சென்ட்ரல்
ஆர்கனிசேசன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU), அமைப்பு ,26 .02 .2012 ( ஞாயிறு ) அன்று .
மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை மதுரை, மணியம்மை மழலையர் & தொடக்கப்பள்ளியில்
, "உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம்
அமைக்கும் உரிமையினைத் தடுக்கும் போக்கை முறியடிப்போம்" என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை
சிறப்புடன் நடத்தியது , சி.ஓ.ஐ.டி.யு. யின் பொறுப்பாளர் தோழர் கதிரேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கம் சர்வதேச
கீதத்தோடு துவங்கியது . உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டி மாநில அமைப்பாளர்
தோழர் வரதராஜ் , 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட தலைவர் தோழர் சுந்தர்
, ஏ .ஐ.டி.யு.சி யை சேர்ந்த தோழர் கருப்பன் சித்தார்த்தன் , அரசு போக்குவரத்து கழகத்தை
சேர்ந்த தோழர் சம்பத் , மதுரை மாவட்ட அச்சகத் தொழிலாளர் சங்கத்தின் அமைப்பு செயலாளர்
தோழர் பாலமுருகன் , பி.எஸ்.என்.எல்.இ.யு. தொழிற் சங்கத்தை சேர்ந்த தோழர் ஆனந்த் ஜெயகுமார்
, அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த தோழர் பாரதி, மாற்றுக்கருத்து ஆசிரியரும், கேளாத செவிகள்
கேட்கட்டும்- பகத்சிங் புத்தகத்தின் ஆசிரியருமான தோழர் த.சிவகுமார் , ஆகியோர் தொழிற்
சங்கங்களின் இன்றைய நிலையினை விரிவாக எடுத்துரைத்தனர்.
இறுதியாக இந்த கருத்தரங்கத்திற்கு
வந்திருந்த அனைவரையும் எழுச்சியூட்டும் விதமாக சிறப்புரையை சி.டபிள்யு.பி.யின் தென்
இந்தியப் பொது செயலாளர், தோழர்.அ.ஆனந்தன் அவர்கள் நிகழ்த்தினார். நூற்றுக்கணக்கான
தொழிலாளர்கள் , தொழிற்சங்க தலைவர்கள் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக