(தோழர். சிப்தாஸ் பிறந்தது 5 ,ஆகஸ்ட் - 1923 மறைந்தது 5 ஆகஸ்ட் 1976 )
தோழர் சிப்தாஸ் கோஷ் அவர்கள் தான் இந்தியாவின் சூழ்நிலையை கச்சிதமாக கவனத்தில் எடுத்து இந்தியாவில் பின்பற்ற வேண்டிய சரியான மார்க்சிய நெறிகளை வகுத்தளித்தவர். சி.பி.எம்., சி.பி.ஐ., சி.பி.எம்.(எம்.எல்)போன்ற பல்வேறு கட்சிகள் எவ்வாறு தத்துவ , மற்றும் நடைமுறை கோளாறுகளை இளைத்தன , இந்தியாவில் முதலாளித்துவ எதிர்ப்பு சோஷலிச புரட்சியே சரியான தீர்வு என்று முன்வைத்து SUCIயை வலிமையான அமைப்பாக கட்டியமைத்தார்.
ஆனால் அவருக்கு பின் வந்த கட்சி தலைமை கட்சியை திருத்தல் வாத பாதைக்கு இட்டு சென்றது. அதனால் உண்மையான மார்க்சிய கட்சியை இந்தியாவில் உருவாக்க நினைத்த தோழர்கள் சுதந்திர போராட்ட வீரர், தோழர்.சங்கர் சிங் தலைமையில் பிரிந்து CWP (கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் ) என்ற அமைப்பை உருவாக்கி இந்தியா முழுவதும் பலமான கட்சியாக தோழர் சிப்தாஸ் கோஷ் அவர்களின் வழியில் வளர்க்க அயராது பாடுபட்டு வருகின்றனர். தோழர் சிப்தாஸ் கோஷ் அவர்களின் கம்யூனிஸ்ட் நடத்தை நெறிமுறைகள், கூட்டு சிந்தனை , கூட்டு தலைமை , போன்றவற்றை கட்சியில் கொண்டு வந்தது , போன்றவை அவர் மார்க்சிய கருவூலத்திற்கு அளித்த நன்கொடைகள் ஆகும். தோழர் சிப்தாஸ் கோஷ் உழைக்கும் மக்களை ஓன்று திரட்டும் அருமையான தத்துவத்தை வழங்கி சென்றுள்ளார் , அவரது வழியில் உழைக்கும் மக்களை ஓன்று திரட்டி பூலோக சொர்க்கமான சோஷலிச சமூகத்தை அமைப்பது மார்க்சியவாதிகளான நமது முழு முதல் கடமையாகும். ஆகஸ்ட் 5 , 1976 இல் மறைந்த தோழர். சிப்தாஸ்கோஷ் அவர்களின்நினைவை போற்றுவோம் , அவரின்
தத்துவார்த்த வழி நடப்போம்.
தோழர். சிப்தாஸ் குப்தாவின் படைப்புகள் தமிழில் கிடைக்குமா? புத்தகங்கள் எங்கு கிடைக்கும்?
பதிலளிநீக்குyes,please contact:K.Kathiresan, 9843464246 or advkathiresan@gmail.com
பதிலளிநீக்கு