திங்கள், 18 ஜூலை, 2011

தமிழக அரசுக்கு மாணவர்கள் கல்வி மீது அவ்வளவு அக்கறையா ?


இன்று( 18 .07 .2011 ) சென்னை உயர்நீதி மன்றம் சமசீர் கல்வித் திட்டத்தை 1 முதல் 10 வகுப்பு வரை இந்த கல்வி ஆண்டிலையே அமல்படுத்த வேண்டும் , அத்தோடு இந்த மாதம் 22 தேதிக்குள் பாடநூல்களை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகள் துவங்கி இரண்டு மாதங்களாக மாணவர்கள் பாடப்புத்தகத்தையே தொடாமல் உள்ளனர். தமிழக அரசோ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக முடிவு செய்துள்ளது .  
இது இன்னும் மேலும் ஒரு மாதத்திற்கு மாணவர்கள்  கல்வி பெறுவதை
தாமதப்படுத்துவதாகவே அமையும். இதில் 10 வது பொது தேர்வுக்கு செல்லும் மாணவர்களின் நிலை என்னவாகும் என்பதை அரசு யோசிக்க வேண்டும் . தமிழக அரசுக்கு உண்மையிலையே நல்ல கல்வியை தருவதில் அக்கறை இருந்தால் , தருமபுரி டாக்டர் . ரவிச்சந்திரன் அவர்கள் அனுப்பியுள்ள புகைப்படத்தினை பார்த்தால் இன்றைய அரசு பள்ளிகளின் கட்டிடங்களின் அவல நிலையும் , மாணவர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செய்து கொடுக்க வேண்டிய கழிப்பிடவசதிகளும் இன்றி, திறந்த வெளியிலும் மரத்தடியிலும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு கொண்டிருக்கும் அவல காட்சியையும் காணலாம். அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் தாங்கள் செய்ய வேண்டிய கடமையையே புறக்கணிக்கின்றனர் என்பதும் தெரியவரும். அரசு பள்ளிகளில் தரமான கல்வி என்பது இன்று கானல் நீராக அருகி வரும் வேளையில் தமிழக அரசு இது போன்ற கல்வியின் தரத்தை  உயர்த்த எந்த முயற்சியும் எடுக்காமல், மாணவர்கள் இன்னும் பாடப்புத்தகத்தையே தொடாமல் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்க்காமல் தான் எந்த முடிவு எடுத்தாலும் அதில் வென்றே தீருவேன் என்று கல்விமுதலாளிகளின் லாபாநோக்கத்தை மட்டுமே கொண்டு இயங்குவது என்பது கடுமையாக  கண்டிக்கக்கூடிய  போக்காகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்