புதன், 9 மார்ச், 2011

ஒரிஸ்ஸாவில் இரும்பு ஆலை துணை பொது மேலாளர் எரிப்பும் -தொழிலாளர்களின் கையறுநிலையும்



இந்திய முதலாளித்துவ அரசில் தொழிலாளர் சட்டங்கள் என்று இருப்பவையும் அவை தொழிலாளர்களுக்கு வழங்கும் உரிமைகளும்  மிகவும் சொற்பம் என்றே சொல்லலாம். ஆல் போ  வளரும் வீட்டு வடாகையும், விண்ணை தாண்டி உயர்ந்து கொண்டே போகும் விலைவாசி உயர்வும் தொழிலாளர்களை சொல்லென்ன துயரத்திற்கு ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய தொழில் நிறுவனங்கள் ,தொழிலாளர் சட்டங்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை இந்த போக்கை ஆளும் முதலாளித்துவ  அரசும் , அந்த அரசின் நலனை பேணிக்காக்கும் நீதிமன்றங்களும் இவ்வாறு காலங்காலமாக தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, இந்த சுரண்டும் போக்கை கண்டும் , காணாதது போல தனது கண்களை இருக்க மூடிக்கொண்டுள்ளன.

இந்த நிலையில் ஒரிசா மாநிலத்தில் பலன்கிர் பகுதியில்  உள்ள சேன்டு வுட்டு இரும்பு தொழிற்சாலையில் நிரந்தர தொழிலாளர்கள் ஊதிய   உயர்வு கேட்டு போராடியதற்கும், பலகாலமாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே உள்ள தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்ய கோரியதற்கும், தொழிலாளர்களுக்கு தொழில் தகராறு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள சங்கம் அமைக்கும் உரிமையின்படி சங்கம் அமைத்ததற்கும், என்று பல காரங்களை கூறி எந்த வித முன்அறிவிப்பும் கொடுக்காமல் நிரந்தரத் தொழிலாளர்கள் சிலரையும், ஒப்பந்த தொழிலாளர்கள் பலரையும்  லை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. அந்த சட்ட விரோதமான பணி நீக்கத்தை எதிர்த்து போராடிய தொழிலாளர்களை லை நிர்வாகம் எந்த விதமான பேச்சு வார்த்தைக்கும் அழைக்கவில்லை அத்தோடு அவர்கள் தொழிலாளர் நல அலுவலரிடம் கொடுத்த முறையீட்டையும் நிர்வாகம் அலட்சியம் செய்தது. தொழிலார் நல அலுவலரும் இந்த பிரச்சனையில் முதலாளியின் பக்கமே வழக்கம் போல நின்றுவிட்டார் . போராடும் தொழிலார்கள் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே போனது இவ்வாறு தொழிலார்களின் போராட்டம்  கடுமையாக நிர்வாகத்தால் ஒடுக்கப்பட்டது.

இதற்கிடையே இந்த அப்பட்டமான கடும் அடக்குமுறையை தொழிலாளர்கள்  மேல் ஏவி விட்ட ஆலையின் துணை பொது மேலாளர்  கடந்த 03 .03 .2011 அன்று காரில் செல்லும் போது  சிலர் அந்த காரை வழிமறித்து காரில் இருந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளரை  இறக்கி விட்டுவிட்டு காரை தீயிட்டு கொளுத்தியதால்  அந்த பொது மேலாளர் இறந்து விட்டார்இதை செய்தது அந்த ஆலையின் தொழிலாளர்களில் சிலர் தான் என்று காவல் துறையால் கூறப்படுகிறது

 அவ்வாறு  செய்வது காட்டுமிராண்டி தனம்  என்றாலும்  அவ்வாறு  செய்ய  தூண்டிய சூழ்நிலை என்ன என்று சிந்திக்க வேண்டியது மனித நேயம் உள்ள  உழைக்கும் வர்க்கத்தின் கடமையாகும். அந்த ஆலை தொழிலாளர்கள் மிகவும் குறைந்த சம்பளத்திற்கு குறைந்தது 12  மணி நேரம் வேலை செய்ய வேண்டியதும் ,அவர்களுக்கு சட்டப்படி உள்ள பணிநிரந்தரம், பணிப்பாதுகாப்பு ,சங்கம் அமைக்கும் உரிமை , பணி ஒய்வு மற்றும் குறைந்தபட்ச ஊதியம் என்ற  எந்த  உரிமையும் வழங்காமல்    அவர்களை ஓட்ட ஓட்ட சுரண்டுவதும் , அதை அவர்கள் சங்கம் அமைத்து தட்டி கேட்டல் அவர்களை பணியில் இருந்து தூக்கி எறிவதும் அவர்களுக்காக போராடுபவர்களையும் பணியில் இருந்தி துரத்துவதும் போன்ற நாகரிக சமூகத்தால் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதா மனிதாபிமானமற்ற செயல்களை இந்த அலை முதலாளிகள்  தினம்தோறும்  அரங்கேற்றுகின்றனர், அதை அரசும் ஆளும் வர்க்க நலன்களை தூக்கிபிடிக்கும் ஊடகங்களும்     கண்டுகொள்வதில்லை.   இன்று உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இது போன்ற  பிரச்னைகளுக்காக  போராடுவதை விட்டு வெகு காலமாகி விட்டது.

இது போன்ற  கையறு சூழ்நிலைகள் தான் தொழிலாளர்களை வன்முறை பாதைக்கு தள்ளுகிறது என்று சொன்னால் அது மிகையல்ல . இது இந்த அலை தொழிலாளர்களின் பரிதாப நிலை மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பொதுவான  சூழ்நிலையே  ஆகும். இந்த காட்டுமிராண்டி தனமான  முதாலளித்துவ  சுரண்டலை அந்த ஆலை தொழிலாளர்கள் மட்டுமே தங்களது தொழிற்சங்கங்கள் மூலம் மாற்றி அமைத்து விடமுடியாது . தொழிலாளர்களுக்கு  அவர்களிடம் உருவாகும் ஒற்றுமைதான் ஒரே ஆயுதம்  ஆகும், அதை உணர்ந்து  ஒரு வளிமையான ஒருங்கு திரண்ட, முனைப்பான நாடு தழுவிய முதுகெலும்புள்ள  தொழிற்சங்க அமைப்புகள்     மூலமே அதை நாம் தட்டி கேட்க முடியும். உழைக்கும் மக்களை ஒருங்கு திரட்டி அதை நாம் சாதிக்க உறுதி ஏற்போம்.

இந்த கட்டுரை inioru .com  வெளியானது   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்