வியாழன், 8 மார்ச், 2012

அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம் , பேரணி

மும்பை , கொல்கத்தா , கேரளாவில் தனியார் மருத்துவ மனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் கோரி தொடர்ந்து வேலைநிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அந்த போராட்ட தீ சென்னையில் தனியார் மருத்துவ மனைகளில் பணிபுரியும் செவிலியர்களையும் பற்றிக் கொண்டது. மெட்ராஸ் மெடிகல் மிசன் , மலர், அப்பல்லோ ஆகிய மருத்துவ மனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். மெட்ராஸ் மெடிகல் மிசன் , மலர் மருத்துவ மனைகளில் நிர்வாகத்திற்கும் ,தொழிலாளர்களுக்கும் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து செவிலியர்கள் வேலைக்கு திரும்பியுள்ளனர்.(நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளில் பாதிக்கும் மேல் ஏற்றுக்கொண்டது )  


ஆனால் அப்பல்லோ நிர்வாகம் இன்னும் செவிலியர்களின் கோரிக்கைகளான சம்பள உயர்வு, பான்ட் முறை ஒழிக்கப்பட வேண்டும், 8 மணி நேர வேலை , ஆகிய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாமல் செவிலியர்களின் போராட்டத்தை பல்வேறு வழிகளில் ஒடுக்கி வருகிறது. தமிழக அரசு அப்பல்லோ நிர்வாகத்திற்கு ஆதரவாக உள்ளது.  ஆனால் நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு அடிபணியாமல் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி  தொடர்ந்து 6 நாள்களாக 800 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொடர் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். 07 .03 .2012 அன்று மெமோரியல் ஹாலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 08 .03 .2012 அன்று ராஜாரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் ஊர்வலத்தை அப்பல்லோ நிர்வாகத்தை கண்டித்து நடத்தினர். பல்வேறு தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நிர்வாகத்திற்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடும் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ள தொழிலாளி வர்க்கம் தொழிற்சங்க உரிமைகள் எதையும் கோராமல் அடங்கி கிடந்த நிலை மாறி போர்குணம் கொண்டு எழுந்துள்ளது. இந்த செவிலியர்கள போராட்டங்கள் அனைத்திற்கும் சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் (COITU) தனது முழு ஆதரவினை அளித்துள்ளது. வெல்லட்டும் செவிலியர்கள் போராட்டம், ஓங்குக தொழிலாளர் ஒற்றுமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்