இதோ வந்துவிட்டது 2011 சட்டமன்ற தேர்தல். மக்களாட்சி நிலவும்(?) இந்நாட்டில் , மக்களுக்காக ஆட்சிபுரிய போகிறவர்களை மக்களே தங்கள் சுட்டுவிரல் நீட்டி சுட்டிக்காட்ட போகும் நிகழ்வு. சுட்டுவிரல் நீட்டபட்டவுடன் அதில் பூசப்படும் கருப்பு மைய்யே அவர்களின் எதிர்காலத்தை ஆருடம் கூறுகிறது.
அரசு
"அது ஒடுக்குமுறை கருவி" (எந்திரன் ரஜினியை போன்று) அங்கமெல்லாம் ஆயுதம் பூண்ட ஆளும் வர்க்கத்தின் ஆயுதம்.மக்களின் நண்பனாய் வேடம் பூணும் எதிரி..
இன்றைய முதலாளித்துவ கட்சிகள் முதலாளிவர்க்கத்தின் காலணிகளை துடைத்து அதற்கு பதிலாய் எலும்புத்துண்டுகளை பரிசாய் பெற போட்டுக்கொள்ளும் நாய் சண்டைதான் இன்றைய தேர்தல்...
மிகச்சரியாக அமைந்த 'தேசிய பறவை ' என்றால் அது அமெரிக்காவின் பினதின்னி 'கழுகு' தான்...
உழைக்கும் மக்களின் உழைப்பினால் கிடைத்த லாபத்தினை (ஆட்டுக்குட்டி) முதலாளி கழுகுகளிடம் விலைபேசும் தந்திர நரிகள் தான் இன்றைய முதலாளித்துவ கட்சிகள். ..
பிணந்தின்னிகள் தின்றுவிட்டு அவை போடும் எலும்புகளுக்காய் (Tax ) மக்களிடம் 'பசுந்தோல்' சாத்திக்கொண்டு காலில் விழுகின்றன இக்கட்சிகள்.... அந்த எலும்புகளை கொண்டே உலகை சொந்தமாக்கிட முடியும் என ஹாரிபாட்டர் கதைகளை இவர்கள் கூறி திரிகின்றனர்.
லாபத்திற்கான இந்த உற்பத்திமுறை மாறாத வரை; பாட்டாளி வர்க்கத்திற்கான சோஷலிச குடியரசு அமைக்கப்படும் வரை மக்களின் இழிநிலை மாறப்போவதில்லை.
கூலிக்காக தன் உழைப்பு சக்தியை மக்கள் விற்காமல்... தங்களின் முழு உழைப்புசக்தியை அவர்களே அனுபவிக்கும் சொர்க்கம் ஒருநாள் உருவாகும் .
அதுவரை, நிகழ்வுகளை கூர்ந்து நோக்கி மக்கள் புரட்சிக்கான வழிவகைகளை உருவாக்குவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக