புதன், 20 ஏப்ரல், 2011

இன்றைய முதலாளித்துவம் பராமரிப்பது ஜனநாயக முகத் தோற்றமே தவிர உள்ளடக்கமல்ல






இந்திய அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஒரு சுயேட்சையான அமைப்பு இந்தியத் தேர்தல் ஆணையம். ஜனநாயகத்தின் முதுகெலும்பு என முதலாளித்துவ ஜனநாயகம் கருதும் தேர்தல்கள், சுதந்திரமாக முறை கேடுகளின்றி நடைபெறுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அது உருவாக்கப் பட்டது.
தேர்தல் முறைகேடுகள் காலங்காலமாக நடந்து வந்தாலும் எப்போதும் அவை ஒரே வகையினதாக இருக்கவில்லை. அளவிலும், பரிமாணத்திலும் அவை வேறுபட்டுக் கொண்டேயிருக்கின்றன. கள்ள ஓட்டு, வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் போன்றவை ஒரு காலத்தில் முக்கியமான முறைகேடுகளாக இருந்தன.

எப்போதுமே பணத்தின் பங்கும் பாத்திரமும் தேர்தல் அரசியலில் முக்கிய பங்கினை வகிக்கவே செய்தது. வட இந்தியாவில் தேர்தல் வன்முறைகள் இருந்த அளவிற்குத் தென் மாநிலங்களில் பொதுவாக இருந்ததில்லை. குறிப்பாகத் தமிழ்நாட்டில் தேர்தல் வன்முறை அதிக அளவு எப்போதுமே இருந்ததில்லை.

இருந்தாலும் கள்ள ஓட்டுப் போடுவது அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு எப்போதுமே இங்கும் நடந்துள்ளது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இப்போக்குகள் வளர்ந்து தமிழ் நாட்டின் தேர்தல் அரசியல் மிகமிகக் கேவலமான ஒரு கட்டத்திற்கு வந்துள்ளது. இன்று தேர்தல் வெற்றிகளைச் சாதிப்பது ஆளும் கட்சிகளின் சாதனைகளல்ல; அவர்கள் வாக்காளர்களுக்கு வழங்கவிருக்கும் பணமே என்ற நிலை தோன்றியுள்ளது.

முறைகேடுகள் மூலமான வெற்றிகள்

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த இடைத் தேர்தல்கள், நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல், சென்னை மாநகராட்சிக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தல் இவை அனைத்திலுமே ஆளும் கட்சி பெற்ற வெற்றி முறைகேடுகளால் பெறப்பட்டதே. அனைத்து முறைகேடுகளிலும் கேடுகெட்ட முறைகேடாக விளங்குவது இன்று நிலவும் வாக்கிற்குப் பணம் கொடுக்கும் போக்கே.

மிரண்டுபோன வாக்காளர்

மதுரை மேற்கு, மத்தியத் தொகுதிகளில் ஆளும்கட்சியினால் வெள்ளோட்டம் விடப்பட்ட வாக்கிற்குப் பணம் வழங்கும் நடைமுறை பலவகைச் சோதனைக்கும் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டு இப்போது முழுமை பெற்றதாக ஆகியுள்ளது. அவ்வாறு ஆக்கியது ஆளும் கட்சியே. திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலின் போதே அது அந்தச் ‘சாதனை’யை ஆற்றியது. ஒரு வாக்கிற்கு ரூபாய் 5,000 என்ற அளவிற்குப் பணம் வழங்கப் பட்டதால் எதிர்க்கட்சி வேட்பாளர் மட்டுமல்ல பணம் வாங்கிய வாக்காளர்களே கூடத் திருமங்கலம் தொகுதியில் மிரண்டு போய் விட்டனர். அதனால் எதிர்க் கட்சியினர் அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று என்னதான் கூறினாலும் இவ்வளவு பணம் கொடுத்தவன் மாற்றி வாக்களித்தால் சும்மா விடமாட்டான் என்ற மிரட்சி ஏறக்குறைய பணம் பெற்ற அனைத்து வாக்காளரிடமும் ஏற்பட்டு விட்டது.
மேலும் படிக்க

http://maatrukkaruthu.blogspot.com/2011/04/blog-post.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்