ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

சி.பி.எம்மின் அமெரிக்க எதிர்ப்பு வேசமும் - அமெரிக்க ஆதரவு பாசமும் - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்


இந்தியாவில் அரசியல் கட்சிகளின் பல அந்தரங்கங்களை விக்கிலீக்கிசில் அடுத்தடுத்து வந்த கேபிள்கள் இந்த கட்சிகளின் முதலாளித்துவ ஆதரவு  நிலையினை பகிரங்கப்படுத்தின. அணுசக்தி ஒப்பந்தமே இந்திய முதலாளிகளின் நிர்பந்தத்தால் தான் அரசு கவிழ்ந்தாலும்  பரவாயில்லை எம்பிக்களை விலைக்கு  வாங்கியாவது  அரசை  காப்பாற்றலாம் என்று காங்கிரஸ்  அரசு கொண்டு வந்தது. இது மட்டுமல்ல அப்போது இதற்கு மாநாடு போட்டு எதிர்ப்பு தெரிவித்த பி.ஜே.பி யும் கூட அந்த மாநாட்டு தீர்மானத்தை பெரிதாக கண்டு கொள்ளவேண்டாம் , இது மக்களை ஏமாற்ற நாங்கள் போடும் மாநாடு , நாங்களும்  இந்த  ஒப்பந்தத்தை ஆதரிக்கிறோம் என்று அமெரிக்காவிற்கு  பச்சை  கொடி  காட்டியதுஇதை எல்லாம் மிஞ்சும் வகையில் அருண் ஜெட்லி   ‘நாங்கள் சந்தர்ப்பவாதிகள்’ பொதுமேடைகளில்  பேசுவதை எல்லாம் நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்  என்று அமெரிக்க தூதரிடம் சொல்லுகிறார்இப்படி காங்கிரசும் , பி.ஜே.பியும் இந்திய முதாளித்துவத்தின் இருவேறு முகங்கள் என்பதும் இரண்டுமே போட்டி போட்டுக்கொண்டு முதலாளித்துவ சேவை செய்வதும் அசலும் , நகலுமாக அம்பலமாகி இருக்கிறது.


 இவர்களோடு சிபிஎம்மும் (CPM)  ,சிபிஐயும் (CPI(M)   சேர்ந்து கொண்டது தான் அதை ஒரு உண்மையான உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதி என்று இதுநாள் வரை நம்பி அந்த கட்சிக்காக உழைத்து கொண்டிருந்த அடிமட்ட தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ‘அமெரிக்க ஏகாதிபத்தியம் நமது எதிரி,  அது எந்த வடிவில் இங்கு வந்தாலும்  எதிர்ப்போம்என்று தொண்டை கிழிய டெல்லி பாரளமன்றத்தில் ஒருபுறம் கத்துவதும், மேற்கு வங்காளத்தில் அமெரிக்காவின் முதலாளிகளுக்கு சந்தையை அகலத்திறந்து விடுவதுமான இரட்டை வேடத்தில் நடித்து வந்தது விக்கிலீக்ஸ்  மூலம்  அம்பலமாகியுள்ளது. 

 அதற்கு பதில் அளித்த புத்ததேவ் இது ஒருபக்கமான உண்மை என்று கூறினார். ஆமாம் அதன் மறுபக்கம் அனைவரும் அறிந்ததுதான். உழைப்பவர்களின் தோழன் என்று சொல்லி கொண்டு டாட்டா போன்ற பெரும் முதலாளிகளுக்கு கைகட்டி சேவகம் செய்ததும், தங்கள் நிலங்கள் அநியாயமாக அரசால்  பரிக்கப்படுவதை எதிர்த்து போராடிய விவசாயிகளை துப்பாக்கியால் சுடுவதும், முதலாளிகளோடு கை கோர்த்து கொண்டு  தொழிலாளிகளுக்கு துரோகம் செய்யும் அதன் தொழிற்சங்கங்களும், கேரளாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கு  உள்ளானஒருவரை பொலிட் பீரோ  உறுப்பினராக கொண்டிருப்பதும், உதட்டளவில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் மறுபக்கம் இந்திய முதாளித்துவ வர்க்க சேவையும், கள்ளத்தனமாக அந்நிய மூலதனத்தை அனுமதிப்பதும், மாபெரும் ஊழல் கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி அமைப்பதும், சொத்து சேர்ப்பதும்,பாராளமன்ற அரசியலில் மூழ்கி திளைத்து ஊழல் செய்து கொண்டிருக்கும் சாதாரன முதலாளித்துவ கட்சிகள் தான் தாங்கள் என்பதை தான் மறுபக்க உண்மை என்று புத்த தேவ் சொல்கிறார் போலும்

இனிமேலும் இந்த உழைக்கும் வர்க்கத்திற்கு துரோகம் செய்யும் இவர்களை உழைக்கும் வர்க்கம் அருகிலையே சேர்த்து கொள்ளாது என்பது தான் யதார்த்தம். நாம் வைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் என்னவென்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்(CPI) , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்(CPI(M)  தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டாலே  அதுவே அது கம்யூனிசத்திற்கும்  தொழிலாளிவர்க்கதிற்கும்  அந்த கட்சிகள் செய்யும் பெரும் உதவியாக இருக்கும்.

4 கருத்துகள்:

  1. THIS ARTICLE NOT HAVING ANY EVIDENCE AGAINST COMMUNIST, IN INDIA COMMUNIST AND INDIAN BIG INDUSTRIALIST JOINT AGAINST MULTI NATIONS BUSINESS JAINT S ITS FOR SAVING INDIAN INDUSTRIES ALONG WITH INDIAN WORKERS, Change is change less law
    all changes towards working class benefit, not for capitalist this web sit having cheep third class articles against CPI(M)
    ELIL ARASAN
    Communist Party Of Australia
    Melbourne Australia

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. Dear Dhani,

    I am not sure what are you trying to say.. It will be very much helpful that if you are more specific. I can barely understand your last sentence from which I can only interpret that you are having an emotional binding towards CPI(M) and CPI.

    Even an emotional link towards ideology is not acceptable.

    The activities of the CPI and CPI(M), when analyzed in materialistic approach only yields the results that had been posted in the article. The only thing that the author missed is that he should have been provided the Wiki leaks cable number which can act as a piece of evidence.....

    Looking forward to here from you... Nimrodh

    பதிலளிநீக்கு
  4. Dear Dhani,
    There is no contradiction of fact between you and this author. You says that, "IN INDIA COMMUNIST AND INDIAN BIG INDUSTRIALIST JOINT AGAINST MULTI NATIONS BUSINESS JAINTS IT IS FOR SAVING INDIAN INDUSTRIES ALONG WITH INDIAN WORKERS. Author also point out the same with specific instances of CPI(M)'s collaborations with BIG INDIAN INDUSTRIALISTS for which no one need any evidence.
    But this approach of CPI(M is not a Communistic approach. It is nothing but a Class Collaboration. This is what Lenin condemned German Communists and Kautski for their alliance with German National Capitalists against other Imperialists.
    Further you and your CPI(M) people are trying to CHEAT the working class that this collaboration with the Big Indian Industrialists is "towards working class benefit, not for capitalists". Can you assure that all the profits earned by the Big Indian Industrialists will be distributed along with working class. Cheat! Cheat! Great Cheaters. You may say that "without saving the Big Indian Industrialists, how can we save the Indian Working Class". This idea itself is against the basic tenants of Marxism. With out Industrialists or Capitalists this world can survive with the labour of Working Class; but without working class world cannot survive even a single day.

    Further though it is wrong, still CPI(M) holds that it's basic line is People's Democracy which aimed against the Big Indian Industrialists. But today they are even not truthful to their own ideology. As you are rightly pointed out, they are now joined hands with Big Indian Industrialists. Shame! Shame!
    Try to think it over from the sufferings of Working Class not from the sufferings of Big Indian Industrialists.

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்