வியாழன், 17 மார்ச், 2011

"இயன்முறை முறை மருத்துவத்தை மக்கள் சொத்தாக்கிடுவோம்"

                                                                                                              -  கருப்பன்.சித்தார்த்தன்

நாடெங்கும் பயிர் பச்சைகளை அரித்து தின்னும்  வெட்டுக்கிளிகள் . இந்த வெட்டுக்கிளிகளை வேட்டையாடித்தின்று இல்லாமல் செய்யும் மஞ்சக்காட்டு மைனாக்களோ கூண்டுக்குள். வெட்டுக்கிளிகள் பன்மடங்காய் பல்கி பெருகி பயிர்பச்சைகள் அறவே அழித்து  நாசப்படுத்த வேண்டும். கூண்டுக்குள் அடைக்கபட்டிருக்கிற மைனாக்களையும் சூப் வைத்து குடித்து விட வேண்டும். இதுதான் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனப் பெருங் கொள்ளையர்களின்     நலனுக்கு உகந்தது. இவர்களுக்கு உகந்த எது ஒன்றும் இந்திய தமிழ்நாட்டு ஆட்சியார்களுக்கும் உகந்ததே என்பது நமக்கு பழக்கப்பட்ட விஷயம் தானே ?

இன்று தமிழகத்தில் முப்பது,நாற்பது சதவிகித மக்களுக்கு நரம்பியல் கோளாறு.இதயவியல், எலும்பு முறிவு, மகப்பேறியல்,குழந்தைகள் நலத்தில் சிக்கல், மூட்டு மாற்று அறுவை சிகிட்சை, எலும்பு முறிவு சிகிட்சை,தசை அமுகல் பிரச்சனை என்று பல நூறு உடற்கோளாறுகள்.

வெட்டுக்கிளிகளை வேட்டையாட எப்படி வலை வீச வேண்டா! உயர்தட்டு,நடுத்தரவர்க்க மக்களுக்கு இந்த சிகிட்சை கிடைக்காமல் இல்லை. அவர்களிடம் பணம் இருக்கிறது, கிடைக்கிறது. இன்னும் அரசு மர்த்துவமனைகளுக்கே வந்து கொண்டிருக்கிற 35 சதவிகித மக்களுக்கு மட்டும் தான் இந்த சிகிட்சை கிடைக்காமல் 40  வருடங்களாய் மறுக்கப்பட்டு வருகிறது. ஏன் இப்படி?

50 சதவிகித மக்கள் அரசு மருத்துவ மனைகளை குப்பைத்தொட்டிகளாய் நினைத்து ஒதுக்கி விட்டார்கள். ஒரு 15 சதவிகித மக்கள் வங்கி சேமிப்பு,மற்றும் சொத்துகளை விற்றும் ,கடன்  வாங்கியும் தனியார் மருத்துவ மனைகளுக்கே செல்கிறார்கள். இந்த 65 சதவிகித   மக்களுக்கே மாத்திரை,மருந்துகள் விற்பதில் உள்நாட்டு , வெளிநாட்டு, பன்னாட்டு ஏகபோக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு கிடைக்கும் லாபம்: ஒரு லட்சம் கோடி ரூபாய். இவர்களின்   ஒரே குறி; அரசு மருத்துவமனைகளுக்கே வந்து கொண்டிருக்கிற 35 சதவிகித நோயாளிகளில் உடனடியாக 15  சதவிகிதத்தினரை தனியார் மருத்துவ மனைகளுக்கே வரச்செய்ய வேண்டும்.தங்களின் மருந்து மாத்திரை வியாபாரம் இன்னும் சூடு பிடிக்க வேண்டும். இந்த கொள்ளையர்களின் ஆணைகளுக்கே ஏற்பவே நமது அரசுகள் மக்களுக்கான மருத்துவ சேவையை, குள்ளநரித்தனமாக எல்லா வழிகளிலும் கட்டண சேவையாக மாற்றி வருகின்றன.

உள்நாட்டு , வெளிநாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நமது ஆட்சியாளர்கள்  நிரப்பப்பட்ட இருந்தது.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 60 : 5  என்கின்ற ரீதியில் 300  பேர்களுக்கு நேர்காணல் அழைப்பை அனுப்பிட தரகர் வேலை வாய்ப்பு அலுவலக்கதிலேயே தவம் கிடந்தார். டெல்லி தலைமை தேர்தல் கமிஷனர் அவரசரப்பட்டு கெடுத்து விட்டார். சரி போகட்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்புபடி 10  ஆயிரம் பேருக்கு ஒரு பிசியோ தேரப்பி ஸ்டாவது  தேவை. அனால் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவ மனைகளிளுமாய் மொத்தம் 160 இயன்முறை மருத்துவர்களே பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். கடந்த செப்டம்பரில் அரசு மருத்துவமனைகளில் 600  இயன்முறை மருத்துவர்கள்  நியமிக்கப்படுவார்கள்  என்று  அமைச்சர்  பன்னீர்  செல்வம் அறிவித்தார்.ஆனால் நியமிக்கப்பட்டிருப்போர் 15  பேர்கள் மட்டுமே .


இன்றைய நவீன காலத்தில் 40  வயத்திற்கு மேற்ப்பட்டோர் எல்லோருக்குமே எதோ ஒரு உடற்கோளாறு இதில் முக்கால் வாசிக்கொளாறுகளை  ஊசி  இல்லாமல்,  மருந்து , மாத்திரை  இல்லாமல்  தரக்கூடிய அபூர்வ மருந்துவ முறை இயன்முறை மருத்துவர்கள் வேலை இன்றி இருக்கிறார்கள். தமிழகத்தின் 1562  ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட மாவட்ட, தாலுகா, துணை சுகாதார நிலையங்கள் இவர்களின்  சேவைக்காக  ஏங்கிகொண்டும்  இருக்கின்றன.
 
மனித சமூகத்தையே  அரித்துக் கொண்டிருக்கிற நோய்களும் இருக்கின்றன.அதற்கான இயன்முரைமருத்துவர்களும் இருக்கின்றனர்.மருத்துவர் இன்றி தமிழகத்தில் 2000  மருத்துவமனைகளும், சேவை செய்ய வாய்ப்பின்றி இயன்முறை மருத்துவர்கள் 30 ஆயிரம் பேர்களும் ஏககாலத்தில் ஏங்கித் தவிப்பது என்னா பெரிய சாபக்கேடு? இதற்கு  ஒரே காரணம்; பன்னாட்டு மருந்து தயாரிப்பு கொள்ளையர்களின் லாப வெறிக்கு இவர்கள் தடையாக இருப்பது மட்டும் தான். இவர்கள் தான் ஆட்சியாளர்களோடு கள்ள உறவு கொண்ட இந்த இயன்முறை மருத்துவ முறையை முடக்கி வைத்திருக்கிறார்கள். மருந்தில்லா மருத்துவமான இயன்முறை மருத்துவம் இன்று மருந்து தயாரிப்பு ஏகபோக நிறுவன ஏகாதிபத்தியத்தின் கொடிய அடக்கு முறையை  சந்தித்துக் கொண்டிருக்கிறது. அயல்நாடுகளில் தடை செய்யப்படிருக்கிற கொடிய வலி மருந்துகள் பலதையும் விற்க தமிழக ஆட்சியாளர்கள் தாராளமாய் அனுமதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த வலி மாத்திரைகளே இல்லாமல் குணப்படுத்தும்  வல்லமை  படைத்த இயன்முறை மருத்துவத்தையே தமிழக ஆட்சியாளர்கள்  தாராளமாய் அனுமமதித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த வலி மாத்திரைகளே இல்லாமல் குணப்படுத்தும் வல்லமை படைத்த இயன்முறை  மருத்துவத்தையே தமிழக ஆட்சியாளர்கள் கால்களில்  போட்டு  மிதித்து  நசுக்கிகொண்டிருக்கின்றார்கள்.
  
ஆதாரம் இன்றி இதை சொல்லவில்லை, தமிழ்நாட்டில் பிசியோதெரபி மருத்துவ கவுன்சில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது 18 .09 .2010 ல்  ஆனால் அந்த அரசாணை காகிதத்தில்தான் இருக்கிறது. ஏன்   18 மாதங்களாகியும் இக்கவுன்சில் அமைக்கப்படவில்லை? இந்த  கவுன்சில் அமைக்கப்பட்ருந்தால் இவர்கள் சுயமாக தொழில் செய்தாலும் எவருக்கும் பயப்பட தேவையில்லை. இவர்களை போலி மருத்துவர்கள் என்று சொல்லி யாரும் கைநீட்ட முடியாது . இவர்களுக்கு ஒரு கவுரவமும் பணி பாதுகாப்பும் கிடைத்திருக்கும். பணிக்கு சட்ட ரீதியான அங்கீகாரமும் கிடைத்திருக்கும். மருந்து கம்பெனி முதலாளிகளின் விருப்படி மாற்று மருத்துவர்களை கூண்டில் அடைத்து குச்சியை விட்டு கண்களில் குத்திகொண்டிருப்பவர்கள் அரசாணை வெளியிடுவார்கள் .அதை அவர்களே குப்பைகூடையில் போடுவார்கள்.

 தமிழ் நாட்டில் தனியார் நடத்தும் 35 பிசியோதெரபிக் தனியார் கல்லூரிகளில் ஒன்றில் கூட பிசியோதெரபி முதுநிலை படித்தவர்கள் சட்டப்படியான எண்ணிக்கையில்  கிடையாது. இந்த 37 கல்லூரிகளிலிருந்தும் ஆண்டுக்கு 1200 பேர்கள் பிசியோதெரபிஸ்ட் படித்து முடித்து விட்டு வந்து வேலை இல்ல பட்டாளத்தில் புதிதாக சேர்கிறார்கள். இன்னும் ஒரு வேடிக்கை தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் அரசின் சார்ப்பில்   6 புதிய பிசியோதெரபிக் கல்லூரிகள் துவங்கப்படும் என்று அப்போதைய சுகாதார துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு செய்தது 2006 ல்  இன்னும் ஒரு புதிய கல்லூரி கூட தொடங்கிய பாடில்லை. இந்த அடக்கு முறையின் மற்றொரு அங்கம் தான்; இயன் முறை மருத்துவர்கள் தங்களின் பெயருக்கு முன்னாள் டாக்டர்கள் என்று போடக்கூடாது என்பதும், எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு எவ்வளவு காலமோ அதே கால அளவுதான் பிசியோதெரபிக்கும், எம்.பி.பி.எஸ்.படிப்பிற்கு எந்த பாடத்திட்டமோ அதே பாடத்திட்டம் தான் பிசியோதெரபிக்கும். இருவரும் ஒரே பாடத்திட்டத்திற்கு அப்பால் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் படிப்பது; என்று மட்டும் தான். டாக்டர் என்று குறிப்பிட்ட அல்ல. ஆனால் அலோபதி படித்தவர்கள் மட்டும் டாக்டர்கள் என்று போட்டுக்கொள்ளலாம். பிசியோதேரப்பிஸ்டுக்கள் டாக்டர் என்று போடக்கூடாதாம். இதென்ன இரட்டை அளவுகோல்? முன்னவர்களால் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கிறது ? ஆட்சியில் இருப்பவர்களுக்கு கமிஷன் கிடைக்கிறது என்பதால ? மருந்துகளின் வளர்ச்சி மட்டுமே மருத்துவத்துறையின் வளர்ச்சியா ? மருந்தில்லா மருத்துவமும் மருத்துவத்துறையின் வளர்ச்சிதான். இவர்கள் டாக்டர் என முற்சேர்க்கை இடாமல் இருப்பதனால் இவர்களுக்கு ஒன்றும் பாதிப்பில்லை மக்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அடித்தட்டு மக்கள் வரை. அதாவது ஏழை , எளிய கிராப்புற  மக்கள்வரை இச்சேவை நேரடியாக சென்றடைவதை தடுக்கவே இந்த சதித்திட்டம். இதன் மூலமும் மக்கள் நோயினால் பீடிக்கப்படுவதை தடுக்க அல்லது சரி  செய்ய உருவான ஒரு உன்னதமான மருத்துவ முறையை அழிக்க நினைக்கிறார்கள் மருந்துக்கொள்ளையர்கள். இவர்களின் கங்கானிகளாய் நமது துரோக                ஆட்சியாளர்கள்.

            மருந்து தயாரிப்புக் கொள்ளையர்களின் விருப்பம் பிசியோதெரபி கவுன்சில் அமைத்திடம் அரசானையில் கூட தலைக்காட்டியுள்ளது இப்படி; “ He shall not Prefix ‘Dr’ before his name ” இப்படி ஒரு அநியாய வரியை இதே தமிழக அரசு அலோபதி மருத்துவ கவுன்சிலுக்கும் போடணுமா வேண்டாமா? சித்த மருத்துவர்கள், ஆயூர்வேதா, ஓமியோபதி, கால்நடை மருத்துவர்கள், நாட்டு வைத்தியர்களும் கூட தங்கள் பெயருக்கு  முன்னால் டாக்டர்கள் என்று போட்டுக்கொள்ளலாம், போட்டுக்கொள்கிறார்கள்.  ஆனால் 4 ண்டு படிப்பும், 6 மாதப் பயிற்சியும் கொண்ட பிசியோதெரப்பிஸ்ட் படிப்பில் உடல் கூறியல், உடல் உறுப்புக்களின் செயல்பாடுகள், நுண்ணுயிரியல் , நோயியியல், பொது மருத்துவம், உயிர் வேதியியல், மசாஜ் செய்தல் உள்பட அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருக்கிற இயன்முறை மருத்துவர்கள் மட்டும் தங்கள் பெயருக்கு முன்பாக டாக்டர் என்று போடக்கூடாதாம். இப்படி அரசானையிவேயே விஷமம் தலைவிரித்தாடுகிறது எனில் அமெரிக்க மாமனின் கை எங்கே வரை நீண்டிருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

            உயிர்கல்வித்துறை  ஜாம்பவான்களிடமேல்லாம் விசாரித்து விட்டோம்; "பி.எச்டி முடித்தவர்கள் மட்டும் தான் தங்கள் பெயருக்கு முன்னாள் டாக்டர் என்று போட்டுக்கொள்ளலாம்"மருந்தில்லா மருத்துவமான பிசியோதேரபியை ஒழித்துக்கட்ட இவர்கள் தங்களை டாக்டர் என்று தங்களை அழைத்துக்கொள்வதை தடுக்க இந்த அபூர்வ மருத்துவ முறை அடித்தட்டு மக்களை சென்றடையாமல் தடுக்க நிறுத்திட IMA  - என்று அளை க்கப்படுகின்ற இந்திய மருத்துவர் சங்கமும், MCI  என்று கூறப்படுகின்ற இந்திய மருத்துவ கவுன்சிலும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன.
 இந்நிலையில் IAP  என்று கூறப்படுகின்ற அகில இந்திய இயன்முறை மருத்துவ ஜெனரல் கவுன்சிலின் தமிழ் நாட்டுக்கிளை என்ன செய்து கொண்டுக்கிறது.? எதுவுமே செய்யாமல் இருந்தால் கூடப்பரவாயில்லை. உரிமைகளுக்காகவும்,  வேலைக்காகவும் போரடிக்கொண்டுருக்கிற தமிழகத்தின் 30ஆயிரம் பிசியோதெரப்பிஸ்ட் படித்த இளைர்களை  எள்ளி  நகையாடிக்கொண்டிருகிறது.  23.11.2010  நேர்காணல் மூலமாய் பணி நியமனம்  பெற்றிருக்கிற  15   இளைர்களிடம்  ஒரு கோடியே 10  லட்ச  ரூபாய்  பணம்  பறித்ததும் இக்கும்பல் தான். மீதி 60  பேர்களிடம் வாங்கிய 2 .5  கோடி ரூபாய் தொகையை உடனே கொடுக்காமல் இழுத்தடித்ததும் இக்கும்பல் தான். கடைசி கடைசியாய் 60 பணியிடங்களுக்கு  நேர்காணல்  அழிப்பு  விடுக்கக்கோரி அலைந்ததும் இதே கும்பல் தான். திடீர் தேர்தல் அறிவிப்பு  வரவில்லை என்றால்  கரன்சி கட்டுகளால் பெரிய  அளவில்  தொப்பை  பெருத்திருக்கும்  இக்கும்பல்.
இந்த மைனாக்களை கூண்டை விட்டுத்திறந்து விட்டால் தமிழகம் முழுவதிலும் இருக்கிற 28 மாவட்ட மருத்துவமனைகள் 380 தாலூகா மருத்துவமனைகள் 1562 ரம்ப சுகாதார நிலையங்கள் 800க்கும் மேற்பட்ட நிலையங்களில் இருந்து பயிரை அழிக்கும் வெட்டிக்கிளிகளான-நரம்பியல், இதயவியல், எலும்பு முறிவு மகப்பேறியல், குழந்தைகள் நலம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, தசை அலர்ச்சி குறிப்பாக 40 சத தாய்மார்களுக்கு இருக்கிற மூட்டு வலி, இடுப்பு வலி பிரச்சனைகளை மருந்தே இல்லாமல் சுளுக்கெடுத்து விடுவார்கள். இதனால்  பன்னாட்டு மருந்து கம்பெனி  மச்சான் கோவித்து - உலக வங்கிககடனை நிறுத்தி விடுவானே? இவர்களின் உதடுகள் பேசுவது  மட்டும் தானே நாட்டு நலன்? இவர்களின் எல்லா செயல்பாடுகளும் சொந்த மகன்களின் நலன்களுக்காக மட்டும் தானே? சொந்த நலன் என்கிறபோது மட்டும் சின்ன இடைவெளி கிடைத்தாலும் முடிந்ததை லவக்கென்று சுருட்டிக்கொள்வார்கள் இவர்கள்.

            2010 நவ. 23-ந் தேதி பிசியோதெரபி டாக்டர்களின் 15 பணியிடங்களுக்கு திடிரென ஒரு நேர்கானல் நடந்தது. பதிவு மூப்பு அடிப்படையில் 1 : 5 என்கிற அடிப்படையில் 75 பேர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து நேர்கானலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நேர்காணல் முடிந்து ஒண்ணரை மாதங்களுக்குப் பிறகு ஒரு 15 இயன்முறை மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

            இதில் நடந்த கூத்தோ படு சுவாரஸ்யமானது. அந்த ஒண்ணரை மாத இடைவெளியில் அந்த 75 பேர்களிடமும் பேரம் நடந்தது. ஒரு 50 பேர்கள் ளுக்கு ஐந்து லட்சம், ஏழு லட்சமென தரகரிடம் தந்து விட்டனர். அதிகத் தொகை தந்த முதல் 15 பேர்களுக்கு (7 லட்சம்) மட்டும் பணி நியமன ணை கையில் கிடைத்தது. இந்த வகையில் தரகரின் கைக்கு வந்த தொகை ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய். மீதிப்பேர்களிடம் வசூலித்த 2 கோடி ரூபாயை மூன்று மாதம், ஐந்து மாதமென தரகரிடம் அலைந்து திரிந்து கொடுத்த தொகையை திரும்பப் பெற்றார்கள் இளைஞர்கள். அந்தத்தரகர் யார் என்றால் அகில இந்திய (I.A.P.) பிசியோதெரபி ஜெனரல் கவுன்சிலின் தமிழ் நாட்டுக்கிளையின் நிர்வாகிகளில் ஜெயபிரகாசமான ஒருவர். இவர் யாருக்கு தரகர் என்பது சொல்லித்  தெரிய வேண்டிய அவசியமில்லை. இவருக்கு அடையாறில் 21/2 கோடி ரூபாய் மதிப்பில் பங்களா இருக்கிறதாம். இந்த சகலகலாவல்லவனின் சீனியர் பரிதாப நிலையில் இருக்க காரணம்  இவருக்கு பன்னீர்தெளிக்கிறசாமர்த்தியம் இல்லாததே.நல்லவேளை மேலும் 60 இயன்முறை மருத்துவ இளைஞர்கள் வீடு, நிலத்தை விற்காமல் தப்பித்துக்கொண்டனர்.  ஏனெனில் அப்போது மேலும் 60 பிசியோதெரபிஸ்டுக்கள் பணி இடங்கள் பணியிடங்களுக்கு நேர்காணல் அழைப்பு விடுக்ககோரி அலைந்ததும் இதே கும்பல் தான்.
மக்களுக்கான மாற்று மருத்துவமான இயன்முறை மருத்துவத்தை மக்களுக்கே சொந்தமாக்கிட  களத்தில்   களத்தில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிற தம்பி கிருஷ்ணகுமார் தலைமையிலான இயன்முறை மருத்துவர் பெருமன்றத் தோழர்களுக்கும், தம்பி விஜய் ஆனந்த் தலைமையிலான தமிழக பிசியோதேரபிஸ்ட்டுகள் நலசங்க தோழர்களுக்கும் "அநீதிக்கு எதிரான தகவல் மற்றும் நடவடிக்கைக்கான ஆய்வாளர் குழுமம்" விடுக்கின்ற அறைகூவல் இதுதான்.

ஒரே தலைமையின் கீழ் ஒற்றுமையுடன் போராடுவதின் மூலமே பல அற்புதங்களை நிகழ்த்த முடியும்.எந்தப்பின்னணியும் கொண்டிராத நடுத்தர வர்க்க குடும்பங்களில் இருந்து வந்திருக்கிற  பல ஆயிரம் பிசியோதெரபிஸ்ட் இளைஞகர்கள்  தன்னையொத்த இளைஞகர்களோடு ஒருங்கிணைந்து ஒரே அமைப்பாக இணைந்து வலிமையோடு செயல்படத்தொடங்கும் போது மட்டும் தான் அவன் கோடிக்கால் பூதத்தின் பங்கும் பகுதியும் ஆகிறான். பன்னாட்டு மருந்துக்கொள்ளையர்களின் கொள்ளையை அடக்கவல்ல ஒரே சூலாயுதம் ஒன்றுப்பட்ட போராட்டமே.
போராட்டங்களும் ஒருவகையான போர்களே, ஒரு போரில் ஈடுபடும் இருதரப்பினரும் மிக முக்கிமாக எண்ணிப்பார்க்க  வேண்டியது தனது  எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் தான்.
அவனோடு மோதத் தயாராகும் நமது பலத்தையும் நம் பலவீனத்தையும் நாம் துள்ளியமாக உணர்ந்து தெளிந்திருக்க வேண்டும். இந்த வகையில் நாம் சார்ந்திருக்க வேண்டியது நமது சொந்தப்பலத்தையும் நாம் மேற்கொண்டுள்ள சுய தயாரிப்புகளையுமே இந்த வகையில் பன்னெடுங்காலமாய்  வஞசிக்கப்படிருக்கிற பல ஆயிரம் பிசியோதெரபிஸ்ட் இளைஞர்களின் தளம்  முதற்கண்  உங்கள் ஒற்றுமையில் தான் இருக்கிறது. இப்படி நீங்கள் செயல்பட்டால் தான் சமூக மாற்ற சிந்தனையும், லட்சிய வேட்கையும் கொண்ட அமைப்புகளின் பின்புலமும் நிபந்தனையற்ற ஆதரவும் தங்குதடையின்றி கிடைக்கும். பிறகு நீங்கள் நிகழ்த்த  போவ தெல்லாம்  அற்புதங்கள் மட்டுமே.

பல்வேறு ஊழல் நடவடிக்கைகளால் முடை நாற்றமடித்துக்கொண்டிருக்கும் தமிழக ஆளுங் கட்சியின் அரசியலும், அதன் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும்  ஆட்சியையும் நீங்கள் இரு அமைப்புகளும் ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே இன்றில்லாவிட்டாலும்  நாளை  உங்கள் முன்பாக மண்டியிட்டேயாக வேண்டும்.

எனவே உங்கள் இரு தரப்பினரையும் ஒன்றிணைத்து ஒன்றுபட்ட போராட்ட களத்தில் இறங்க முன்வருமாறு செவ்வணக்கத்தொடும் புரட்சிகர வாழ்த்துகளுடனும் அறைகூவி அழைக்கிறோம். என்றும் உங்கள் தோளோடு நிற்கவும் செய்வோம்.

சென்னை -107 .
13 .03 .2011                               

தோழைமையோடு 
கருப்பன்.சித்தார்த்தன்
அநீதிக்கு எதிரான தகவல் மற்றும் நடவடிக்கான ஆய்வாளர் குழுமம்
கைபேசி: 9710309050

குழுமம் தொடர்ப்புக்கு  :
செயலாளர்,
சமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு
கு.கதிரேசன் M .A .,M.L .,
கைபேசி : 9843 464246


           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்