வெள்ளி, 29 ஜூலை, 2011

ஏ.ஐ.டி.யு.சி. - யின் தொழிலாளர் துரோகம்

கடந்த மாதத்தில் குர்கவுன் மாருதி தொழிற்சாலையில் புதிய தொழிற்சங்கம் அமைத்ததற்காக சில தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கியது மாருதி கார் நிறுவனம். இதனால் அங்கு பணி நீக்கப்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்து கொள்ள கோரியும் ,புதிய தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள் வெற்றிகரமாக, ஒற்றுமையோடு நடத்தினார்கள். இந்த வேலை நிறுத்தம் குர்கவுன் பகுதி முழுவதும் பரவி மற்ற தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். அங்குள்ள பொதுமக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இப்படி தன்னிச்சையாக மிகப்பெரிய  இயக்கமாக வளர்ந்து வந்த தொழிலாளர்கள் போராட்டத்தை ஏ.ஐ.டி.யு.சி. யின் பொது செயலாளர் குரு தாஸ் குப்தா தலையிட்டு நிர்வாகத்திற்கு ஆதரவாக அந்த போராட்டத்தை நீர்த்து போக செய்துவிட்டார். அதாவது அவர்கள் போராட்டமே புதிய தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் பெறுதல் தான் , அந்த கோரிக்கையை வாபஸ் வாங்க வைத்து மிகப்பெரிய தொழிலாளர் இயக்கத்தை நசுக்கி முதலாளிகளுக்கு சாதகமாக போராட்டத்தை கைவிட வைத்த பெருமை ஏ.ஐ.டி.யு.சி. யின் பொது செயலாளர் குரு தாஸ் குப்தாவையே சாரும் . ஆளும் முதலாளி வர்க்கத்தின் நலனை பேணிகாத்து வரும் சி.பி.எம். மற்றும் சி.பி.ஐ. இரண்டு கட்சிகளும் தொழிலாளர் இயக்கங்களை நசுக்குவதற்கு முதலாளிகளுக்கு துணை போகின்றன. இவர்களின் போலி முகத்திரை நந்திகிராமில் விவசாயிகளுக்கு எதிராக ஆயுதத்தை தூக்கிய போதே அம்பலப்பட்டு போய்விட்டது. தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் துரோகிகளான  ஏ.ஐ.டி.யு.சி யையும் , சி.பி.எம்., சி.பி.ஐ.யையும்  உணர்வு பெற்ற உழைக்கும் வர்க்கத்தின் முன்பு அம்பலப்படுத்துவோம் .

தகவல் உதவி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்