புதன், 9 மார்ச், 2011

தேர்தல் தேதியை தள்ளி வைக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, மார்ச் 9- தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தள்ளி வைக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.மேலும், தேர்தலை ஏப்ரல் 13-ம் தேதி நடத்த சில நிபந்தனைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது. இதன்படி, பள்ளித் தேர்வு முடியும் வரை ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும், பள்ளிகளுக்கு அருகே 200 மீட்டர் தூரம் வரை தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், தேர்தல் நேரத்தில் பள்ளி வாகனங்களுக்கு எந்தவித இடையூறும் செய்யக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிப் பொதுத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு சட்டப் பேரவைத் தேர்தலைத் தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக திண்டிவனத்தைச் சேர்ந்த குரு அப்பாசாமி, மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சிவ இளங்கோ ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித் தனியாக மனுக்களைத் தாக்கல் செய்தனர். அவற்றின் மீதான விசாரணையில், தேர்தலை தள்ளி வைக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்