ஞாயிறு, 17 ஜூலை, 2011

கம்யூனிஸ்டுகளா? தேசபக்தர்களா? வினவு தோழர்களிடமிருந்து பதில் கிடைக்குமா?

வினவு தளத்தில் அம்பானியின் பிரம்மாண்ட ஊழல்! என்ற வினவின் கட்டுரை படித்தேன். அதில் இருந்த சில கருத்துக்கள் வினவு தோழர்கள் கம்யூனிஸ்டுகளா? தேசபக்தர்களா? என்ற சந்தேகத்தை எழுப்பியது.  வினவு தளத்தில் வாசகர்களின் விவாதங்களுடன் வினவு தோழர்களின் அதிகாரப்பூர்வமான பதில்களும் அடிக்கடி பார்த்துள்ளதால் என் சந்தேகத்திற்கும் வினவு தோழர்களின் அதிகாரப்பூர்வமான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்த்து July 3, 2011 at 11:26 pm அன்று பின்வரும் இந்தக் கேள்வியைக் கேட்டேன். ஆனால் இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள் வினவு தளத்தில் பல புதிய கட்டுரைகள் வந்துவிட்டதில் இக்கட்டுரை பின்னுக்குப் போய் வாசகர்களின் விவாதமும் நின்று விட்டது. எனவே வினவு தோழர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக இங்கே அக்கேள்வியைப் பதிவிடுகிறேன்.

கேள்வி இதுதான்:
வினவு தோழர்களே! //இந்தியாவின் பொதுத்துறை எண்ணை நிறுவனங்களைப் பொருத்தமட்டில், அரசுக்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி மற்றும் ஒ.ஐ.சி இந்தியாவில் மட்டுமல்லாமல் உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலும் எண்ணை வயல்களையும் இயற்கை எரிவாயுவையும் கண்டுபிடிப்பதிலும் எண்ணை துரப்பணத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. // என்று தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை . ஆனால் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகள் இந்தியாவின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவதை தீவிரமாக எதிர்க்கும் நீங்கள், இந்தியாவின் பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளாகிய ஓ.என்.ஜி.சி மற்றும் ஒ.ஐ.சி ஆகியன உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்ரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் உள்ளிட்டு உலகின் பல்வேறு நாடுகளின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவதை எதிர்க்காதது மட்டுமின்றி, //ஆக, ஒரு பொதுத்துறை நிறுவனத்திற்கே இத்துறையில் போதுமான நிபுணத்துவமும் தகுதியும் திறனும் இருக்கிறது. வெளிநாடுகளில் சென்று எண்ணை வயல்களைக் கண்டுபிடிக்கவும், எண்ணை துரப்பணம் செய்யவும் போதுமான மூலதன பலம் அதற்கு இருக்கிறது. // என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறீர்களே நீங்கள் கம்யூனிஸ்டுகளா? தேசபக்தர்களா? தேசபக்தர்கள்கூட தங்கள் தேசத்தின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் அந்நிய நாட்டினரை எதிர்ப்பவர்கள். ஆனால் தங்களிடமோ அதையும் தாண்டி மற்ற நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டும் இந்தியாவின் பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளின் “நிபுணத்துவம்” “தகுதி” திறன்” மற்றும் “மூலதன பலம்” ஆகியவற்றைப் பார்த்து புளகாங்கிதம் அடையும் தேசியவெறி வாதம் அல்லவா தொனிக்கிறது. அது சரியாகப் படவில்லையே.
தோழமையுடன்,
த.சிவக்குமார்
http://www.vinavu.com/2011/06/28/ambani-scam/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்