ஞாயிறு, 17 ஜூலை, 2011

சினிமா வியாபாரத்திற்காக 27 மாவட்ட கிராம மக்களை ஏமாற்றிய கந்தசாமி பட தயாரிப்பாளர் தாணு ,இயக்குனர் சுசி கணேசன்


கந்தசாமி படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அந்த பட பாடல்கள் வெளியீட்டு விழவை ஒட்டி 27 மாவட்டங்களுக்கு ஒரு கிராமம் வீதம் தத்தெடுத்தனர். அந்த கிராமத்தையே மாதிரி கிராமமாக மாற்றுவோம் என்று கூறிய இயக்குனர் சுசி கணேசன் , மற்றும் ,தயாரிப்பாளர் தாணு கந்தசாமி பட பாடல்கள் வெளியீட்டுவிழாவிற்கு 17 .05 .2009 அன்று அனைத்து கிராமத்தினரையும் சென்னைக்கு வரசொன்னார்கள். 
 சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தத்தெடுக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் ஆரம்ப கட்டமாக ரூபாய். 3 00 ,000 /- கொடுப்பதாக அறிவித்தனர் அதற்கு மாதிரி காசோலையும் அளிக்கப்பட்டது. பல்வேறு நலத்திட்ட உதவிகளும் அந்த கிரமாங்களுக்கு அளிக்கப்படும் என்று கூறினார்கள். விக்ரம் ,சிரேயா ,ரகுமான் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். ஒருவருக்கு ஒருவர் இதை பற்றி ஆக ஓஹோ என்று புகழ்ந்து கொண்டனர் . அடுத்த ஒரு மாதத்தில்                வீடியோ எடுத்து அனுப்ப சொன்னார்கள் அதன்படி அந்த கிரமா மக்கள், பணம் செலவு செய்து வீடியோ எடுத்து அனுப்பினார்கள். அதற்கு பின்பு கந்தசாமி பவுண்டேசனில் இருந்தது எந்த தகவலும் வரவில்லை. அவர்கள் கொடுத்த செல்போன்கள் அனைத்து வைக்கப்பட்டுவிட்டது . கடிதம் எழுதியும் பலனில்லை.திருப்பூர் மாவட்டம் மருதுறை கிராமத்தலைவர் திரு . ஜெகதீசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் குப்பாயிவலசு கிராமம் இளைஞர் ஜனநாயக இயக்கத்தை சேர்ந்த சுரேஷ் மற்றுமுள்ள அனைத்து கிராமங்களையும் திரட்டி போராட்டம் நடத்த தயாராகி வருகிறார். தங்கள் வியாபார நலன்களுக்காக சும்மா இருந்த மக்களை தத்தேடுக்கிறோம் என்று ஆசை காட்டி படத்தை ஓட்டிவிட்டு அந்த கிராம மக்களுக்கு மோசடி செய்த படத்தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் சுசி கணேசன் ஆகியோரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் அனைத்து கிராமங்களையும் ஒருங்கிணைத்து போராடுவோம். .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்