்டாலின் தலைமையில் வெகுண்டெழுந்த  ரஷிய பாட்டாளி வர்க்கம் முதல் பாட்டாளிவர்க்க சர்வதிகார அரசை நிறுவியது. உலக நாடுகளின் நெருக்குதல்கள் அனைத்தையும் தாக்கு பிடித்து திட்டமிட்ட பொருளாதார உற்பத்தியால் பொருளாதார தன்னிறைவை எட்டியதோடு உலகின் சுதந்திரம் பெற்ற நாடுகளுக்கு பொருளாதார , விஞ்ஞான உதவிகளை வாரி வழங்கியது சோவியத் யூனியன். தனி சொத்துடமைக்கு முடிவு கட்டப்பட்டு நிலங்கள் அனைத்தும் கூட்டுபண்ணைகளாக  நிர்வகிக்கப்பட்டது. தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்பட்டு வர்க்க பேதமற்ற சமூக உற்பத்தியை நோக்கி வீறு நடைபோட்டது. உலகத்தையே கபளீகரம் செய்யும் முனைப்போடு பெரும்படை திரட்டி வந்த பாசிச ஹிட்லரின் பெரும்படையை முறியடித்து உலகையே காப்பாற்றியது சோவியத் யூனியனின் செம்படை . மார்க்சிய செவ்விலக்கியங்கள் உலக மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் கப்பல் கப்பலாக அனுப்பப்பட்டு உலகம் முழுவதும் புரட்சி விதைகள் தூவப்பட்டது. மாபெரும் நிலப்பரப்பு கொண்ட சீனம் தோழர். மாவோ தலைமையில் செஞ்சீனமாக மலர்ந்தது. அமெரிக்க காலடியில் சிறு துண்டாக கிடந்த கியூபா எழுச்சி பெற்றது. அமெரிக்காவின் கொடூரமான ஆக்கிரமிப்பிற்கு உள்ளான வியட்நாம் வீறுகொண்டு எழுந்தது. பல நாடுகள் எகாதிபத்தியின் பிடியில் இருந்து விடுதலையானது. உலக தொழிலாளர்கள் அனைவரையும் சோவியத் யூனியன் தாய் போல் அரவணைத்தது. 

இன்று கம்யூனிச முகாம் முற்றாக தகர்ந்த போதும் நேபாளத்தில் வந்துள்ள மாற்றமும், உலகம் முழுவதும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள முதலாளித்துவ அரசுகளுக்கு எதிராக உழைக்கும் மக்களின் போராட்டமும் மீண்டும் ஒரு நவம்பர் 7 போல பல நாடுகளில் புரட்சிகள் வெடிக்கும் நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது. புரட்சி நீடுழி வாழ்க! 

2 கருத்துகள்:

  1. Environment which favors the burst of revolution had already been formed. The only lag that keeps us behind is a lack of strong platform linked with ideas, power which posses the capability of taking the fire and carrying out the change.

    Lets strengthen the platform... Time is here

    Long Live the Revolution

    பதிலளிநீக்கு
  2. இந்திய மண்ணில் புரட்சி இனியும் தூரம்மில்லை. இந்திய நாட்டின் கம்யூனிச இயக்கங்கள் சிதறிகிடக்கின்றன. இது இன்றைய பூர்ஷ்வா அரசிற்கு சாதகமாக உள்ளது. கம்யூனிசம் வெல்ல துரோகிகளை அடையாளம் கண்டு அழிக்க வேண்டும். கம்யூனிஸ்டு என்கிற பெயரை மட்டும் வைத்துக் கொண்டு கம்யூனிசத்தை அழிக்கும் கயவர்கள் நசுக்கப்பட வேண்டும். கம்யூனிஸ்டு என்று சொல்லிகொண்டு உழைப்பாளி மக்களை கொன்றுகுவிக்கும் நாசகர கும்பல்கல் முதலாளிகளின் கூஜாக்களை புரட்சியிலிருந்து தள்ளிவைத்தாலே இந்திய மண்ணில் தொழிலாளி வர்க்க புரட்சி சாத்தியமே.

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்