திங்கள், 5 மார்ச், 2012

தனியார் மருத்துவமனை செவிலியர்களின் வேலைநிறுத்தம் வெல்லட்டும்


சென்னையில் உள்ள மிகப்பெரிய கார்பரேட் மருத்துவமனைகளான அப்பல்லோ,போர்ட்டிஸ் மலர், மியாட் , மெட்ராஸ் மெடிகல் மிசன் , குளோபல், பில்ராத் போன்ற மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் ஊதிய உயர்வு, ஓவர் டைம்மிற்கு இரண்டு மடங்கு ஊதியம் , கொத்தடிமைகளாக ஆக்கி வைத்துள்ள சட்டவிரோத ஒப்பந்த முறையை ஒழிப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள் , வேலை நிறுத்தத்திற்கு முன்பாகவே முறைபடி ஸ்ட்ரைக் நோட்டீஸ் நிர்வாகத்திற்கு அளித்துள்ளனர். 


ஆனால் நிர்வாகம் எந்த விதமான பேச்சுவார்த்தைக்கும் வரமால் இன்று வரை இந்த செவிலியர்கள் போராட்டத்தை ஒடுக்கி வருகிறது. ஹாஸ்டலில் தங்கியுள்ள செவிலியர்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தி வருகிறது. தண்ணீர், மற்றும் மின் இணைப்புகளை துண்டித்துள்ளது. அத்தோடு பல செவிலியர்களை நிரந்தர பணி நீக்கமும் , தற்காலிக பணி நீக்கமும் செய்துள்ளது. கோடி கோடியாக நோயாளிகளிடம் பணத்தை வாங்கி குவிக்கும் மருத்துவ நிர்வாகங்கள் தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு மிக குறைவான சம்பளத்தையே தருகின்றன. விலைவாசி உச்சத்தில் இருக்கும் இன்றைய சூழலில் இந்த குறைவான சம்பளத்தை வைத்து கொண்டு வாழ்க்கையை நடத்த முடியாது என்பதை பணவெறி பிடித்த இந்த நிறுவனங்கள் உணர்வதில்லை. இன்று வரை பேச்சு வார்த்தைக்கு வரமால் போராட்டத்தை முடக்குவதையே குறியாக கொண்டுள்ள இந்த நிறுவங்களின் தொழிலாளர் விரோத போக்கை அனைவரும் கண்டிப்பதோடு மக்கள் மத்தியில் இந்த நிறுவனங்களை அம்பலப்படுத்த வேண்டும். 

 சென்னையில் மட்டும் நடக்கும் இந்த செவிலியர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் எடுத்து செல்லப்பட வேண்டும். இதற்கு முன் முயற்சி எடுத்த 'ஆல் இந்திய பிரைவேட் நர்சஸ் அசோசியேசன் (AIPNA )' அமைப்பின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடர வேண்டும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்