சனி, 19 மார்ச், 2011

கேரளாவில் போட்டியிடுவதற்கு தமிழகத்தில் வசூல் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சி

பொதுவாக சரியான மார்க்சிய பார்வையுடன் வழி நடத்தப்படும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக  ஒரு கட்சி இருக்குமேயானால் முதலாளித்துவ அரசால் நடத்தப்படும் தேர்தல்களை பயன்படுத்தி மக்கள் பிரச்சனைகளை, மற்ற நேரங்களில் எடுத்து செல்ல முடியாத பிரச்சாரங்களை மக்கள் முன் வைக்கும். இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இரண்டும் வெட்ட வெளிச்சமாக அவைகளின் குறிக்கோள் உழைக்கும் வர்க்கத்தை திரட்டுவதும் அதன் மூலம் உழைக்கும் மக்களின் கட்சியாக ஆட்சியை பிடிப்பது என்பதெல்லாம் போய் முதலாளித்துவத்திற்கு சேவை  செய்வது அம்பலப்பட்டுவிட்டது. இந்த இரண்டு கட்சிகளும்  இன்று  உழைக்கும்  மக்களுக்கான  கட்சிகள் அல்ல என்பது பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்கு வந்து விட்டது. இதோ மூன்றவதாக  இவர்களின்  அணியில்  சேர்ந்திருக்கிறது  சோசலிஸ்ட் யுனிட்டி சென்டர் ஆப் இந்திய (கம்யூனிஸ்ட்).
வங்காளம் பல அறிஞர்களை ,போராளிகளை இந்த இந்திய மண்ணிற்கு அளித்துள்ளது. ராபின்தரநாத் தாகூர் , சுபாஸ் சந்திர போஸ் போன்றவர்கள் வங்கம் தந்த கர்ம வீரர்கள். சுதந்திர போராட்ட வீரரான தோழர் சிப்தாஸ் கோஷ் தனது அறிவார்ந்த தோழர்களோடு  இணைத்து   இந்திய  மண்ணிற்கு ஏற்ற ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைக்க முயற்சித்தார்.அவர் உருவாக்கிய அமைப்பு தான் சோசலிஸ்ட்  யுனிட்டி  சென்டர்  ஆப் இந்தியா . அனால்  அவரது இறப்பிற்கு பின்னர் திருத்தல்வாத தலைமையின் காரணமாக கட்சியை ஒரு புரட்சிகர கட்சியாக வழிநடத்தாமல் சி.பி.எம்., சி.பி.ஐ.யை போலவே பலவிதமான திருத்தல்வாத போக்குகளுடனும் நடத்தியது தலைமை. இதனால் பல நல்ல தோழர்கள் அதில் இருந்து பிரிந்து கம்யூனிஸ்ட் வோர்கர்ஸ் பிளாட்பாரம்(CWP) என்ற அமைப்பை துவங்கி ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக செயல்பட்டு வருகின்றனர். வரும் தேர்தலில் SUCI(C)  கட்சி  கேரளத்தில்  26  தொகுதிகளுக்கு  தனது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தாங்கள்  போட்டியிடும் தொகுதியில்  பிரசாரத்தை  மேற் கொண்டே பொதுமக்களிடம் வசூல்   செய்யும்,அதன் மூலம் தங்கள் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லும். ஆனால் SUCI(C) தாங்கள்  போட்டியிடும் தொகுதியில் பொதுமக்களிடம் வசூல் செய்யாமல் வசூல் அதிகமாக ஆகிறது என்பதால் சென்னைக்கு வந்து கேரளா SUCI(C) கட்சியினர்  வசூல்  செய்கின்றனர். அந்த அளவிற்கு இந்த கட்சி உழைக்கும் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு வரை முறையில்லாமல்  வசூல் செய்யும் சாதாரண முதலாளித்துவ கட்சி அளவிற்கு சிரழிந்து போய் விட்டது. இந்த கட்சியை  உழைக்கும் மக்களுக்கான கட்சியாக எப்படி மக்கள் ஏற்று கொள்வார்கள்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்