புதன், 21 மார்ச், 2012

தியாகி பகத்சிங் நினைவு ஸ்தூபி : சிவகாசி - மாதாங்கோவில் பட்டி


"விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்தியஉழைக்கும் மக்களும் அவர்தம் இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் வரை இந்தப் போர் தொடரும்தொடர வேண்டும்.அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளிகளாகஇருக்கலாம் அல்லது பிரிட்டிஷ் முதலாளிகள் மற்றும் இந்தியமுதலாளிகளின் கலப்பாக இருக்கலாம் அல்லது கலப்பற்ற இந்தியமுதலாளிகளாகக் கூட இருக்கலாம்அவர்கள் தங்களது நயவஞ்சகமானசுரண்டலை பிரிட்டிஷ் மற்றும் இந்தியக் கலப்பு அரசு இயந்திரத்தைக்கொண்டோ கலப்பற்ற இந்திய அரசு இயந்திரத்தைக் கொண்டோ நடத்தி வரலாம்.. இந்தப்போர் தொடர்ந்தே தீரும்.. அது ஒரு புதியஉத்வேகத்துடனும் பின்வாங்காத உறுதியுடனும் சோஷலிசக் குடியரசுநிறுவப்படும் வரையிலும் இந்தப்போர் எங்களோடுதொடங்கவுமில்லை;எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை.வரலாற்று நிகழ்வுப் போக்குகளினதும் இன்று நிலவும் சுழ்  நிலைகளினதும்தவிர்க்க முடியாத விளைவே இப்போர்".
                                                                                                                - தியாகி பகத்சிங்


பகத்சிங் லட்சியம் சோஷலிச சமூக அமைப்பு உருவாகும் வரை போராட்டம் நீடிக்க வேண்டும் என்பதே ஆகும். பகத்சிங்கின் லட்சிய பாதையை அடியொட்டி பயணிக்கும் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) மற்றும் மாணவர் ஜனநாயக இயக்கம் (SDM ) சார்பில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 23 அன்று பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு  சிவகாசி பகுதிகளில் நினைவு  ஸ்தூபி அமைத்து தியாகி பகத்சிங் கின் தியாகம் நினைவு கூறப்படுவதோடு, அவரின் லட்சியத்தையை நிறைவேற்றும் பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டும் விதமாக மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளப்படும் 

இந்த வருடம் மார்ச் 23   அன்று தியாகி பகத்சிங்கின் 81 வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகாசி தாலுகா, தமிழ்நாடு சிமண்ட்ஸ் ஆலங்குளத்தில் உள்ள  மாதங்கோவில் பட்டி யில்   தியாகி பகத்சிங்கின் நினைவு ஸ்தூபி  எழுப்பப் பட்டு   வீரவணக்கம் செலுத்தப்படும். 

தியாகி பகத்சிங் நினைவு ஸ்தூபி

இடம் :  மாதாங்கோவில் பட்டி ,தமிழ்நாடு சிமண்ட்ஸ் ஆலங்குளம் ,  சிவகாசி தாலுகா, 

நாள் : 23 .03 .2012  
...............................................................................................................................................
கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ),
 மாணவர் ஜனநாயக இயக்கம் (SDM ) ,
விருதுநகர் மாவட்டம். 

தொடர்பிற்கு:  
த. செல்வகுமார் -8940581750கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்