செவ்வாய், 19 ஏப்ரல், 2011

108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு அறைகூவல்

தோழர் கு.கதிரேசன் (பொறுப்பாளர் சி.ஒ.ஐ.டி.யு.)

 

108 மருத்துவ உதவித் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு பிரபலமான திட்டம். நோய் நொடியினால் அல்லலுற்று நொந்து நூலாகி அரசு மருத்துவமனைகளின் அலைக்கழிப்புப் போக்கினால் அல்லாடி நிற்கும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கிய திட்டம். நாமும் மனிதர்களே நவீன மருத்துவம் பெறுவதற்கு நமக்கும் உரிமை உண்டு என்ற மக்களின் நம்பிக்கையைப் பெற வாய்ப்புள்ள திட்டமாக இது இருப்பதால் இத்திட்டத்தை எளிதில் அரசு கைவிடாது” .ஓட்டுனர் உரிமம் போன்ற விசேசத் தகுதிகள் பெற்ற பலர் இதில் வேலைக்குச் சேர விரும்பியதற்கு உந்து சக்தியாக இருந்தது மேற்கூறிய இத்திட்டம் குறித்த புரிதலே.


நிர்வாகிகளின் கரங்கள் மேலோங்கியுள்ள நிலை
தொழிலாளி வர்க்க இயக்கங்கள் முதலாளித்துவ எதிர்ப்பு என்ற போராட்டக் கூர்முனையை இழந்து நிற்கும் இன்றைய நிலை, தனியார் அரசு மற்றும் அரசு உதவியுடன் நடைபெறும் தனியார் நிறுவன முதலாளிகளின் சுரண்டல் வேட்டைக் காடுகளாக தொழில் நிறுவனங்களை ஆக்கியுள்ளது. அந்தப் பின்னணியில் அனைத்து நிறுவனங்களுமே தொழிலாளர் சட்டங்கள் நியதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு வேலைக்கு அமர்த்து, எவ்வளவு முடியுமோ அவ்வளவு காட்டுத்தனமாகச் சுரண்டு, அதற்குப் பின் வேலை செய்யத் திராணியற்றுப் போனாலோ, உரிமைகள் கோரினாலோ வேலையை விட்டுத் தூக்கி எறி என்ற அடிப்படையில் செயல்படும் நிறுவனங்களாக ஆகி விட்டன.


எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

இந்தப் பின்னணியில் 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த தொழிலாளரின் நியாயமான எதிர் பார்ப்புகளான அரசு துறையில் வேலை, பணி நிரந்தர வாய்ப்பு, அங்கீகரிக்கப்பட்ட நியதிகளின் படி ஊதியம் போன்றவற்றை 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் உடைத்து நொறுக்கித் தகர்த்துத் தவிடுபொடியாக்கி விட்டது.

இந்த வேலையில் சேரும் போது நாம் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்று அவர்கள் எண்ணியிருக்க மாட்டார்கள். வாரம் ஒரு நாள் விடுப்பு கூட கிடைக்காது என்ற எண்ணம் அவர்களது கனவிலும் வந்திருக்காது. ஒரு நாளைக்கு 150 ரூபாய் என்ற அளவிற்கே ஊதியம் கிட்டும் என்பதையும் அவர்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். வருங்கால வைப்புநிதிக்கு நிறுவனம் கட்ட வேண்டிய தொகையையும் சேர்த்து நாமே கட்ட வேண்டியிருக்கும் என்பது தொலைதூரச் சிந்தனையாகக் கூட அவர்களின் மனதில் உதயமாகி இருக்காது. ஆனால் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் பணியில் அமர்ந்த அவர்களை எதிர் கொண்டவை இத்தகைய எந்த நாகரீக சமூகமும் காணக் கூசும் அவலங்களே.

கல் ஒன்று மாங்காய் இரண்டு

தமிழக அரசு, அரசுத் திட்டம் என்று ஒன்றை அறிவித்துவிட்டு அதற்காக உலக வங்கிக் கடன், மத்திய அரசின் ஒதுக்கீட்டில் இருந்து பணம் மாநில மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கப்படும் நிதி இவையனைத்தையும் ஒரு தனியாருக்குக் கோடிக்கணக்கில் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, அத்திட்டத்தின் மக்கள் ஆதரவு தன்மை குறித்த விளம்பரங்களை ஆளும் கட்சித் தலைமைக் குடும்பத்திற்குச் சொந்தமான ஊடகங்களுக்குக் கிடைக்குமாறு செய்து அதற்குக் கணிசமான பணத்தைக் கட்டணமாக அவ்வூடகம் வசூலிக்க வழிவகை செய்துவிட்டு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற கூற்றுக்கிணங்க அரசுக்கு நற்பெயர், தனது வீட்டிற்கு நல்ல பணம் என்ற அடிப்படையில் ஆளும் கட்சியின் தலைமை சம்பாதிக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

 மேலும் படிக்க

1 கருத்து:

  1. உங்களுக்கான பதில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, பாருங்கள் நன்பரே.
    http://porattamtn.wordpress.com/2011/02/21/lumumba/#comment-213

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்