அரசு அலுவலகங்களில், அரசு அலுவலர்கள் தங்களின் கடமையை செய்யவே லஞ்சம் வாங்குவார்கள், அப்படி லஞ்சம் வாங்குபவர்களை நாம் மனிதர்களாக கூட மதிப்பதில்லை, அவர்களை நாம் ஒருவித அருவருப்புடன் தான் பார்க்கிறோம். ஊழல் செய்யும் அரசியல் வாதிகளையும் நாம் அதே அருவருப்புடன் தான் உற்று நோக்குகிறோம். இதோ அங்கு தொட்டு இங்கு தொட்டு நம்மையே ஊழலில் கூட்டாளியாக்க நமக்கு லஞ்சம் கொடுத்து ஒட்டுக்கேட்க கையில் கவருடன் வந்துகொண்டுள்ளனர் மெஹா ஊழல் அரசியல்வாதிகள். இந்த தேர்தல் மூலம் எந்த மாற்றமும் இந்த நாட்டில் ஏற்பட்டுவிடப்போவதில்லை இந்த முதலாளித்துவ அமைப்பு இருக்கும் வரையிலும் அது சாத்தியமில்லை என்ற போதிலும் நம்மிடம் உள்ள விலை மதிக்கமுடியாத சொத்து நமது தன்மானமே. அந்த தன்மானம் ஓட்டுக்காக விலை பேசப்படுவதை நீங்கள் அனுமதித்தீர்கள் என்றால் நம்முடைய போராட்ட குணம் மழுங்கி நாமும் இந்த ஊழல் சாக்கடையில் ஒரு அங்கமாகிவிடுவோம். அடுத்து ஆட்சிக்கு வந்து அவர்கள் செய்யும் ஒவ்வொரு ஊழலுக்கும் நாமும் பங்குதாரர்களாகிவிடுவோம். ஆகவே வாக்காளர்களே நீங்கள் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள்.அது உங்களையும், இந்த சமூகத்தையும், எதிர்கால தலைமுறையையும் நீங்காத துன்பத்தில் மூழ்கடித்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக