புதன், 15 ஜூன், 2011

சமச்சீர் பாடத்திட்டம்: ஒரு சின்ன யோசனை


சமச்சீர் பாடத்திட்டத்தின் மூலம் படிப்படியாக சமச்சீர் கல்வியைக் கொண்டுவந்துவிடலாம் என்று சில இடதுசாரிகள் சொல்கிறார்கள். ஆனால் சமச்சீர் அற்ற ஒரு சமூகத்தில், சமூகத்தை சமச்சீர் ஆக்காமல் கல்வியில்மட்டும் சமச்சீரைக் கொண்டுவந்துவிட முடியும் என்பது ஓர் ஏமாற்று வேலை என்று உண்மையான இடதுசாரிகளுக்குத் தெரியும். இது ஒருபக்கம் இருக்கட்டும்.

இப்போது சமச்சீர் என்றபெயரில் மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தினை அரசுப்பள்ளிப் பாடத்திட்டம் அளவிற்குத் தரம் குறைத்து பாடத்திட்டத்தை சமச்சீர் ஆக்கியுள்ளனர். இதற்குப் பதிலாக அரசுப்பள்ளிப் பாடத்திட்டத்தை  மெட்ரிகுலேசன் பாடத்திட்டம் அளவிற்குத் தரம் உயர்த்தி ஒரேபாடத்திட்டமாகக் கொண்டுவரலாமே. நமக்குத் தேவை சமச்சீர் பாடத்திட்டம்தானே.
அப்படிச்செய்தால் மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இப்போதிருக்கும் தரத்தினை இழக்க மாட்டார்கள்; அதேசமயம் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு இப்போதிருப்பதைக் காட்டிலும் தரமான பாடத்திட்டம் கிடைக்கும். அத‌ற்கு அடுத்து நம் வேலை அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளின் உட்கட்டமைப்பையும் ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்துமாறு கோரிப் போராடுவதாகத்தான் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்