அரசு மூலதனமும் தனியார் மூலதனமும்
தனியார் மயம் தாராள மயம் உலகமயம் தான் பிரச்சனைகளுக்கு காரணம் என சொல்வது நிஜத்தை விடுத்து நிழலை சொல்வதாகும் முதலாளித்துவம் தான் சமூக சுரண்டல் ஒடுக்குமுறைக்கு ஆதார காரணம் என சொல்லாமல் வேறு ஒரு காரணத்தை கற்பிப்பதாகும்.இதன் மூலம் அரசுடமை ஆகிவிட்டால் தனியார் சுரண்டலில் இருந்தும் ஒடுக்குமுறையில் இருந்தும் தப்பி நாட்டை வளமான பாதைக்கு கொண்டு செல்லலாம் என கருதுவது தவறான கருத்துஆகும் .(அரசு உடமை வேறு, சமூக உடமை வேறு)
தனியார் மயத்தை தடுப்போம் அரசே ஏற்று நடத்த சொல்லி போராடுவோம் என கொந்தளிப்பதால் எந்த நன்மையும் மாற்றமும் ஏற்பட போவதில்லை உண்மையில் அரசு மூலதனமும் தனியார் மூலதனமும் அண்ணன் தம்பிகள் தானே தவிர வேறல்ல.
மேலும் சிபிஐ, சிபிஎம் சொல்வதுபோல அரசு மயம் தேசியமயம்என்பது ஒரு தங்க தொட்டிலும் அல்ல.
அரசு என்பது வர்க்கத்திற்கு அப்பாற்பட்டதல்ல வர்க்க நலன் சாராத அரசு அல்லது அரசு இயந்திரம் இருக்க முடியாது எனவே அரசு மூலதனமும் ஒரு தனியார் மூலதனமும் வடிவத்தில் மட்டுமே சிறிது மாற்றமுடையது மேலும் எந்தவகையிலும் அரசு மூலதனம் சமூகத்துக்கு சேவை செய்ய உருவாக்கப்படவில்லை.
அதே நேரத்தில் ஒடுக்குமுறை என வந்துவிட்டால் அரசு துறை ஊழியர்களை ஒடுக்க ராணுவத்தையே கொண்டு வந்து நிறுத்தும் தன்மை கொண்டதுதான் அரசு மூலதனம்.
எனவே அரசு மூலதனமும் வர்க்க சார்பானதுதான். இப்போது கேள்வி எழுகிறது அரசு மூலதனம் ஏன் வருகிறது தனியார் மூலதனம் ஏன் வருகிறது அதெப்படி அரசு துறை வங்கிகளும் தனியார் வங்கிகளும் ஒன்றாகும் என்ற பெருத்த கேள்வியேஅது
அரசுமூலதனம் தனியார் மூலதனத்துக்கு வேர்
எப்போதுமே ஆதார தொழில்களில் எல்லாம் அரசு மூலதனம் இருக்கவே செய்யும் பிற்பாடு அந்த தொழில்களில் தனியார் மூலதனம் வளர்ந்து விடும்போது அந்த துறைகளை தனியாருக்கு கொடுத்துவிட்டு அரசு ஒதுங்கி கொள்ளும் தற்போதைய உதாரணம் இரயில்வேயில் கேண்டீன்களில் ஆரம்பித்து கேரேச்களை வாடகைக்கு விடுவதுவரை தனியாருக்கு வந்துள்ளது அரசு மூலதனம்
தனியார் மூலதனம் தனக்கு போதிய லாபம் கிடைக்காதபோது அந்த துறைகளில் தன்னால் முதலீடு செய்ய முடியாமல் இருக்கும் போதுஅரசு மூலதனம் வருகிறது .இவை இரண்டும் பங்காளிகளே தவிர பகையாளிகள் அல்ல
அரசுபணிகளில் சுணக்கம்
ஒரு தனியார் வங்கியில் இருந்து வரும் அழைப்பை கவனித்து இருக்கிறீர்களா அந்த குரல் அதில் இருக்கும் ஒரு போலியான பணிவு குறிப்பிட்ட தகவல்களைமட்டுமே தரும் நுட்பம் தங்களது காரியத்தில் மட்டுமே கவனமாக இருக்கும் பேச்சு நமது கேள்விகளை தவிர்க்கும் சாமர்த்தியம்.
ஒரு அரசு வங்கியில் இருந்து இத்தகைய அழைப்புகள் ஏதும் வராது ஆனால் நேரில் சென்று பேசும்போது கவனித்து இருப்பீர்கள் எதெற்கெடுத்தாலும் ஒரு கடுகடுப்பு வேலையில் ஒரு சுணக்கம் எதிரில் இருப்பவரை ஒரு புழுவை போல பார்த்தல்.
பேச்சில் மட்டுமே பணிவும் காரியத்தில் விரைவும் ஆனால் சுரண்டலில் முதல் தரமானதாகவும் உள்ள தனியார் சேவையோ அல்லது பேச்சில் சிடு சிடுப்பும் சுரண்டல் குறைவான ஆனா சேவையில் பிந்தங்கிய அரசு மூலதனமோ யதார்த்தத்தில் முதலாளிவர்க்கத்தை பாதுகாக்கவும் இந்த முதலாளித்துவ அமைப்பை பாதுகாக்கவுமே ஏற்படுத்த பட்டவை.
அரசு துறைகளின் வேலை சுணக்கம் எகத்தாளம் இழுத்தடிப்புக்கு காரணம் அரசு துறைகளில் இருக்கும் தொழிற்சங்கங்களும் தற்போது வளர்ந்து வரும் தனியார் மற்றும் கார்பரேட் நிருவனங்களில் இல்லாமல் போன சங்க உரிமையும் காரணம் .
அரசு பணிகளில் ஊழல்

அரசு துறைகள் மட்டும் நட்டமாவதற்கு காரணம் அதிகாரிகளின் ஊழலே “பணி சுணக்கம்” மட்டுமே கடை நிலை ஊழியர்களின் பொறுப்பு ஆனால் பெரும் அளவில் லஞ்ச ஊழலில் அரசு துறை அதிகாரிகள் ஈடுபடுவதால் இங்கே அரசு துறைகள் அனைத்தும் நட்டமடைகிறது.
உதாரணம்: ( பஸ்போக்கு வரத்து , பால் உற்பத்தி நிலையங்கள் நட்டம் )
ஒரு அரசு ஊழியனுக்கு வேலையை செய்யாவிட்டால் கூட பணி பாதுகாப்பு இருக்கிறது அதே நேரம் ஒரு தனியார் ஊழியனுக்கு பணியை செவ்வனே செய்தாலும் பணிப்பாதுகாப்பு போதிய ஊதியம் தேவையான ஓய்வு விடுப்பு ஆகியவை இல்லை .
1.அரசுமூலதனம் வளர்ச்சியை நோக்கி செல்லாதது ஏன்
2.தனியார் மூலதனம் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொள்வது ஏன்?
மேற்கண்ட இரு கேள்விகளும் மிக முக்கியமானது
மக்களுக்கான சேவை மக்களுக்கான உற்பத்தி மக்களின் நுகர்வு ஆகியவற்றை மைய்யமாக கொண்ட ஒரு அரசை மக்களே அமைக்க வேண்டும் என்றால் அது பாட்டாளி வர்க்க சார்புள்ள ஒரு அரசு அமைந்து உடமைகள் அனைத்தும் சமூக உடமையாக மாறும்போது மட்டுமே நிகழ முடியும் .
1.அரசு மூலதனம் வளர்ச்சியை நோக்கி செல்லாதது ஏன்?
முதலாளித்துவ உற்பத்தி நடக்கும் ஒரு நாட்டில் எல்லா பொருளும் சரக்காகவே செய்கிறது எனவே சரக்கு பரிவர்த்தனையின் விளைவான லாபமே முதலாளித்துவத்துடைய உந்து சக்தி ஆனால் சில குறிப்பிட்ட தேவைக்கான அல்லது அடிப்படை சேவைக்கான தொழில்களில் அரசு மூலதனம் என்பது சமூக உணர்வற்ற அதிகார படிநிலைகளால் வழங்கப்படும் சேவை என்பது அது தேவைக்கானதாக இருப்பினும் அதில் ஒரு வித கவனமின்மை அசட்டை வந்துவிடுகிறது.தனியார் மூலதனத்தின் உந்து சக்தி அதன் மூலதனமே அப்படி பட்ட ஒரு உந்து சக்தியாக அரசு மூலதனத்தில் (உதாரணம் அரசு பெல் போன்ற அரசு உற்பத்தி தொழிற்சாலைகள், அரசின் தொலைபேசி சேவை ) மக்களுக்கான சேவை என்கிற விசயமே மூலதனத்துக்கு பதிலியான உந்துசக்தி என அமைக்கப்படாவிட்டால் தோல்விதான் மிஞ்சுகிறது.
உண்மையில் இந்தியா போன்ற ஒரு முதலாளித்துவ சமுதாயத்தில் அரசு மூலதனத்தின் நோக்கமே தனியார் மூலதனத்தை வளர்ப்பதுதான் எனும்போது தான் வளரவேண்டும் என்ற எண்ணமே அரசு மூலதனத்திற்கு வராது.
2.தனியார் மூலதனம் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொள்வது ஏன்?
வளர்ச்சி அடையாவிட்டால் தன்னால் தொடர்ந்து ஜீவித்திருக்க முடியாது என்கிற சந்தை போட்டி நிபந்தனையே முதல் நிபந்தனையாக தனியார் மூலதனத்தை இயக்குகிறது.லாபம் ஒன்றே நோக்கமாக கொண்டிருப்பதால் அதற்காக தனியார் மூலதனமானது என்னவேண்டுமானாலும் செய்ய சித்தமாக இருக்கிறது. கூலியை குறைக்க அல்லது இடுபொருள்களை குறைக்கவோ அல்லது குறைவான விலையில் கிடைக்கும் இடுபொருளை பெறவோ அல்லது வேறு எந்தெந்த முறைகளில் லாபம் அடைய முடியுமோ அந்த வகையில் எல்லாம் செயல்படுகிறது.
மூலதனங்களின் வகைபாடும் பாட்டாளிவர்க்கத்தின் பார்வையும்

ஒரு மூலதனத்தில் இருந்து இன்னொரு மூலதனத்தின் அடிமையாக மாறுவதல்ல நமது கோரிக்கை எல்லா மூலதனத்தின் நுகத்தடியில் இருந்தும் விடுபடுவதும் .சந்தை உற்பத்தி முறையை தூக்கி எறிவதும் மூலதனத்தின் பிடிக்குள் இருந்து விடுபடவும் திட்டமிட்ட சமூக பொருளுற்பத்தி முறையை உருவாக்குவதன் மூலம் மனிதனை “பண்டம் “ என்கிற நிலையில் இருந்து மீட்கவும் போராடவேண்டுமே அல்லாது குறுக்கு வழியை கண்டறிவதல்ல.
a)அரசு மூலதனத்தின் பணியாட்களாக இருப்பினும்
B) தனியார் மூலதனத்தின் தொழிலாளர்களாக இருந்தாலும்
பாட்டாளி வர்க்கம் என்ற அடிப்படையில் திரட்டப்படாத தொழிலாளர்கள் தங்களுக்கு தொழிற்சங்கம் இருப்பதே வேலையில் இருந்து தப்பித்து கொள்ளவும் கடமையில் இருந்து நழுவினாலும் யாரும் கேட்கமுடியாது என்கிற தனிமனித வாதத்தை வளர்த்து கொள்ளவே அரசு துறையில்
தொழிற்சங்கம் பயன்பட்டு இருக்கிறது .
சித்தாந்த பிழை
தனியார் மயத்தை எதிப்போம் உலகமயத்தை எதிப்போம் தனிதனியாக பிரச்சனை எதிப்பது என்று எதாவது இருக்கிறதா அல்லது இப்படி சொல்வதன் மூலம் இந்தியாவில் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை இல்லை என சொல்லாமல் சொல்வதா ?
இந்தியாவில் முதலாளித்துவம் பொருள் உற்பத்தி முறைதான் நடைமுறையில் உள்ளது என சொல்லிவிட்டால் சோசலிச புரட்சிதான் தீர்வாக முடியும் ஆனால் நக்சல்பாரிகளும் அதி இடதுசாரிகளும் இன்னும் இந்தியாவுக்கு புதிய ஜனநாயக புரட்சிதான் சரி என சொல்லிவருவதால் அந்த சட்டைக்குள் இந்த உடலை பொருத்த பார்க்கிறார்கள் .
இந்த முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையை உடைப்போம் முதலாளித்துவத்தை எதிர்ப்போம் என்பதே மிக சரியான சித்தாந்தமாகும் .
இந்த கட்டுரை செம்மலர் என்ற வலைப்பூவில் வெளிவந்தது.
தோழர் தியாகுவிற்கு இயக்கம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக