பேருந்து , பால் , மின்சார கட்டண உயர்வை
சாதாரண மக்கள் தலையில் சுமத்திய நமது தமிழக முதல்வர், இந்த கட்டண உயர்வினால்
ஊழல் மற்றும் லஞ்சம் வாங்குவதிலும் மனித உரிமைகளை மீறுவதிலும் முன்னோடியாகவும் ,
அரசின் அடியாட்களாகவும் உள்ள காவல் துறையினர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது
என்று காவல் துறைக்கு ராணுவத்தில் உள்ளதை போலவே சிறப்பு கேண்டின்களை திறக்க உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு ரூபாய்.47 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு என்று காவல் துறைக்கு அள்ளி கொடுக்கிறார்,
ஏனெனில் மக்கள் அநீதிகெதிராக திரண்டெளுந்தால்
அவர்களை அரசின் மீது விசுவாசத்தோடு காவல் துறை அடித்து நொறுக்கும் அல்லவா?
புதன், 30 நவம்பர், 2011
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
லேபிள்கள்:
இயக்கம்
செவ்வாய், 29 நவம்பர், 2011
பால் மற்றும் பேருந்து கட்டணத்தின் மீதானக் கடுமையான விலை உயர்வு சமூக மாற்றம் பேணும் சக்திகள் செய்ய வேண்டியது என்ன?
தமிழக அரசு தற்போது ஆவின் பால் விலையையும், பேருந்து கட்டணத்தையும் மிகக் கடுமையாக உயர்த்தியுள்ளது. பால் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய்.7ம், பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் 80 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் கடுமையான பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ள குறிப்பாக ஏழை எளிய மற்றும் மத்தியதர மக்கள் தலையில் பேரிடியாகத் தற்போதைய தமிழக அரசின் பால் விலை, பேருந்து கட்டண உயர்வு இறங்கியுள்ளது. இது போதாதென்று மின் கட்டணமும் கூடிய விரைவில் உயர்த்தப்படும் என்ற தமிழக அரசின் ‘இனிப்பான’’’ செய்தியை எப்படிக் கைக்கொள்வதெனத் தெரியாது தமிழக மக்கள் விழிபிதுங்கிக் கொண்டுள்ளனர்.
லேபிள்கள்:
ம. பிரேம் குமார்
திங்கள், 28 நவம்பர், 2011
இந்தியாவில் நிலப்பிரபுக்களை எந்த எலிப் பொந்துக்குள் தேடுவது? புதிய ஜனநாயகம் பேசும் புரட்சியாளர்கள் கண்டுபிடித்துச் சொல்வார்களா?
பொய் எதிரிகளும் - நிழல் யுத்தங்களும்
மார்க்சிஸத்தின் சமூக மாற்றக் கண்ணோட்டத்தின் அடிப்படையே சமூகத்தின் பொருளாதார அடித்தளத்தை மாற்றும் வகையில் போராட்டத் திட்டங்களை வகுத்தெடுப்பது குறித்ததுதான். இன்று இந்திய சமூகத்தின் அடித்தளமாக நிலவுகின்ற பொருளாதாரம் முதலாளித்துவ பொருளாதாரமாகும்.
இவ்வாறு நாம் குறிப்பிடுகையில் CPI, CPI(M), CPI(ML) போன்ற கட்சிகள் இந்தியாவில் நிலவுவது முதலாளித்துவப் பொருளாதாரம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை; நாட்டின் பல இடங்களில் நிலபிரபுத்துவ உற்பத்தி முறையே நிலவுகிறது என்பதே தங்களது அரசியல் கணிப்பாகும் எனக்கூறலாம். அக்கணிப்பினை தவறானதென்று நிரூபிக்க எத்தனையோ ஆதாரங்களை முன் வைக்க முடியுமென்றாலும் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையில் இவர்கள் ஒரு கேள்விக்கு விடை கூற வேண்டி வரும்.
ஞாயிறு, 27 நவம்பர், 2011
எது வளரும் முரண்பாடு -நாகர்கோவில் மார்க்சிய படிப்பு வட்டம்
27 .11 .2011 அன்று நாகர்கோவில், தக்கலையில் உள்ள லைசியம் பள்ளியில் மார்க்சிய சிந்தனை மையத்தின் மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தோழர்களும், இடது சாரி சிந்தனை கொண்டவர்களும் இந்த படிப்பு வட்டத்தில் கலந்து கொண்டார்கள்.தோழர் போஸ் அவர்களை ஒருங்கிணைப்பாளராக கொண்டு தோழர்.பிரசாத் தலைமையில் நடந்த இந்த வகுப்பில் தோழர்.அ.ஆனந்தன் அவர்களால் கடந்த மாதத்தில் எடுக்கப்பட்ட இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் தொடர்ச்சி இந்த மாதம் எடுக்கப்பட்டது.
லேபிள்கள்:
தோழர்.மகிழ்ச்சி
பகத்சிங் படத்தை திரையிட ஐ.எப்.எப்.ஐ. மறுப்பு
பகத்சிங்
பற்றிய 'இன்குலாப்'
என்ற குறும்படத்தை சண்டிகரை சேர்ந்த கவ்ரவ் சாப்ரா இயக்கியிருந்தார். அந்த படம்
42 வது இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆப் இந்திய (ஐ.எப்.எப்.ஐ)ல் திரையிட தெரிவு
செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த படம் ஐ.எப்.எப்.ஐ.ல் திரையிட மறுக்கப்பட்டுவிட்டது.
வெள்ளி, 25 நவம்பர், 2011
சரத் பவாருக்கு விழுந்த அறை ! ஒரு எச்சரிக்கை
24 .11 .2011 அன்று டில்லியில் உள்ள என்.டி.எம்.சி. அரங்கத்திலிருந்து
வெளியே வந்த மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத் பவாரின் கன்னத்தில் சிங்கம் போல் பாய்ந்து வந்த இளைஞர்
ஹர்விந்தர் சிங் ஓங்கி ஒரு அறை விட்டார். அவரை காவல் துறையினர் சுற்றி பிடித்த போது அவர் கோபத்தோடு "ஊழல்வாதிகளுக்கு
இனி இது தான் கதி. பணவீக்கமும், விலைவாசியும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கு
சரத் பவார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை"என்று கூறினார். இந்த கோபம் ஹர்வீந்தர் சிங்க்கு மட்டும் அல்ல,
இந்தியாவில் உள்ள 90 % மக்களுக்கு
உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கிறது.
வியாழன், 24 நவம்பர், 2011
பிஸியோதெரபி மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளும், அவர்களின் சமுதாயக் கடமையும்
உடல் இயன்முறை மருத்துவம் (பிஸியோதெரபி) இன்று உலக அளவில் ஒரு
வளர்ச்சியடைந்த நவீன மருத்துவ முறையாகும். மேலை நாடுகளில் இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றி வளர்ச்சியடைந்த இம்மருத்துவமுறை இன்று
இந்தியாவிலும் பரவலாக பின்பற்றப்படும் மருத்துவமுறையாக உருவெடுத்துள்ளது.உடலியக்க செயல்பாட்டை விஞ்ஞான ரீதியாக அறிந்து உடலியக்க குறைபாடுகளைப்
போக்கும் நவீன மருத்துவ வடிவமாக இன்று பிஸியோதெரபி மருத்துவம்
வளர்ந்துள்ளது. வலியைத் தோற்றுவிக்கும் அனைத்து உடல் குறைபாடுகளை
பின்விளைவு ஏற்படுத்தாத வகையில் சரி செய்வதாகவும்; வலுவிழந்த தசை, தசைநார்,
நரம்புகளை உடலியக்க அணுகுமுறையில் வலுப்படுத்துவதாகவும்; இதய சம்பந்தமான
நோய்களின் உடலியக்க பயிற்சிகளின் மூலம் சரி செய்வதாகவும்; மூளை வளர்ச்சி
கோளாறுகள் மேலும் பெண்களுக்கு பொதுவாகவும் குறிப்பாக கர்ப்ப காலங்களில்
ஏற்படும் உடலியக்க கோளாறுகளை சரி செய்வதாகவும்; எலும்பு முறிவு அறுவை
சிகிச்சை உட்பட அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கும் மிகவும் தேவைப்படக்கூடிய
ஒரு உடன் மருத்துவமாகவும்; நூறு சதவீதம் உடலியக்க நோய்களுக்கான பிரிக்க
முடியாத மருத்துவமுறையாக பிஸியோதெரபி மருத்துவம் இன்று
வளர்ச்சியடைந்துள்ளது.
மேலும் படிக்க
லேபிள்கள்:
ம. பிரேம் குமார்
செவ்வாய், 22 நவம்பர், 2011
ஆடு, கோழி பலியிடல் தடை அரசாணையும் தடம்புரண்ட தமிழக கம்யூனிஸ்டுகளின் வர்க்க சமரச - ஜாதியவாதச் சறுக்கலும்
முதற்பதிப்பு:டிசம்பர் 2003
கோயில்களில் பறவைகளையும் விலங்குகளையும் பலி
கொடுப்பதை தடை செய்யும் வகையில் 1950 முதல் இருந்து வரும் சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக
அமல்படுத்த தமிழக அரசு சமீபத்தில் ஓர் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணை பல்வேறு கட்சிகள் மற்றும்
அமைப்புகளிடையே பல்வேறு விதமான பிரதிபலிப்புகளை
வெளிக்கொணர்ந்துள்ளது. பல கட்சிகள்
தங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்குப் புறம்பான நிலைபாடுகளை இந்த விஷயத்தில்
எடுத்துள்ளன. எனவே தமிழக அரசின் இந்த ஆணை
இப்போது பிறப்பிக்கப் பட்டுள்ளதன் பின்னணி என்ன? இது போன்ற ஆணைகள் மற்றும்
சட்டங்கள் குறித்து உணர்வு பெற்ற உழைக்கும்
வர்க்கத்தின் நிலை எதுவாக இருக்க வேண்டும்? பல்வேறு கட்சியினர் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் என்று தங்களைக்
கூறிக் கொள்வோர் தங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமான நிலையினை எடுக்கும்
நிலைக்கு ஏன் இந்த விஷயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்? என்ற கேள்விகளை அலசி ஆராய்வது
இந்தப் பிரசுரத்தின் நோக்கமாகும்.
திங்கள், 21 நவம்பர், 2011
கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP) - நவம்பர் தினப்பொதுக்கூட்டம்
கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP) அமைப்பின் நவம்பர் தினப்பொதுக்கூடம் 20.11.2011 அன்று மாலை 6 மணிக்கு தொடக்கி இரவு 9 மணி வரை தேனி, பகவதி அம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. தோழர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உழைக்கும் மக்கள் போராட்ட கமிட்டியை சேர்ந்த தோழர் வரதராஜ் , மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர்.த.சிவகுமார் ,தோழர்.சத்தியமூர்த்தி, கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP)இன் தென்னிந்தியாவிற்கான பொது செயலாளர் தோழர்.அ.ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மிகவும் நேர்த்தியோடும் ஒழுங்கோடும் நவம்பர் தினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேனி பகுதி வாழ் உழைக்கும் மக்களுக்கு இந்த கூட்டம் ஒரு புது எழுச்சியை கொடுக்கும் விதமாக சிறப்புற நடைபெற்றது.
தமிழக அரசு பால் , மின்சார , பஸ் கட்டணங்களை குறைக்கும் வரை தொடர் போராட்டங்களை நடந்துவோம்
தமிழக அரசு , ஆவின் , தமிழ்நாட்டு போக்குவரத்து கழகம் , மற்றும் தமிழ்நாடு
மின்சார வாரியங்களில் கீழ் மட்டத்திலிருந்து, மேல்மட்டம் வரை வரைமுறை இல்லாமல் நடைபெற்று வரும் ஊழலை ஒழித்தாலே இந்த அரசு நிறுவனங்கள் நல்ல லாபத்தில் இயங்கும். ஆனால் ஊழலில் கீழ்மட்ட அதிகாரிகள் முதல், அமைச்சர்கள் வரை பங்கு வகிப்பதால் ,அந்த பங்குக்கு எந்தவிதமான தடையும் ஏற்படாமல் கட்டண உயர்வை சாதாரண ஏழை மக்கள் தலையில் சிறிதும் ஈவிரக்கமின்றி சுமத்தியுள்ளது ஆணவபோக்கு கொண்ட தமிழக அரசு.
சனி, 19 நவம்பர், 2011
அமெரிக்க அரசின் கொடூர ஒடுக்குமுறையைத் தாண்டியும் தொடர்கிறது வால் ஸ்ட்ரீட் முற்றுகை
அமெரிக்க அரசின் முதலாளித்துவ கொள்ளைக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களாக
வால் ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டம்
அதுவாகவே நீர்த்து போகும் என்று கனவு கண்டது அமெரிக்க அரசு , ஆனால் வால்
ஸ்ட்ரீட் முற்றுகை போராட்டத்திற்கு நாளுக்கு நாள் அமெரிக்கவில் மட்டுமல்ல
உலகம் முழுவதுமே ஆதரவு பெருகி கொண்டே வருகிறது. போராட்டம் தீவிரமடைந்து
அமெரிக்க அரசையே ஆட்டம் காண வைக்கிறது. போராட்டக்காரர்களை காவல் துறையினர் ,
பலவகையிலும் துன்புறுத்த ஆரம்பித்துள்ளனர். பூங்காகளில் தங்கியிருந்த
மக்கள் வலுகட்டாயமாக காவல் துறையினரால் வெளியேற்றப்படுகின்றனர்.
லேபிள்கள்:
இயக்கம்
வெள்ளி, 18 நவம்பர், 2011
இடதுசாரி அங்கிக்குள் ஒளிந்திருக்கும் ஜாதியம்
(மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர், 2008)
இடதுசாரி
ஞானஸ்நானம் வழங்கும் மதகுருமார்களாக தங்களைத் தாங்களே வரித்துக் கொண்டு, சிற்றிதழ் நடத்துபவர்கள், பின்நவீனத்துவவாதிகள் என்ற
பெயர்களில் தங்களை அழைத்துக் கொள்ளும் பலர், தமிழகத்தில் இடதுசாரி
முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற ஒளிவட்டம் பின்னால் சுழல வலம்வந்து கொண்டுள்ளனர். ஒரு
காலத்தில் வெறும் அரவமாக ஒலித்த அவர்களின் குரல்கள் தற்போது பேரிரைச்சலாக உருவெடுத்துள்ளன. அதற்கு காரணம் அவர்களின் குரல் வலிமை பெற்றுவிட்டது,
அதனால் அதன் எதிரொலி அதிகமாகிவிட்டது என்பதல்ல. தங்களது பத்திரிக்கைகளின் பக்கங்களில் 25 சதவீதத்தை விளம்பரங்களுக்கும் 60 சதவீதத்தை சினிமா மற்றும்
சினிமா நட்சத்திரங்கள் குறித்த செய்திகளை எழுதி நிரப்பவும் பயன்படுத்தும் பிரபல பத்திரிக்கைகளும்
கூட இதுபோன்ற எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் எழுதுவதற்கென தங்களது இணை இதழ்களில்
வாய்ப்பளிக்கின்றனர். அவை அவ்வாறு வாய்ப்பளிப்பதற்கான காரணம், இடதுசாரி சிந்தனைகளின் மேல் அந்த பத்திரிக்கைகளுக்கு திடீரென ஏற்பட்டுவிட்ட
புதிய காதலா அல்லது அதுவும் ஒரு வித்யாசமான வியாபார யுக்தியா என்பது போன்ற வியங்களுக்கு நாம் பின்னர் வருவோம்.
லேபிள்கள்:
2008,
மாற்றுக்கருத்து 15 செப்டம்பர் - 14 நவம்பர்
விலைவாசி உயர்வில் சிக்கி தவிக்கும் மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியுள்ள பஸ்,பால், மின்சார கட்டண உயர்வு !
ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வு, வீட்டு வாடகை உயர்வு , மற்றுமுள்ள அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் உழைக்கும் மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கும் இந்த நிலையில் தமிழக அரசு எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்ப்பது போல பஸ் , பால் மற்றும் மின்சார கட்டணங்களை சாதாரண மக்கள் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு உயர்த்தியுள்ளது . சட்டமன்ற தேர்தல் வெற்றி, உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்று அடுத்தடுத்த வெற்றிகளை மக்கள் இந்த ஆளும் அரசுக்கு தந்ததற்கு பரிசாக இந்த அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வை பேருடியாக சாதாரண மக்கள் மீது இறங்கியிருக்கிறது.
லேபிள்கள்:
இயக்கம்
அண்ணா நூற்றாண்டு நூலகம் இட மாற்றம் - ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?
தமிழகத்தில் ஒரு கலாசாரம் நிலவுகிறது. இங்கு அ.தி.மு.க.அல்லது தி.மு.க இரண்டில் எதாவது ஒரு கட்சி ஆட்சிக்கு வருகின்றது. இதில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முந்தைய ஆட்சியில் போட்ட அனைத்து திட்டங்களையும் அடியோடு மாற்றுகின்றன. தி.மு.க. ஆட்சியில் அவர்கள் அடித்த கொள்ளை போக எதாவது உருப்படியாக செய்த காரியம் எதுவென்றால் அண்ணா நூற்றாண்டு நூலகம் கொண்டு வந்தது தான். இன்றுள்ள நவீன உலகத்திற்கு ஏற்றவாறு வீடியோ லைப்ரரி,குழந்தைகள் பிரிவு , போட்டி தேர்வு பிரிவு, கண் பார்வை அற்றவர்களுக்கான பிரிவு என பல நவீன வசதிகளோடு இந்த நூலகம் அமைந்துள்ளது.சென்னையில் பழமையான நூலகமான கன்னிமாராவை விட பல மடங்கு நவீன வசதிகளை கொண்டு அண்ணா நூற்றாண்டு நூலகம்கட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
லேபிள்கள்:
கு.கதிரேசன்
ஞாயிறு, 13 நவம்பர், 2011
தியாகி பகவதி சரண் வோரா
தியாகி பகவதி
சரண் வோராவும், அவரது மனைவி துர்க்கா தேவியும் HSRA புரட்சிகரக் கட்சியின் தீவிர உறுப்பினர்கள். பகவதி சரண் வோராவின் பெயரிலையே
கட்சியின் பல ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வலிமை
மிக்க எழுத்துக்கு சொந்தக்காரர்.காந்தியடிகள் புரட்சியாளர்களைக் கண்டித்து எழுதிய "வெடிகுண்டின் வழிபாடு " எனும் கட்டுரைக்கு
வோரா எழுதிய தத்துவார்த்த மருப்புரையான 'வெடிகுண்டின்
தத்துவம்' எனும் கட்டுரை அவரது எழுத்து வன்மைக்கு ஓர்
எடுத்துக்காட்டு.
1930 ம் ஆண்டு மே மாதம் 28 ம் நாள், தங்கள்
தயாரித்திருந்த வெடிகுண்டை சோதனை செய்து பார்க்கும்
பொது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமுற்று சிறிது நேரத்தில் உயிரழந்தார் பகவதி சரண் வோரா.சிறைக்கு வெளியில்
இருந்து தோழர்களில் அதிகபட்ச தத்துவார்த்த தெளிவு
பெற்றிருந்த தியாகி பகவதி சரணின் துயரம் மிக்க உயிரிழப்பு HSRA க்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு என்றே கூற வேண்டும்.
குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக விளையாட்டை ஆக்கிவிட்ட முதலாளித்துவம்
2007 ,மே மாற்றுக்கருத்து இதழில் வெளியான கட்டுரை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-8 ஆட்டத்தில் பங்கேற்க இயலாமல் அடுத்தடுத்து வங்கதேச இலங்கை அணிகளிடம் தோற்று இந்திய அணி போட்டியை விட்டு வெளியேறிவிட்டது. அது விளையாட்டு ரசிகர்களிடையே நமது அணி வீரர்களுக்கு எதிரான கோபத்தை தூண்டி விட்டுள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக மகேந்திரசிங் தோனி போன்ற வீரர்களுக்கு மாநில அரசாங்கம் வீடு கட்ட இடம் வழங்கியது. அந்த இடத்தில் கட்டப் பட்டுக் கொண்டிருந்த வீடு இந்த முறை அவர் சரியாக விளையாடததால் ஆத்திரமடைந்த ரசிகர்களால் இடிக்கப்படும் காட்சி அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. பலத்த பாதுகாப்புடன் நமது வீரர்கள் நாடு திரும்ப வேண்டியிருந்தது.
செவ்வாய், 8 நவம்பர், 2011
முதலாளித்துவம் வரலாற்றின் இறுதிநிலையல்ல என்பதை நிரூபிக்கும் உலகளாவிய போராட்டச் சூழலில் சோசலிச சமூக அமைப்பை உருவாக்க நவம்பர் தின உறுதியேற்போம்
சோவியத் யூனியனிலும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அரசு அமைப்புகள் வீழ்ந்தவுடன் ஃபுக்கியாமா என்ற முதலாளித்துவ சிந்தனையாளர் நூல் ஒன்றினை எழுதினார். அதற்கு அவர் வரலாற்றின் இறுதிநிலை என்று பெயரிட்டார். அதில் அவர் மனிதகுல வரலாற்றின் இறுதிநிலை முதலாளித்துவ ஜனநாயகமே என்று நிறுவ முயன்றார்.
வரலாறு தனி மனிதரால் உருவாக்கப்படுவதில்லை. அது மகத்தான மக்கள் எழுச்சிகளால் உருவாக்கப்படுகிறது; மகத்தான மக்கள் எழுச்சிகளே அடிமை மற்றும் நிலவுடமை சமூக அமைப்புகளை முடிவுக்கு கொண்டு வந்தன; அதைப்போல் முதலாளித்துவ சமூக அமைப்பையும் மகத்தான பாட்டாளி வர்க்க எழுச்சி முடிவுக்கு கொண்டுவரும் என்று மாமேதை மார்க்ஸ் கூறினார்.
லேபிள்கள்:
கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP )
எஸ்.யு.சி.ஐ - யும் எக்ஸ்பர்ட் கமிட்டியும்
மே, 2007 மாற்றுக்கருத்து இதழில் வெளியான கட்டுரை
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தைக் கூட்டுவது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்கத் தவறும் கேரள அரசின் செயல் குறித்து அறிக்கை ஒன்றை எஸ்.யு.சி-ஐ கட்சி வெளியிட்டுள்ளது. இப்பிரச்சனையைத் தீர்க்க சர்வதேச தரம் வாய்ந்த நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது. அதன் பரிந்துரையின் அடிப்படையில் அணையின் உயரத்தைக் கூட்டுவது அல்லது வேறு அணை கட்டுவது போன்ற அனைத்து விஷயங்களிலும் முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.உண்மையில் மத்திய நதிநீர் கமிஷன் அமைத்த நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் அணையின் உயரத்தைக் கூட்டலாம் என்ற தீர்ப்பினை வழங்கியுள்ளது. அந்த நிபுணர் குழு பூகம்ப அபாயம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் உரிய முறையில் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளதா என்பது சந்தேகத்திற்குரியது என்ற வாதத்தை எஸ்.யூ.சி.ஐ. முன் வைக்கிறது.
லேபிள்கள்:
மாற்றுக்கருத்து,
மே 2007
கிரேக்கத்தில் கடும் நெருக்கடி - பிரதமர் ஜார்ஜ் பாப்பாண்டிரியோ பதவி விலகுகிறார்
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகவே கிரேக்க அரசு கடும் கடன் நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. அங்குள்ள உழைக்கும் மக்கள் அடுத்த நாளுக்கான உணவிற்கு உத்தரவாதமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அங்கு ஆளும் முதலாளித்துவ அரசுக்கு எதிராக கடுமையான தொடர் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஐஎம்எப் தரும் கடனை மட்டும் வைத்து அந்த அரசு நீடித்திருக்கும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லாத நெருக்கடி நிலையில் பிரதமர் ஜார்ஜ் பாப்பாண்டிரியோ பதவி விலகுகிறார். இது தொடர்ச்சியான கிரேக்க உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியே ஆகும். அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இடம் பெரும் வகையில் தேசிய ஐக்கிய அரசு அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அமையவுள்ள எந்த முதலாளித்துவ அரசும் அந்த மக்களுக்கு ஏமாற்றமாகவும் அமையுமேயல்லாமல் முற்றியுள்ள நெருக்கடிக்கு எந்த தீர்வையும் தராது. கிரேக்க உழைக்கும் மக்களின் போராட்டம் ஒரு வலுவான சோஷலிச அரசை நிறுவும் வரை தொடரும் என்பது திண்ணம்.
லேபிள்கள்:
இயக்கம்
சனி, 5 நவம்பர், 2011
வரலாறு திரும்புகிறது - நவம்பர் 7 புரட்சி தினம்
ஆண்டாண்டு காலமாக பெரும்பகுதி மக்கள் உழைக்க, விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் சுகபோகமாக வாழ்ந்து அந்த உழைக்கும் மக்களை சுரண்டி வந்த கொடுமைக்கு முடிவு கட்டிய புரட்சி நாள் நவம்பர் 7 ,1917. ஸ்பாட்டகஸ் மனதில் பற்றிய தீப்பொறி , பிரான்சில் பாரி கம்யூனாய் கனன்ற உழைக்கும் மக்கள் எழுச்சி ,ரஷியாவில் அகம்பாவத்தின் உச்சியில் கோலோச்சி வந்த சுரண்டல்காரர்களின் தலைவன் கொடுங்கோலன் ஸார் அரசன் மீது பெரு நெருப்பாய் இறங்கியது.
லேபிள்கள்:
இயக்கம்
வியாழன், 3 நவம்பர், 2011
ஜாதியம் இன்றைய இந்திய சமூக அமைப்பின் அடிப்படையான முரண்பாடல்ல என்பதைத் தோலுரித்துக் காட்டும் உத்திரப்பிரதேச தேர்தல்
2007 மே மாத வெளியீடு
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று உள்ளது. இந்தமுறை கட்சிகளின் கூட்டணி எதுவும் அந்த மாநிலத்தில் ஏற்படவில்லை. அங்கு செயல்படும் முக்கிய கட்சிகள் அனைத்துமே தனித் தனியாகவே போட்டியிட்டன. அதற்குப் பதிலாக கட்சிகள் ஜாதிகளின் ஆதரவை வித்தியாசமான வழிகளில் பெறமுயன்றன. வழக்கமாக உயர் ஜாதியினர் என்று கூறப்படும் பிராமணர்களின் ஆதரவு ஹிந்துத்வா கட்சியான பி.ஜே.பிக்கே செல்லும் என்ற எதிர்பார்ப்பே பலரிடமும் இருந்திருக்கும். யாதவர்கள் போன்ற பிற்பட்ட வகுப்பினரின் மற்றும் முஸ்லீம்களின் வாக்குகள் சமாஜ்வாதிக் கட்சிக்கு கிடைக்கும் என்பதே பலரது கணிப்பாகவும் இருந்திருக்கும் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை உ.பி. மாநிலம் பிளவுபடாமல் இருந்தவரை ச.ஈ. திவாரி போன்ற பிராமண வகுப்பûச் சார்ந்த தலைவர்களினால் காங்கிரஸிற்கு பிராமணர்களின் வாக்குகள் கிடைத்து வந்தன; முஸ்லீம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளும் விடுதலைக்குப் பின் நடைபெற்ற பல தேர்தல்களில் காங்கிரஸþக்கே கிடைத்து வந்தது. பி.எஸ்.பி போன்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனிக்கட்சி தொடங்கப்பட்டபின் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கி காங்கிரûஸ விட்டு நகரத் தொடங்கியது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலத்தில் மத்திய அரசில் காங்கிரஸ் இருந்ததாலும், அது உரிய நடவடிக்கை எடுக்காமல் மசூதி இடிக்கப்பட்ட அனுமதித்தாலும் முஸ்லீம் வாக்கு வங்கியும் காங்கிரஸþக்கு இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் ஜாதியைப் பற்றி அதிகம் பேசாமல் காங்கிரஸ் ராகுல் காந்தியின் இளமையையும், சுறுசுறுப்பையும் வைத்தே தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட பி.எஸ்.பி. கட்சி மிக மிக வித்தியாசமான விதத்தில் தனது பிற ஜாதிகளுடனான கூட்டணியை அமைத்தது. அம்மாநிலத்தில் அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு அரசியல் அதிசயத்தை அரங்கேற்றியுள்ளது.
மேலும் படிக்க
லேபிள்கள்:
மே 2011.மாற்றுக்கருத்து
சி.பி.ஐ (எம்)ன் சிவப்பு முகமூடியை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்த சிங்கூர், நந்திகிராம் நிகழ்வுகள்
2007 மே மாத வெளியீடு
உழுபவனுக்கே நிலம் சொந்தம்”
“டாடா பிர்லா போன்ற 75 ஏகபோக குடும்பங்களின் ஆட்சியை அனுமதியோம்”.
“உண்டு கொழுத்தவன் மாடியிலே உழைத்துக் கொடுத்தவன் வீதியிலே சட்டங்கள் எல்லாம் ஏட்டினிலே இந்தச் சண்டாளர்களின் ஆட்சியிலே.”
- இவையெல்லாம் சி.பி.ஐ (எம்) கட்சியின் பல ஊர்வலங்களில் பலமுறை முழங்கப்பட்டு பலராலும் கேட்கப்பட்ட முழக்கங்கள். இவை முழங்கப்பட்ட தொனியையும், முழங்கியவர்களிடம் இருந்த உணர்ச்சிப் பெருக்கையும் அப்போது கேட்டவர்கள் இந்த முழக்கங்களில் உள் பொதிந்திருக்கும் கொள்கைகளிலிருந்து என்றேனும் இக்கட்சியினர் தடம்புரளுவர் என்று எண்ணியிருப்பார்களா என்றால் நிச்சயம் எண்ணியிருக்கமாட்டார்கள். அத்தனை உணர்ச்சிப் பெருக்கு, அத்தனை அரசியல் வேகம்.
மேலும் படிக்க
லேபிள்கள்:
மாற்றுக்கருத்து,
மே 2007
செவ்வாய், 1 நவம்பர், 2011
தெருவெங்கும் வெள்ளம்! எங்கே மக்கள் அரசு ?
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைய ஆரம்பித்துள்ளது, தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் இரண்டு நாள் மழைப்பிடித்தாலே நகரமே வெள்ளக்காடாக மாறிவிடுகிறது .வேளச்சேரி போன்ற பகுதிகளில் படகு பயணம் செய்யுமளவிற்கு தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி விடுகிறது. சுரங்கப்பாதைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி வாகனபோக்குவரத்தே ஸ்தம்பித்து போய் விடுகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் வடிகால்களும், பாதாளா சாக்கடையும் ஒழுங்காக பராமரிக்கப்படாததால் மழை நீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. பல ஏரிகளும் குளங்களும், கால்வாய்களும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை,அப்படி பராமரிக்க ஒதுக்கப்படும் தொகையானது அரசு அதிகாரிகள் , அரசியல் வாதிகள் ,மற்றும் ஒப்பந்தகாரர்களால் கூட்டு பிரித்து கொள்ளையடிக்கப்படுகிறது. நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற எந்த முயற்சியும் எடுப்பதில்லை, நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா பெற்றுக்கொண்டு அந்த இடத்திற்கு சொந்தக்காரர்கள் ஆகிவிடுகின்றனர்.
லேபிள்கள்:
இயக்கம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
முகப்பு
புதிய பதிவுகள்