சனி, 30 ஏப்ரல், 2011

தொழிலாளி வர்க்கமே விழித்தெழு - மே தின அறைகூவல்

சென்னையில் உள்ள இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலை ஒன்றில் ஒரு பெண் தொழிலாளர் உதிரி பாகங்கள் பொருத்தும் பணியை செய்து கொண்டிருக்கிறார். அந்த இயந்திரம் உதிரி பாகங்களின் தேவையற்ற பகுதிகளை வெட்டக்கூடியது அதில் மனிதனின் சருமத்தை உணர்ந்து  கொள்ளும் வகையிலான சென்சார் பொருத்தப்பட்டிருக்கும், அப்படி இருப்பது லாபவெறிபிடித்த முதலாளிக்கு  உற்பத்தி  குறையும் என்பதால்  அந்த  சென்சார்  இணைப்பு  அங்கு  வேலை செய்யும் தொழிலாளிக்கே தெரியாமல் துண்டிக்கப்படுகிறது. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் பெண் தொழிலாளியின் கழுத்து அந்த இயந்திரத்தில்  மாட்டிக்கொள்கிறது .  சக தொழிலாளர்கள் , அந்த இயந்திரத்தை  உடைக்க  முயற்சி செய்கிறார்கள் , ஆனால் மேலாளரோ அந்த இயந்திரம்  விலை மதிப்பற்றது,  அந்த இயந்திரத்திற்கு  சேதாரம்  ஏற்படாமல் அந்த பெண்
தொழிலாளியை  மீட்டு விடலாம்  என்று சொல்கின்றார். அப்படி மீட்கப்படுவதற்குள் அந்த பெண் தொழிலாளி அந்த இயந்திரத்தால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். நிர்வாகம் அதிக லாப உற்பத்திக்காக தொழிலாளியின் உயிரே போனாலும் பரவாயில்லை தனக்கு அதிகமான லாபமே குறிக்கோள் என்று செயல்படுகிறது. அந்த பெண் தொழிலாளி கொல்லப்படுவதற்கு யார் காரணம் முதலாளித்துவ லாபவெறி தானே. இந்த செய்தி நாம் பார்க்கும் தொலைகாட்சிகளில் வருவதில்லை,இந்த கொலை ஒரு வழக்காக கூட பதிவு செய்யப்படுவதில்லை , நீதிமன்றம் இதை குறித்து எந்த விசாரணையும் செய்வதில்லை. இவை அனைத்தும் மூடி மறைக்கப்படுகிறது, சக தொழிலாளர்கள் இந்த நிறுவனத்திற்கு எதிராக குரல் கொடுக்கா விட்டால் அந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு 12  மணி நேர வேலை, வார விடுமுறை கிடையாது ,  பணி நிரந்தரம் என்பது மருந்துக்கு  கூட செய்யப்படுவதில்லை, விபத்து உதவி தொகை, மருத்துவ காப்பீட்டு போன்ற எதுவுமே தொழிலாளர்களுக்கு கிடப்பதில்லை. இவை எல்லாம் கோருவது நமது உரிமை என்று கோரக்கூடிய தொழிலாளியை உடனடியாக வெளியேற்றப்படுகின்றனர். ஒரு போராட்டம் என்று அறிவித்தால் உடனடியாக காவல் துறை பறந்து வந்து தொழிலாளிகளை அடித்து நொறுக்குகின்றது.
 குறைந்த பட்ச இழப்பீடு கூட கிடைத்திருக்காது.

இன்று வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ள துறையான சாப்ட்வேர் கம்பனிகளின் கண்ணாடி மாளிகைக்குள் தொழிலாளர் உரிமைகள் குறித்த குறைந்த பட்ச விழிப்புணர்வு கூட உள்ளே நுழையவில்லை. தொழிற்சங்கம் ஆரம்பிப்பதே சட்ட விரோதம் என்றல்லவா ஆகி விட்டது இன்றுள்ள நிலைமை. சிகாகோவில் ரத்தம் சிந்தி பெற்ற 8  மணி நேர உரிமைகூட  பறிக்கப்பட்டு விட்டது.

மே தினம் உழைக்கும் வர்க்கத்தின் நினைவுகளை போற்றும்  கொண்டாட்டம் அல்ல, உலகமெல்லாம் உழைக்கும் வர்க்கம் செய்த மாபெரும் தியாகங்களை  நினைவு  கூர்ந்து தொழிலாளிவர்க்கம் ஓன்று பட்டு ஒரே குரலாக எழுந்து முதலாளித்துவத்திற்கு சமாதி கட்ட வேண்டியத்தை நினைவு கூறும் தினமாகும்.

அடிமை சமுதாயத்திடம்  இருந்த குறைந்த பட்ச ஒற்றுமை கூட  நம்மிடையே இல்லையே, முதாலாளிகள்  குட்ட குட்ட அடிபணிந்து  அவன் வளமாக  வாழ, அவன் லாபம் பெருக   அடிமைகளாக வேலை செய்து கொண்டே இருக்கப்போகிறோமா, வாழ் நாள் எல்லாம் முதாலாளித்துவம் வளம் பெற  உழைத்து கொண்டிருக்கப் போகிறோமா, நம்மிடம் இழப்பதற்கு  என்ன இருக்கிறது இந்த அடிமை கைவிலங்கை தவிர. நமது ஒற்றுமையில் தான் வருங்காலத்தில்  புதிய வரலாறு உருவாகப்போகிறது. இந்த மே தினத்தில் அமைப்பாக  திரண்டு  பாட்டாளிவர்க்க அரசை அமைக்க,  உழைக்கும் வர்க்கத்தை இயக்கம் அறைகூவி அழைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்