செவ்வாய், 5 ஜூலை, 2011

நாகர் கோவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி !

நாகர்கோவில் 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நிர்வாக அதிகாரிகளின்  தான்தோன்றித்தனமான செயல்பாடுகளை தடுக்க கோரி மனு அளித்தனர் ஆனால் நிர்வாகமோ பாபு என்ற தொழிலாளியை பணிநீக்கம் செய்தது. நியாயமாக மனு அளித்தவரின் மீது நடவடிக்கை எடுத்த நிர்வாகத்தை கண்டித்து 04 .07 .2011 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் மாவட்ட ஆட்சியரிடம் சென்று பாபுவை பணிக்கு சேர்த்து கொள்ளவேண்டும் என்று போராடினர். 

கன்னியாகுமரி முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை முடங்கியதால் அரண்டு போன நிர்வாகம் திரும்பவும் பாபுவை வேலைக்கு சேர்த்து கொண்டதோடு தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்துள்ளது. இது தமிழகம் எங்கும் உள்ள 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பாரம்(CWP )  , மற்றும் சென்ட்ரல் ஆர்கனைசேசன் ஆப் இந்தியன் டிரேட் யூனியன்  (COITU ) ஆகிய  அமைப்புகளை சார்ந்த   நாகர்கோவில் பொறுப்பாளர் தோழர். மகிழ்ச்சி   சங்கத்தை முன்னின்று  வெற்றிகரமாக வழிநடத்தினார்.ஒன்றுபட்டு போராடிய   நாகர் கோவில் இஎம்அர்ஐ 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்   (108AWU ) (COITU வோடு இணைக்கப்பட்டது) தோழர்களுக்கு COITU தனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறது. ஒத்துழைப்பு தந்த தமிழகம் முழுவதும் உள்ள 108  ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கும் COITU  தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்