புதன், 30 மார்ச், 2011

தொழிலாளர்களுக்கு துரோகம் செய்த எஐடியுசியும், ஒட்டுவேட்டையாடப்போகும் சி.பி.ஐ.யும்

நம்முள் பலருக்கு  காலையில் எழுந்தவுடன் தேனீர் அருந்தாவிட்டால் அந்த நாள் இனிமையான நாளாக  துவங்காதுஆனால்  அந்த  அந்த டீத்துகல்களுக்கு பின்னால்  லட்சக்கணக்கான தோட்டத்தொழிலாளர்களின் கடுமையான  உழைப்பும்,அத்தொழிலாளிகளை 
ஈவிரக்கமின்றி  சுரண்டி பெரும் லாபம் ஈட்டும் எஸ்டேட் முதலாளிகளின் கோரமுகமும், இடது சாரிகள் என்று கூறிக்கொண்டு ஒரு கையில் செம்பதாகையகை ஏந்திக்கொண்டு மற்றொரு கையில் அந்த எஸ்ட்டே முதலாளிகளோடு கைகோர்த்து கொண்டு, உழைப்பை தவிர எதுவும் அறியாத அந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு   துரோகம் இளைத்த எஐடியுஸியும் இருப்பது நம் கண் முன்னாள்    நிழலாடுகிறது.

அந்த மலைவாழ் தோட்டத் தொழிலாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் 150  ரூபாய்க்கு கீழ் தான்.அந்த சம்பளமும் கூட அந்த தொழிலார்களின் நீண்ட நாள் போராட்டத்தினால் கிடைத்ததுதான்.அதுவும் இன்று விலைவாசி உச்சத்தில் ஏறி நிற்கும் நிலையில் அந்த சம்பளத்தை வைத்து வாழ்க்கை நடத்துவதென்பது மிகவும் கடினம். ஒரு புறம் இயற்கைக்கெதிராக   தற்காப்பு போராட்டமும்  ,மறுபுறம்  அத்தோட்ட  முதலாளிகளின்   சுரண்டலுக்கு எதிரான போராட்டமுமாக வாழும்   சூழலில் தொழிலாளர்களின்   நலனை காக்க வேண்டிய செங்கொடி தாங்கிய தொழிற்சங்கமும் தங்களுக்கு துரோகம் இழைக்கும் என்று அத்தொழிலாளர்கள் கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார்கள். போராடி பெற்ற கூலியுயர்வை எஐடியுசி நிர்வாகிகள் சிலரின் சுயநலத்திற்காக அத்தோட்ட முதலாளிகளிடம் அடைமானம் வைத்தது, ஏற்கனவே வாங்கிய கூலியில் இருந்து ஐம்பது ரூபாயை குறைத்து சம்பள வெட்டு ஒப்பந்தில் கையெழுத்திட்டது.

இது போன்ற துரோகங்கள்  எஐடியுசிக்கு புதியது ஒன்றும் அல்லபாலுக்கும் காவலன் பூனைக்கும் தோழன் என்பது போல நாடுமுழுவதும் தொழிலார்களின் தோழனாக காட்டிக்கொண்டு முதலாளிகளோடு சேர்ந்துகொள்வது என்பது  அதன் நடைமுறையில் வழக்கமாக உள்ள ஓன்று தான். இந்த தொழிலாளர் துரோக ஒப்பந்தத்தால் பல தோட்டத்தொழிலார்கள் அச்சங்கத்திலிருந்து வெளியேறினார்கள்.  இப்போது அதே தோட்டத் தொழிலாளர்களிடம் குன்னூர் தொகுதியில்  ஓட்டுகேட்டு தொழிலாளர்களுக்கு   தாங்கள் செய்த பச்சை துரோகத்தின்   சாயல் சிறிதும் இன்றி சிபிஐ கட்சி  வளம்   வந்துகொண்டுள்ளது. அக்கட்சிக்கு எஸ்டேட் முதலாளிகள் வேண்டுமானால் தேர்தலுக்கு பண உதவி செய்ய முன்வரக்கூடும். வெற்றி பெற்று அந்த எஸ்டேட் முதாளிகளின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் வைக்க கூடும்.தாங்களும் முதலாளித்துவ ஆதரவு பெற்ற தொழிலாளர் விரோதிகள் தான் என்பதை வெளிப்படையாக   சொல்லிக்கொள்ளலாம் .ஆனால் அத்தொழிலாளர்களிடம் தாங்கள் இழந்த நற்பெயரை அக்கட்சி எந்த காலத்திலும் திரும்ப பெற முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்