17 .07 .2011 அன்று நாகர்கோவில் , தக்கலை லைசியம் பள்ளியில் மார்க்சிய சிந்தனை மையம் நடத்தும் 5 வது படிப்பு நடைபெற்றது. கடந்த நான்கு வாரங்களாக மூத்த எழுத்தாளர் தோழர் .பொன்னீலன் அவர்களால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முழுவதுமாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இன்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மூத்த தொழிற்சங்கவாதியும் , கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்மின் தென்மாநிலங்களுக்கான பொது செயலாளருமான தோழர்.ஆனந்தன் அவர்கள் இந்த வகுப்பை நடத்தினார்.
இயக்கவியல் என்பதை நாம் சமூக நடைமுறையை வைத்து சொல்லிக்கொடுக்க வேண்டும். எல்லாம் எப்போதும் மாறிக்கொண்டே ,எப்போதும் இயங்கி கொண்டே இருக்கின்றன . ஏதோ ஒன்று தோன்றிக்கொண்டேயும், மறைந்து கொண்டேயும் இருக்கின்றது .இந்த மாறுகின்ற போக்கு ஒன்றே நிரந்தரமானது உலகம் என்பது பொருட்களின் சேர்க்கை அல்ல, நிகழ்ச்சி போக்குகள்,உறவுகள்,தொடர்புகள் ஆகியவற்றின் சேர்க்கையே. இயங்கியல் பொருள்முதல் வாதம் பற்றிய மார்க்ஸிய தத்துவத்திற்கு இரண்டு சிறப்பியல்புகள் உள்ளது . ஒன்று அதன் வர்க்க இயல்பு; மற்றொன்று நடைமுறை படுத்துவதற்கான அதன் சாத்திய பாடு எனவேதான் மார்ஸிய தத்துவம் எப்போதும் புதுமையானதாகவும் புரட்சிகரமானதாகவும் இருக்கிறது. இப்பிரபஞ்சம் உலகம் இயற்கை அனைத்திலும் உள்ள சகல பொருட்களின் இயக்கத்தையும் பரஸ்பர தொடர்புகளையும் புரிந்து கொள்வதையே இயங்கியல் கோட்பாடு முன்னிறுத்துகின்றது. ஒவ்வொரு பொருளினதும் இயக்கம், வளர்ச்சி போன்றவற்றை விவாதித்து அதன் சாரம்சமான உண்மைகளைத் தேடிக்கொள்வதை இயங்கியல் வற்புறுத்துகிறது.என்று இயங்கியல் பொருள்முதல்வாதம் குறித்து விரிவாக அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் விளக்கினார். இந்த படிப்பு வட்டத்தில் பல்வேறு இடதுசாரிகட்சிகளை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டார்கள் . தோழர். மகிழ்ச்சி மற்றும் தோழர்.போஸ் ஆகியோர் இந்த வகுப்பை முன் நின்று நடத்தினார்கள். இதன் அடுத்த கூட்டம் அடுத்த மாதம் மூன்றாவது ஞயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக