சனி, 12 மார்ச், 2011

சாதி கட்சிகளை ஊட்டி வளர்க்கும் திராவிட கட்சிகள்

திராவிட கட்சிகள் தமிழகத்தில் வேர்விட்ட பின்பு தான் இங்கு அரசியல் என்பதே அப்பட்டமாக வியாபாரமாக ஆகிவிட்டது .அந்த அளவிற்கு தமிழகத்தின் கலாசாரத்தை சீரழித்ததில்  இந்த திராவிட கட்சிகளுக்கு மகத்தான பங்கு உண்டு.அதை மறைப்பதற்காக புது புது கூட்டணி  வேஷம் தரித்து இந்த கட்சிகள் மக்கள் முன்பு நாடகமாட வருவதுண்டு. தற்போது பணம் பட்டுவாடச்செய்வது தான் ஒரே தேர்தல் வேலை என்று ஆனா பின்பு இந்த இரு பெரும் கட்சிகளுமே சாதிய கட்சிகளுக்கு கணிசமாக தொகுதிகளை ஒதுக்கி கொடுத்து சாதியத்தை தக்க வைத்து கொள்ளும் வேலையை கட்சிதமாக பார்கின்றன. நேற்று  வரை  லெட்டர் பேடு கட்சியாக இருந்தவை எல்லாம் இன்று சில சீட்டுகளை வாங்கி கொண்டு தங்கள் சாதி பெருமையை பறை சாற்ற கிளம்பி  விட்டன. சாதி அரசியலை தூக்கி பிடிக்கும் மேல் தட்டை சார்ந்த சிலர் வேண்டுமானால்   இதில் பலன் அடையலாமே  தவிர     இது போன்ற சாதி கட்சிகளால் அந்த சாதியை சேர்ந்த அடித்தட்டு மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது. இதை உழைக்கும் வர்கத்தினர் புரிந்து கொண்டு இது போன்ற ஜாதிகட்சிகளையும் அவர்களை தூக்கி பிடிக்கும் திராவிட கட்சிகளையும் புறக்கணிக்க  வேண்டும்.

2 கருத்துகள்:

 1. // இது போன்ற சாதி கட்சிகளால் அந்த சாதியை சேர்ந்த அடித்தட்டு மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காது. //

  கம்யுனிஸ்டுகளால் இங்கிருக்கிற உழைக்கிற பாட்டாளி உழைக்கும் சாதிகள் அடைந்த பலனை விட...அம்மக்கள் நிறைவாகவே பெற்றுள்ளனரர்... இழப்பதற்கு ஏதுமற்றவர்களை மார்க்ஸ் அணி திரளச் சொன்னார் சரி...ஆனால்...தொடர்ந்து இழப்பை மட்டும் சந்தித்து வந்தவர்களை நோக்கி உங்களை போன்றவர்கள் என்ன சொன்னீர்கள்...காந்தியை போல காத்திருக்கத்தானே....

  சாதி கடந்து வந்து ஒரு கம்யுனிஸ்டு .....தன் சாதி இந்து பின்புலத்தை முற்றிலுமாக துறந்து ஊர் தெருவில் குடியமர்ந்த முன்மாதிரியை கொஞ்சம் ஊருக்கு அறிவியுங்களேன்...

  நகரத்தில் வந்து சாதி மறுப்பு, பொதுவுடைமை வெங்காயம் எல்லாம் பேசி விட்டு...ஊர் தெருவை விட்டு, பாட்டன், முப்பாட்டனின் கொழுத்த சொத்தை விட்டு வந்த புரட்சியாளர்களை காண்பியுங்களேன்..

  ஒடுக்கப்பட்ட இயக்கங்கள்...பிற பொதுவுடைமை இயக்கங்களை போலவே சீரழிந்திருக்கின்றன...அது இன்றைய அரசியலின் சூழல்....ஆனால் அவை பொதுவுடைமை இயக்கங்கள் சாதித்ததை விட அதிகமே சாதித்திருக்கிறது.....

  அவ்வளவு ஏன் உங்கள் அத்தனை இயக்கங்களையும் விட அண்ணல் அம்பேத்கரும்..தந்தை பெரியாரும் சாதித்தவை அளப்பரியது...

  பதிலளிநீக்கு
 2. //ஒடுக்கப்பட்ட இயக்கங்கள்...பிற பொதுவுடைமை இயக்கங்களை போலவே சீரழிந்திருக்கின்றன...அது இன்றைய அரசியலின் சூழல்....ஆனால் அவை பொதுவுடைமை இயக்கங்கள் சாதித்ததை விட அதிகமே சாதித்திருக்கிறது.....//
  ......அப்படி என்னதான் சாதித்திருக்கின்றன. கொஞ்சம் பட்டியலிடுங்களேன் பார்ப்போம்...நண்பரே.

  பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்