வியாழன், 21 ஏப்ரல், 2011

நமது நாட்டில் காட்டுத் தீயெனப் பரவிவரும் பாட்டாளிமயமாதல் போக்கைக் கணக்கிலெடுத்து, உரிய வழிகாட்டுதல் வழங்கி வர்க்க விடுதலைச் சாதிக்கப் பாடுபட வேண்டும்

நமது நாட்டில் பட்டாளிமயமாதல் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. சிறு உடமையாளர்கள் அவற்றை விற்றுவிட்டு பட்டாளி வர்க்க அணிகளுடன் சேரும் போக்கு காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மிகப் பெரிய வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற பகாசுர வர்த்தக நிறுவனங்கள் சிறிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை அழித்தொழித்துக் கொண்டுள்ளன. அது பட்டாளி வர்க்க அணிகளுடன் உடைமை இழந்தவர்களை அணி  சேர்த்துக் கொண்டுள்ளது. விவசாய விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்காத நிலை, இடுபொருள் விலை உயர்வு, உயர்ந்து வரும் உயர்கல்விச் செலவினங்கள் போன்றவை சிறிய அளவில் விவசாய உற்பத்தியில் ஈடுபடுவோரைப் பொறுத்தவரை விவசாயத்தை முழுமையாக கட்டுபடியாகாத தொழிலாக ஆக்கியுள்ளது. அதனால் அவர்கள் அவர்களின் குண்டுகுறுக்க நிலங்களை விற்றுவிட்டு விவசாயத் தொழிலாளராகவும் உதிரித் தொழிலாளராகவும் மாறிக் கொண்டுள்ளனர். இந்நிலையைப் பயன்படுத்தி நாட்டின் பல இடங்களில் பெரும் பெரும் விவசாயப் பண்ணைகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.
இப்போக்கை ஊக்குவிக்கும் விதத்தில் அரசு விவசாயத்திற்கு வழங்கிவந்த மானியத் தொகைகளை நிறுத்தி விவசாயத்தை இன்னும் கூட கட்டுபடியாகாத தொழிலாக ஆக்கியுள்ளது. இவற்றின் மூலம் ஏராளமானோர் ஆயிரக் கணக்கில் வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற கடைகளில் வேலை செய்யும் தொழிலாளராகவும் விவசாயப் பண்ணைகளில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளராகவும் மாறியுள்ளனர்.

முன்பிருந்தது போல் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தற்போது பெரும்பாலும் கல்வியறிவற்றவர்களாக இருப்பதில்லை. முழுக்க முழுக்க இயக்கங்கள் மூலம்தான் அவர்களுக்கு அரசியல் அறிவைப் புகட்ட முடியும் என்ற நிலையில் அவர்கள் இல்லை. ஆனால் அவர்களுக்குப் பட்டாளி வர்க்க விடுதலை உணர்வூட்டும் கருத்துக்களை ஊட்டும் அறிவும் திறமையும் பெற்றவையாக பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் கட்சிகள் இல்லை. இந்தப் போதாமையையும் வர்க்க சமரசப் பாதையைப் பின்பற்றி பாராளுமன்ற அரசியல் மூலமே ஆட்சிக்கு வந்து விடலாம் என்றவாறு அவர்களிடம் வளர்ந்துவிட்ட  நப்பாசையும் வர்க்கப் போராட்டத்தைத் தவிர வேறு அனைத்தையும் முன்னிலைப்படுத்தும் நிலையில் அக்கட்சிகளை நிறுத்தியுள்ளது.

அடிப்படை மார்க்சியத்தைக் கைவிட்டு விட்ட அவர்கள் தற்போது ஜாதிய நிலையினை எடுக்கும் ஆதரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். அதற்கு ஒத்துவரக்கூடிய அவர்களின் ஜாதிய வாத அரசியல், முதலாளித்துவத்தை மூடிமறைத்து இல்லாத ஜாதிய எதிரிகளை முன்னிலைப்படுத்தும் நிலைக்கு அவர்களைத் தள்ளியுள்ளது.


 மேலும் படிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்