சனி, 30 ஜூலை, 2011

ஊழல் நீதிபதி தினகரன் பதவி விலகல் : நீதித்துறையில் அங்கமாகிவிட்ட ஊழல்


 சமூகமெங்கும் ஊழல் , லஞ்சம் தலைவிரித்தாடுகிறது, சந்தர்ப்பம் கிடைக்கும் இடம் எல்லாம் ஊழல் புகுந்து விளையாடுகிறது. தட்டி கேட்பதற்கு யாரும் இல்லை என்பதால் தான் அனைத்தும் ஊழல் மயமாக இருக்கிறது. ஆளும் மன்மோகன் அரசு ஊழலின் உற்றுக்கண்ணாக காட்சியளிக்கிறது, ஸ்பெக்ட்ரம் ஊழல் , காமன்வெல்த் ஊழல் , எடியுரப்பா மற்றும் ரெட்டிகளின் சுரங்க ஊழல் , ஆதர்ஷ் ஊழல், தமிழகத்தில் நில அபகரிப்பு என்று தினம் தினம் ஊழல் செய்திகளே வலம் வந்து கொண்டுள்ளன. நிர்வாகமும், அரசியலும் இப்படி இருக்க உழைக்கும் மக்களின் கடைசி புகலிடமான நீதித்துறையோ  அதை விட படு மோசமாக இருக்கிறது. 
ஒரு பானை  சோற்றுக்கு ஒரு சோறு பதமாக சிக்கிம் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. தினகரன் பல்வேறு லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களில் சிக்கி தற்போது பதவி விலகியுள்ளார். வெளிப்படையாக அவர் ஊழல் புரிந்தது தெரியவந்தபோதும் ஆளும் வர்க்கம் அவரை காப்பாற்றவே முயற்சி செய்தது. கர்நாடக மாநில உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களின் தொடர் போராட்டம் காரணமாகவே அவர் செய்த ஊழலுக்கு விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. இப்போது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீது பல்வேறு குற்றசாட்டுகள் குவிந்து கொண்டுள்ளன,ஆனாலும் அவர் இப்போதும் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக உள்ளார் என்பது  வெட்கக் கேடான நிகழ்வாகும்.இவர்கள் மட்டுமல்ல, நீதித்துறையில் அடிமட்டத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை ஊழல் நீதிபதிகள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள் . ஆளும் வர்க்கத்திற்கு முழு ஆதரவு நல்கி வரும் இந்த நீதிபதிகளை ஆளும் அரசுகளும் காப்பாற்றவே முயற்சி செய்கின்றன, லோக்பால் மசோதாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை  அதற்கு உதாரணமாக கூறலாம். உழைக்கும் மக்களின் வலிமையான , தொடர் போராட்டங் களின் மூலமாக தான்  ஊழலை கொஞ்சமாவது குறைக்க முடியும் .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்