திங்கள், 20 ஜூன், 2011

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - இன்றைய அத்தியாவசிய தேவை - நாகர் கோவில் கூட்டம்


நாகர் கோவிலில் மார்க்சிய சிந்தனை மையம் சார்ப்பில்  4வது மார்க்சிய படிப்பு வட்டம் சிறப்பாக நடைபெற்றது. 50 க்கும்  மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . கடந்த மூன்று கூட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியறிக்கையின் 4 பாகங்கள் வாசிக்கப்பட்டன. 

மூத்த எழுத்தாளர் தோழர்.பொன்னீலன் அவர்கள் முந்தைய கூட்டங்களில்  வாசிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியறிக்கையின் அனைத்து பாகங்களையும் தொகுப்பாக எடுத்துரைத்தார்.  அத்தோடு தற்போது நடைபெற்று வரும் சுரண்டல் சமூக அமைப்புமுறையை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை அன்றே தெளிவாக எடுத்துரைத்ததாகவும், ஏங்கல்ஸ்,   லெனின் , ஸ்டாலின் , மாவோ போன்றோர் அதை மேலும் செழுமைப்படுத்தினர் என்றும் எடுத்துரைத்தார்.

கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ்  பிளாட்பாரம் (CWP) தென் மாநிலங்களுக்கான பொது செயலாளர்  தோழர்.ஆனந்தன் அவர்கள் தனது உரையில், இன்றும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எவ்வாறு மெத்த பொருத்தமாக உள்ளது என்று எடுத்துரைத்தார் அத்தோடு இன்று இந்தியாவில் முதலாளித்துவம் எவ்வாறு ஏகாதிபத்திய கூறுகளோடு வளர்ந்துள்ளது, என்றும் மூன்றம் உலக நாடுகளை இந்தியா எப்படி ஆட்டுவிக்கிறது, என்றும் அது அமெரிக்காவின் இளைய பங்காளியாக உலகம் முழுவதும் உள்ள பல தொழில் நிறுவனங்களை வாங்கி குவிக்கிறது என்றும் அமெரிக்க , பிரிட்டன் போன்ற நாடுகள் பொருளாதார தேக்க நிலையிலும் தவித்த போதும் இந்தியா ,சீனா, ரசியா , பிரேசில் போன்ற நாடுகள் எவ்வாறு இன்று மாபெரும் மூலதன வலுவோடு பல நாடுகளிலும் பல பெரிய நிறுவனங்களை வங்கி குவிக்கின்றன என்றும்  எடுத்துரைத்தார்.

ஜாதி என்பது இந்தியாவில் இன்று வளரும் தன்மையை இழந்து விட்டது  முதலாளி ,தொழிலாளி என்ற வர்க்க வேறுபாடு மட்டுமே  பிரதானமாக இன்று உள்ளது என்பதை அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

சம கால நிகழ்வுகளான ஸ்பெயின் , லத்தின் அமெரிக்க , போன்ற நாடுகளில் மக்கள் கிளர்ச்சிகள்  குறித்த  கருத்தரங்கம் ஒன்றை நடத்துவது என்றும் அதற்கு பேர் கொண்ட குழு ஒன்றும் இந்த கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.

அத்தோடு ,அடுத்த படிப்பு வட்டத்தில் ஜூலை  மாதம் மூன்றாவது ஞயிற்றுக்கிழமை அன்று இயக்கவியல் பொருள் முதல் வாதம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்வது என்றும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்