அண்ணா ஹசாரே ஜான் லோக்பால் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசின் கடும் ஒடுக்குமுறைகளுக்கு நடுவே சாகும் வரை உண்ணாவிரத்தை மேற்கொண்டு வருகிறார். அவரின் இந்த போராட்டம் இந்தியாவின் இளைய தலைமுறையின் ஆன்மாவை தட்டியெழுப்பி போராட்ட களத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவர் மாற்றம் வேண்டும், மக்கள் போராட்டமே மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கூறி இளைஞர்களை போராட்டத்தில் களம் இறக்கி விடுகிறார். அவரின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்த போராட்டத்தை வலுவான மக்கள் இயக்கமாக மாற்றவேண்டிய கடமை எந்த வொரு உண்மையான கம்யூனிஸ்டு கட்சிக்கும் உண்டு . ஆனால் சி.பி.எம். சி.பி.ஐ. யோ மைதானங்களில் சட்டம் இயற்றமுடியாது என்று அண்ணா ஹசரேவை விமர்சனம் செய்வதோடு இந்திய பராளமன்றத்தை உயர்த்தி பிடிக்
கிறது.
கிறது.
அத்தோடு, தொண்டர்களை திசை திருப்புவதற்காக ஊழலில் பெயர்போன அ.தி.மு.க., தெலுங்கு தேசம், மற்றுமுள்ள ஊழல் கட்சிகளோடு கரம் கோர்த்து ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறது. பாராளமன்ற வாதத்தில் மூழ்கி ஊழல் முத்துகளை பொறுக்கி கொண்டிருக்கும் சி.பி.எம்., சி.பி.ஐ. மற்றுமுள்ள போலி கம்யூனிஸ்டு குழுக்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு ஊழலுக்கு எதிராக எழுந்துள்ள இந்த மாபெரும் இளைஞர்கள் எழுச்சியை வழிநடத்துவதும், ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வெற்றியடைய செய்வதும் நமது தலையாய கடமையாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக