வெள்ளி, 18 மார்ச், 2011

கூட்டணி கூத்துக்கள் யாருக்காக?

தேர்தலில் கூட்டணி சேரும் கட்சிகள் முன்பெல்லாம்உள்ளே  ஆயிரம் சண்டைகள் இருந்தாலும் வெளியே எதையும்  காட்டிக்கொள்ளாமல் "நண்பெண்டா " என்று உலா வரும். தற்போது மக்களிடம் அனைத்து கட்சிகளுமே தனது சுயமதிப்பை இழந்து விட்டு பணம் பண்ணுவதே அரசியல் என்றாகிவிட்ட இந்த சூழலில் இந்த அரசியல் கட்சிகள் எல்லாம் எந்த முகமூடியையும்   போட்டுக்கொள்வதில்லை.தி.மு.க., அதி,மு.க என்று இரண்டு கட்சிகளிடமும் பேச்சு நடத்துவது,யாரிடம் அதிக தொகுதிகள் , மற்றும் பணபேரம் படிகிறதோ அவர்களோடு கூட்டணி போடுவது, கூட்டணியில் அதிக தொகுதி பெற  அனைத்து உபாயங்களையும்கையாளுவது. அரசியல் அங்கீகாரத்திற்காக சில தொகுதிகளில் வெல்வது, கூட்டணி கட்சியை தோற்கடிக்க உள்ளடி வேலை பார்ப்பது என்று இந்த அரசியல்  முழுவதுமே கேடுகெட்டதாகி விட்டது.  இதனால் இந்த சமூகத்திற்கு எந்த விதமான முன்னேற்றமும் இல்லை என்றாகி விட்டது.நம்பியவர்களை கழுத்தறுப்பது, ஏமாற்றுவது என்பதே இந்த வியாபாரிகளின் தாரக மந்திரமாகி விட்டது.இந்த தேர்தலில் கூட்டணி பேச்சு வார்தையிலையே இது உறுதியாகிவிட்டது.
இதையெல்லாம் விட பெரிய கூத்துகள் தேர்தல் முடிந்த உடன் அரங்கேற இருக்கிறது, எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மிக பெரிய குதிரை பேரத்திற்கு தயாராக இருக்கின்றன அரசியல் கட்சிகள். இந்த தேர்தல்முறைகள் மூலம் ஏதாவது சமூக மாற்றம் ஏற்படும் என்று யாரவது கருதுவார்கள் என்றால் அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

1 கருத்து:

  1. பரிட்சைக்கு தேர்வாவதற்கு பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது, ஆண் பிள்ளை பிறக்க அலகு குத்துவது, நினைத்த பெண்ணை மணக்க காவடி தூக்குவது போன்ற மூடநம்பிக்கையைவிட மோசமான மூட நம்பிக்கை சமூக மாற்றம் ஏற்பட தேர்தலில் ஓட்டளிப்பது.

    கனவுக்கு பதில் அறிவியல்
    கண்ணீருக்கு பதில் போராட்டம் என்பதே உணமையான தாரக மந்திரம்.

    மக்களுக்கு இம்மந்திரம் புரிவதற்கான நாள் வெகுதூரமில்லை......

    - சென்னைத்தமிழன்

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்