திங்கள், 28 மார்ச், 2011

எங்கே காமராஜர் - தங்கபாலுவின் மகா மோசடி அரசியல்


தங்கபாலுவை பார்க்கும் போதெல்லாம் 'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா' என்ற மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல் தான் நினைவிற்கு வரும்.   கடந்த ஆட்சியில் கருணாநிதிக்கு சாதகமாக நடந்ததன் மூலம் பெரும் பலனடைந்தார் தங்கபாலு.   கடந்த நாடாளமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் நின்று எப்படியாவது எம்பியாகி மந்திரியாக வேண்டும் என்ற கனவுடன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.சொந்த கட்சியிலே கடுமையான எதிர்ப்பை சந்தித்து வரும் தங்கபாலு எப்படியாவது இந்த சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத பட்சத்தில் மந்திரியாகி பெரும் பொருள் சேர்க்கலாம் என்ற கனவுடனே தான் போட்டியிடப்போவாதாக அறிவித்தால் சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எண்ணி தனது மனைவியை வேட்பாளராக்கி அந்த வேட்பு மனுவை தவறாக தாக்கல் செய்து, கொள்ளை புறம்  வழியாக இவர்  இப்போது மயிலாப்பூர் சட்டமன்றத்தில் போட்டியிடுகிறார். சொந்த கட்சியில் செல்வாக்கில்லாமல் குறுக்கு வழியில் முன்னேற துடிக்கிறார் இந்த மகா மோசடி அரசியல் வாதி. இதன் மூலம் கருணாநிதியின் பல கேடுகெட்ட சாதனைகளை முறியடித்துள்ளார். காமராஜர் போன்ற பதவி,புகழ், பணம் ஆசை இல்லாத மக்கள் தலைவர்கள் இருந்த இந்த காங்கிரசில் தான் இப்படி ஒரு கேவலமான ஜந்துவும் இருக்கிறது என்பதை எண்ணி பார்க்கும் போது தமிழகம் அரசியல் அநாகரிகத்தின் உச்சியில் இருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்